சந்தேகமே இல்லை! விஜய் தற்குறிதான்! தலைக்கனமேறிய அசல் சங்கிதான்!

தான் ஒரு 'முதல்வர்' என்ற பொறுப்பையே மறந்து 'என் வாயில நல்லா வருது... வேணாமுன்னு பாக்குறேன்...' என்று தரம் கெட்ட தனமாக - அருவருக்கத் தகுந்த - 'நரகல் நடை'பாணியில் திமுகவை நோக்கி 'சாக்கடை'யைக் கக்கினார்.

0

“(சினிமாவப்)
பார்த்தியா..
ரசிச்சியா..
அத்தோட கூத்தாடிய விட்டுப் போய்ட்டே இரு.

அவன் அடுத்த கூத்துக்கு ரெடியாகிட்டே இருப்பான்.
அவன் ‘உலகத்துக்குள்ள’ நுழைஞ்சி பாக்காதே. அது ரொம்ப அசிங்கம்.
அவனை அரசியல்ல கூப்பிட்டு அழிஞ்சி போகாதே. நீ அவனுக்கு காசு கொடுக்குற. அவன் நடிக்கிறான்.‌ அவ்வளவுதான். உன் வேலைக்காரன் அவன்.‌ அந்த வேலைக்காரனை தலைவன்னு கொண்டாடாதே. அது அசிங்கம்; அவமானம்!..”

–எனச் சினிமா கூத்தாடிகளைப் பற்றி விஜய் பிறப்பதற்கு முன்பே பெரியாரிஸ்ட்டாக வாழ்ந்து மறைந்த – நடிகைவேள் எம் ஆர் ராதா உரைத்த உண்மை வார்த்தைகள் இவை.

இந்த வார்த்தைகள் அன்றைய காலக் கட்டத்தில் எம்ஜிஆரை தூக்கி வைத்துக் கொண்டாடிய ரசிக மனோபாவம் கொண்ட இளைஞர்களுக்காக – மக்க ளுக்காகக் கூறப்பட்ட வார்த்தைகளாகும். ஆனால் இன்றும் அச்சு அசலாக அப்படியே சதவீதம்
நடிகர் விஜய்க்கும்கூடப் பொருந்தக்கூடியதாகவும், தமிழ்நாட்டு மக்களின் கவர்ச்சி மோக மாயையிலிருந்து விடுபடாமல் சிக்கிச் சின்ன பின்னமாகும் அவலம் தொடர்கின்றதே என அனைவரையும் உணர வைக்கிறது;உறைய வைக்கிறது; சிந்திக்கத் தூண்டுகிறது.

தற்போது தமிழ்நாட்டில் நடப்பது என்ன?

தந்தை பெரியார், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள், அண்ணா, காமராசர், அம்பேத்கர்… போன்றோரின் படங்களை மட்டும் ‘பின்புலமாக’த் தொங்க விட்டுக் கொண்டு கட்சி ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலியை அபகரித்துக் கொண்டிருக்கிறார் சினிமா கவர்ச்சி மோக – பொறுக்கி அரசியல் தலைவன் விஜய்.

எந்தத் தலைவர்களைத் தமது முன்னோடிகளாகக் காண்பித்துக் கொண்டு விஜய் பவனி வருகிறாரோ, அந்த தலைவர்களின் கொள்கை கோட்பாடுகள் – வரலாறுகள் எதுவும் அவருக்குத் தெரியாது என்பது மட்டுமல்ல; அவர்களின் கொள்கை கோட்பாடுகள் அனைத்திற்கும் நேர் விரோதமான கொள்கைகளையும், நடைமுறைகளையும் கொண்டு இயங்கக் கூடிய ‘பக்கா’ சங்கி – அரசியல் ஞான சூனியம் – தற்குறி… என்பதனை ஒவ்வொரு வார்த்தையிலும், ஒவ்வொரு செயலிலும் நிலைநாட்டி வருகிறார்.

பாசிச பாஜக பெற்றெடுத்த தவெக!

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ்-பாஜக காலூன்ற முடியாத சூழல் ஒவ்வொரு தேர்தலிலும் சங்கிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தந்ததை நாம் அறிவோம். பார்ப்பன சனாதனத்திற்கு எதிராக குறைந்தபட்சம் திராவிட அரசியல், சமூக நீதி பேசுகின்ற திமுக-வை, ஒன்றிய அரசின் நாசகரத் திட்டங்களுக்குக் கடிவாளம் போடுகின்ற திமுகவை – தொகுதி மறு வரையறை மசோதாவை தோற்கடிக்கப் பிரதானக் காரணமான திமுக-வை, ஒன்றிய அரசுக்கு அதிக குடைச்சல் தரும் திமுக-வை ஒழித்துக் கட்டியே தீர்வது என்பது பாஜகவின் நீண்ட காலத் திட்டம். மேலும் “தமிழ்நாடு கழகங்கள் இல்லாத மாநிலமாக மாறியே தீர வேண்டும்” என்ற வைராக்கியத்தில் காவிக் கூட்டம் வெகு காலமாக அரும்பாடுபட்டு வந்தது.

மேலும் படிக்க: தவெகவின் தேர்தல் வெற்றிக்கு அடிப்படை காட்சி போதைக்கு அடிமையாகியுள்ள தமிழ் சமூகத்தின் தோல்வியே!

தங்கள் இயக்கங்களைக் கொண்டு, அக்கனவை நிறைவேற்ற முடியாது என்பதையும் உணர்ந்தே இருந்தது பாஜக. அப்படியானால் அந்தக் கனவை எப்படி நிறைவேற்றுவது என்ற நீண்டதொரு சதிப் பின்னலில் – வருமான வரித்துறை வீசிய வலையில் சிக்கியவரே வரி ஏய்ப்பு, வருமானத்திற்கு அதிகமாக கருப்பு பணமும் கொள்ளையடித்த பல்லாயிரம் கோடி சேர்ப்பு (இவர் ஊழல் ஒழிப்பு நாயகனாம்)
…இவர்தான் கவர்ச்சி மோக நடிகர் தற்குறி ‘அரசியல்வாதி’ விஜய்.

அந்த அடிப்படையில் விஜய் ஏற்படுத்திக் கொண்டி ருக்கும் சினிமா மோக பொறுக்கி அரசியல் – ரசிக மனோபாவம் கொண்ட இளைஞர்களின் வாக்குகளை ஒருங்கிணைப்பது, சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரித்தெடுப்பது, RSS-பாஜக,தேர்தல் ஆணையம், SIR, EVM, VVPAT இவற்றின் மூலமாக காவிக் கூட்டத்தின்
வளமையான தில்லு முல்லு மோசடிகளை அரங்கேற்றுவது… அதன் மூலம் பாஜகவின் அஜெண்டாவை நிறைவேற்றுவது என்பது பாசிசக் காவிக் கூட்டத்தின்
சதித் திட்டம். முதலில் கழக ஆட்சியை இறக்குவது; அதன் பின்னர் குட்டித் தலைவர்களின் ஆட்சிகளை/கட்சிகளை விழுங்குவது இதுவே பாசிச பாஜகவின் திட்டம். அந்த அடிப்படையில் பாஜக பெற்றெடுத்ததே தவெக!

முழுவதும் நிர்வாணமாகி விடக் கூடாதே என்பதற்காகவே ‘பாஜக கொள்கை எதிரி; திமுக அரசியல் எதிரி’ என்று வாய்ஜாலம் பேசி கொள்கை எதிரியை பற்றி ஒரு வார்த்தை கூட உதிர்க்காமல், திமுகவிற்கு எதிராக மட்டும் பொய்கள், புனைச் சுருட்டுகள், அரை உண்மைகள்… இவற்றை பல்வேறு வகையான நவீன தொழில் நுட்ப ஊடகங்கள் மூலமாகவும், தமதுத் திரைப்பட மவுசுகள் மூலமாகவும் இருபால் இளசுகளைச் சுண்டி இழுத்து தவெக-வின் பரப்புரை திமுக விற்கு எதிராக வீச்சாக முன்னெடுக்கப்பட்டது.

நிறைவேற்றப்படவே முடியாத எண்ணற்ற கவர்ச்சி வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து அதன் விளைவாக இன்று 108 இடங்களில் வென்றதோடு, குதிரை பேர அரசியல் வணிகத்திலும் ஈடுபட்டு வேறு கூட்டணிகளிலிருந்த கட்சிகளை பிரித்தெடுத்தும், வணிக அரசியலை முன்னெடுத்தும் முதல்வர் நாற்காலியையும் அபகரித்து சட்டமன்றத்தில் பெரும்பான்மையையும் ‘நிரூபித்துக் கொண்டார்’ அரசியல் தற்குறி விஜய்.

விஜய் ஆட்சியை அபகரித்த விதம் குறித்தும், இன்ன பிற தில்லு முல்லு மோசடிகள்,
‘முற்போக்காளர்’களின் பிற்போக்குத்தனங்கள் குறித்தும் ஏற்கனவே பல கட்டுரைகள் இதே தளத்தில் வெளிவந்துள்ளன. அவற்றை விவரிப்பின் இன்னும் நீளும் என்பதால்
அப்பொருளை இத்துடன் முடித்துக் கொள்ளலாம்.

தேர்தல் வாய்ச்சவடாலும்!

தற்குறி ஆட்சியின் அவலமும்!

திமுக ஆட்சியில்..

*பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை.

*எங்கும் எதிலும் வியாபித்திருக்கும் கொள்ளை- ஊழல் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகின்றன.

*நாடெங்கும் படுகொலைகள் நடந்த வண்ணம் உள்ளன! சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுபோய்விட்டது!

*குடும்ப ஆட்சியே காலா காலமும் தொடர்கிறது.

*மன்னர் பரம்பரை வாழ்வு கோலோச்சுகிறது.

*திமுகவை இன்னும் ஆள அனுமதித்தால் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வு பறி
போகும்…

*எனவே மாற்றம் வேண்டும்; மாற்று வேண்டும்…!

என்று ஏக குற்றச்சாட்டுகளை தேர்தல் பரப்புரைகளில் அள்ளிக் கொட்டினார் விஜய். ஆனால் அரசியல் எதிரி பாஜக குறித்து வாய் திறக்காமல் பிளாஸ்திரி போட்டு ஒட்டிக்கொண்டார்.

திருச்சியில் ஜூன் 1 நடைபெற்ற நன்றி அறிவிப்புக் கூட்டத்திலும், திமுக வை சாடுவதில் மட்டுமே குறியாக இருந்தார். தற்போது தமது ஆட்சி தான்
நடைபெறுகிறது; தற்போது தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்துச் சம்பவங்
களுக்கும் – குற்றச் செயல்களுக்கும் தமது அரசே பொறுப்பேற்க வேண்டும்… என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் திருச்சி பொதுக் கூட்டத்தில் பேசிய விஜய், தலைக்கனம், திமிர், கொழுப்பு, தன்னகங்காரம்… அனைத்தையும் ஒருங்கே பெற்று பேசியிருக்கிறார்.

மேலும் படிக்க: கரூர் படுகொலை: கட்டுப்பாடற்ற ‘தொண்டர்களும்’ நேர்மையாக பொறுப்பேற்காத ’தலைவனும்’

விஜய் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நாள் முதல், கொடுத்த வாக்குறுதிகள் எவற்றையும் நிறைவேற்ற வக்கில்லை! விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டதால் விவசாயிகளும் அதன் சங்கங்களும் தமிழ்நாடு முழுமையும் போராட்டக் களம் காண்கின்றனர்!

எண்ணற்ற உழைப்பாளர் மக்களின் வெடித்தெழும் போராட்டங்கள் நாள்தோறும் நடைபெறுகின்றன. நாள்தோறும் சிறுமிகள்/ பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகின்றனர்! தவெக ரவுடிகளும், தொழில் முறை குற்றவாளிகளும் குற்றச் சம்பவங்களில் நேரடியாக ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்! கொலை கொள்ளை சம்பவங்கள் தொடர்கின்றன.

இப்படிப்பட்ட அக்கிரமங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் தற்போதைய முதல்வர் விஜய்க்கும் தவெகக்கும் அரசுக்கு இருக்கிறது. அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் அரசை நோக்கிய விமர்சனங்கள் பாயவே செய்யும். பல்வேறு கட்சித் தலைவர்கள் விமர்சிக்கவே செய்வார்கள்.

நாம் அறிந்த வகையில் சட்டமன்றத்தில், ‘அதிமுகவை உடைக்க சிவி சண்முகம் வீட்டிற்கு சோபா சென்றது; பின்னாலேயே விஜய் சென்றது; குதிரை பேரம், சனாதன ஒழிப்பு’ – இவைதான் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தவெக குறித்து சட்டமன்றத்தில் விமர்சித்தது.

‘மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை அனைத்தையும் நிறைவேற்ற முடியாவிட்டாலும் கடந்த ஆட்சியில் நடைமுறையில் இருக்கும் திட்டங்களை மாற்றாமல் நீடிக்குமாறும், கஜானா காலி; 10.5 லட்சம் கடன் என்ற கதைக்கொவ்வாத வாதங்களை முன்வைக்காமல் நுண்ணறிவோடு கற்றுத் தெளிவடைந்து ஆட்சி செய்யுமாறு…’ முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.

இவற்றைத் தவிர்த்து திமுக தரப்பில் பாரதூரமான விமர்சனங்கள் விஜய் ஆட்சிக்கு எதிராக இன்னும் வெளிப்படுத்தப்படவே இல்லை. அவர்கள் ஆறு மாதங்கள் காத்திருக்க தயாராகவே இருக்கிறார்கள் என்று தான் கருதத் தோன்றுகிறது. பொதுவான பாலியல் வல்லுறவு கொலை குற்ற சம்பவங்கள் தொடர்பாக
‘சிங்கப்பெண் அதிரடிப்படை புகழ்’ விஜய், பல்வேறு முனைகளில் இருந்தும் வருகின்ற விமர்சனங்களைச் சந்தித்தே ஆக வேண்டும்.

ஆனால் அவர் திருச்சியில் என்ன பேசுகிறார்?

ஆறு மாத காலம் அவகாசம் தருவதாகச் சொன்னார்கள்; ஆனால் இப்பொழுதே குற்றம் சுமத்துகிறார்கள்; உங்களைத் தெரியாதா? ஏன் உங்களை மக்கள் விரட்டி அடித்தார்கள்? தமிழ்நாடு முழுவதும் அலைந்தாலும், கருத்துச் சேகரிப்புகள் செய்தாலும் இனி நீங்கள் மீண்டு வரப் போவதில்லை. மக்களே, சற்றுப் பொறுத்துக் கொள்ளுங்கள்; கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் இந்த விஜய் நிறைவேற்றுவான்; நான் உங்களைப் பார்த்துக் கொள்கிறேன்! நீங்கள் அவர்களைப்
(திமுக) பார்த்துக் கொள்ளுங்கள்…’

இப்படி எல்லாம் ஏக வசனத்தை அள்ளி வீசிவிட்டு, தான் ஒரு ‘முதல்வர்’ என்ற பொறுப்பையே மறந்து ‘என் வாயில நல்லா வருது… வேணாமுன்னு பாக்குறேன்…’ என்று தரம் கெட்ட தனமாக – அருவருக்கத் தகுந்த – ‘நரகல் நடை’பாணியில் திமுகவை நோக்கி ‘சாக்கடை’யைக் கக்கினார்.

மேலும் படிக்க: அரங்கேறும் ஆபாசக் குதிரைப் பேர அரசியல்!

ஆனால் அன்றும் சரி! விஜய் வாயிலிருந்து சரியான அறிவு பூர்வமான சொற்களே வெளிப்படுவதில்லை. திரைப்படப் பாணியிலேயே அவரது நடவடிக்கைகள் அனைத்தும் அரங்கேறுகின்றன. அவரது திருச்சி உரையை காது கொடுத்து கேட்ட அனைவரும் பெருமளவில் முகம் சுழிக்கின்றனர். முழுதும் அவரது உரை ‘நரகல் நடை’ வாய்ந்ததாக அமைந்திருந்தது. காரணம் அவர் முழுமையான சினிமா மோக பொறுக்கி அரசியல் தன்மை கொண்ட தற்குறி தான் என்பதனை அனைத்து விதத்திலும் மெய்ப்பித்துக் கொண்டே இருக்கிறார். இப்படிப்பட்டவரிடம் மக்கள் நலன் சார்ந்த வார்த்தைப் பிரயோகங்களை நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

விஜய் பேச மறந்ததும், செய்ய மறந்ததும்!

*தமிழ்நாட்டில் அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு சம்பந்தமில்லாத வந்தே மாதரம் என்ற சமஸ்கிருதப் பாடல் முதல் நிலைக்கு இழுத்துவரப்பட்டதை எதிர்த்துக் களமாடாமல், வாய் திறந்து எதிர்ப்பு தெரிவிக்காமல், ‘பரம ஏழை’யான முதல்வர் விஜய், சில் கோடி ரூபாய் செலவில்
டெல்லி சென்று பத்து நிமிடம் பிரதமரை சந்தித்து இதற்காக வெட்கமின்றி கோரிக்கை மனுக் கொடுத்து விட்டு வந்துள்ளது.

*பி.எம்.ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து கையொப்பமிட ஒன்றிய அரசிடமிருந்து வரப்பெற்ற மும்மொழித் திட்ட திணிப்புக்கு எதிராக வாய் திறக்காமல் இருப்பது.

*மாணவ மாணவியரைத் தொடர்ச்சியாக தற்கொலைக்குத் தள்ளும் ‘நீட்’-டை ஒழிக்க குரல் எழுப்பாமலிருப்பது.

*இந்தி சமஸ்கிருதத் திணிப்பிற்கு எதிர்வினையாற்றாதது.

*மாநில அரசுக்கு வரவேண்டிய நிதிப் பங்கீடு குறித்து வாய் திறந்து பேசாமல் இருப்பது.

*பேரிடர் நிதி நிலுவை பங்கீட்டுத் தொகையைக் போராடிப் பெறாமல் வாய் மூடி மௌனமாயிருப்பது.

*மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை நிறைவேற்ற கோரிக்கை விடாமல் இருப்பது.

*மதுரை எய்ம்ஸ் குறித்து வாய் திறக்காமல் இருப்பது.

*கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை தாமதமின்றி வெளிப்படுத்தக் கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தாமல் இருப்பது.

*ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவருக்கு ‘காவி’ச்சாயம் அடித்ததை
கண்டிக்காமல் இருப்பது.

*டொனால்ட் டிரம்புகளாலும், அதன் அடிவருடி நெதன்யாகுகளாலும் ஈரானுக்கு எதிரான கடும் போர்ச்சூழலை ஏற்படுத்தியதன் விளைவாக, எரி பொருள் தட்டுப்பாடும், விலைவாசி உயர்வும் மக்களை கடுமையாக வதைக் கின்ற பொழுதும்
இதற்காக ட்ரம்ப் – மோடி கும்பலைக் கண்டிக்கத் தகுதியற்றிருப்பது.

*சாதி தீண்டாமை ஒழிப்பு குறித்து வாய் திறக்காமல் இருப்பது.

*ஆணவப் படுகொலைகள் நிரந்தரமாகத் தடுக்கப்பட குரல் எழுப்பாமலிருப்பது; அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் இருப்பது.

*பெரியாரை – அண்ணாவை தலைவர்களாக ஏற்றுக்கொண்டு விட்டு பார்ப்பன சனாதனத்தை ஒழித்துக் கட்ட எவ்வித திட்டமும் இல்லாமல் இருப்பது.

*அனைத்து கோவில்களிலும் தகுதி பெற்ற அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்க எவ்வித நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்ற திட்டத்தை அறிவிக்காமல் இருப்பது.

*ஒரே நாடு – ஒரே தேர்தல் – ஒரே மொழி – ஒரே கலாச்சாரம் – ஒரே மதம்…
என்ற பாணியில் கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை நிலைநாட்டத் துடிக்கும் பாஜக குறித்து வாய் திறக்கவே முயற்சிக்காமலிருப்பது.

*திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்றுதல் என்ற சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் உள்ளிட்ட இஸ்லாமியர்களுக்கு குந்தகம் விளைவிக்க எத்தனிக்கும் காவிக் கூட்டக் கலவரக்காரர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வாய் திறந்து பேசாமல் இருப்பது.

*மணிப்பூர் உட்பட வட மாநிலங்களில் கிறித்தவ தேவாலயங்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்படுவது – மசூதிகள் தர்காக்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்படுவது குறித்து வாய் திறக்காமல் மௌனம் காப்பது.

*நாட்டு நடப்பு குறித்த ஊடகவியலாளர்கள் சந்திப்பையே முழுமையாகப் புறக்கணிப்பது….

-இவை போன்ற எண்ணற்ற மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள் எது குறித்தும் திருச்சி கூட்டத்திலே வீராவேசமாக சினிமா பாணியில் பேச முற்படவில்லை விஜய். கருத்து கூறவும் விரும்பவில்லை. எள்ளின் முனையளவும் துணிச்சல் இல்லை.

‘என்ன அமித்ஷா அங்கிள்!’; என்ன மோடி சார், என்ன நிம்மி மம்மி… தமிழ்நாட்டு மக்கள் என்ன இளித்தவாயகளா? எங்கள் கோரிக்கைகளை ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்ற முன்வரா விட்டால் நான் என்ன செய்வேன் என்பது எனக்கே தெரியாது..’ என்றெல்லாம் ‘தனது திரைப்பட வசன பாணி’யில் திருச்சி பொதுக் கூட்டத்தில் விஜய்யால் கர்ஜிக்க முடியவில்லையே, ஏன்?

மேலும் படிக்க: தமிழகத்தில் தவெக ஆட்சி: மூன்றாம் இடத்தில் தமிழ்!

ஏனெனில் விஜய் ஒரு காரியக்காரக் கோமாளி! மக்களின் நலனோ, அவர்களின் பாதுகாப்போ அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை. தன்னலம் மட்டுமே அவரது பொது நலம் என்பது கடந்த கால அவரது பல்வேறு நடவடிக்கைகள் மூலமே கண்டு உணர்ந்து விட்டோம்!

அதற்கு எடுத்துக்காட்டு கரூரில் 41 பேர் விஜய்யாலேயே செத்து மடிந்த போதும், கெட்டிக்காரத்தனமாக உடனடியாக விமானம் ஏறி சென்னை பனையூர் பங்களாவில் ஓடி ஒளிந்து கொண்டவர் தானே விஜய்.

*பெண்களுக்கு மாதம் ரூ.2500/- உதவித்தொகை என அறிவித்தார்.

*ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் இலவசம் என அறிவித்தார்.

*வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.4000/- நிதி உதவி அளிக்கப்படும் என அறிவித்தார்.

*மகளிர்க்கு தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகளில் இலவசப் பயணம் என அறிவித்தார்.

*பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டு கிராம் தங்கம் மோதிரம் என அறிவித்தார்.

*திருமணமாகும் ஒவ்வொரு மணப்பெண்ணுக்கும் ஒரு சவரன் சங்கிலியும் அண்ணன் சீரும் இலவசம் என அறிவித்தார்.

*அனைத்து விவசாயக் கடன்களும் ரத்து செய்யப்படும் என அறிவித்துவிட்டு தற்போது 50 ஆயிரம் ரூபாய் வரை பயிர்க் கடன் பெற்றோருக்கு மட்டும்
தள்ளுபடி என அறிவிப்பு செய்து விவசாயிகள் வயிற்றில் அடித்துள்ளார்.

*இன்னும் நிறைவேற்றப்படவே முடியாத பல சலுகைகளை அறிவித்தார்.

ஆனால் இவை எவற்றையும் நிறைவேற்றாமல், திமுக ஆட்சி மீது விஜய் சுமத்திய குற்றச்சாட்டு சம்பவங்கள் அனைத்தும் விஜய் பதவி ஏற்ற பின் ஒரே மாதத்திற்குள் எண்ணற்ற பாலியல் வன்புணர்வு குற்றங்கள், கொலைக் குற்றங்கள், போலீஸ் அத்துமீறல்கள், தவெக-வினரின் அராஜக ரவுடிச பாணியிலான குற்றச் சம்பவங்கள்
நடைபெறாத நாளே இல்லை. இவர் தூய்மை பற்றியும், பொது ஒழுங்கு பற்றியும், சிங்கப்பெண் அதிரடிப்படை பற்றியும் வாய் திறந்து பேசுவதற்கு எவ்வித தகுதி மற்றவராக திகழ்கிறார்.

காரணம் எதுபற்றியும் அவருக்கு எதுவும் தெரியாத தற்குறி என்பதே! இதிலே தம்மை தற்குறி… தெற்குறி… என்று கூறுகிறார்கள் என்று வேறு குறைபட்டுக் கொள்கிறார்.
வெட்கக்கேடு! மானக்கேடு!

எனவே, அரசியலற்ற அரசியல் கோமாளி விஜய் ஆட்சியில் சினிமா கவர்ச்சி மோக பிம்பத்தில் மூழ்கிக் கிடக்கும் மக்களுக்கு எந்த விதமான உரிமையோ சலுகையோ விஜய் ஆட்சியில் நிறைவேற போவதில்லை. காரணம் அவருக்கு அரசியல் என்றால் என்ன என்பதே தெரியாது.

ட்ரம்புக்கு எப்படி நெதன்யாகுகளோ, இந்தியாவில் மோடிக்கு, விஜய் இன்னபிற
அடிமைக் கும்பல் மக்கள் விரோதப் பணிகளை ஆற்ற தயாராகவே இருக்கின்றன.

எனவே, தமிழ்நாட்டு மக்களை சினிமா மோகத்திலிருந்தும் – பாசிசத்
திற்கும், பாயாசத்திற்கும் வேறுபாடு தெரியாத ஒரு கோமாளி யிடமிருந்தும் மீட்டெடுத்து குறைந்த பட்ச அரசியல் புகட்டி, கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை வீழ்த்தவும், ஜனநாயகக் கூட்டரசை நிலைநாட்டவும் களம் காண்போம்! அதற்கான பரந்து விரிந்த மக்களின் ஒற்றுமையைக் கட்டி எழுப்புவோம்!

எழில்மாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here