செப்.27 பாரத் பந்த் – ஐ முன்னிட்டு திருச்சி பு.ஜ.தொ.மு. நிர்வாகிகளும், ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகளும் இணைந்து அனைத்து பு.ஜ.தொ.மு. ஆட்டோ சங்க கிளைகளுக்கும் சென்று பிரச்சார கூட்டம் நடத்தினர்.

இதில் பு.ஜ.தொ.மு.திருச்சி மாவட்ட தலைவர். தோழர்.கோபிநாத், செயலாளர் தோழர்.ஜீவா, பொருளாளர் தோழர்.வே.பாலமுருகன் ஆகியோர் விவசாயிகள் போராட்டத்தை விளக்கியும், இதில் நாம் கலந்து கொள்ள வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி பேசினர்.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் தோழர்.மணலிதாஸ், பொருளாளர் தோழர்.செல்வராஜ் மற்றும் தோழர்கள் சிவா, கணேசன், மணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அனைத்து ஆட்டோக்களிலும், பகுதிகளிலும் போஸ்டர் ஒட்டப்பட்டது.

தகவல்:

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்(இணைப்பு)
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருச்சி மாவட்டம்.

 

அனைத்துத் தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்புச் சங்கம்

செப்டம்பர் 27 பாரத் பந்த்!

விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தை சுற்றியுள்ள தரைக்கடைகள் அனைத்தும் செப் 27 ம் தேதி முழு அடைப்பு போராட்டம்.

தகவல்:

அனைத்துத் தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்புச் சங்கம் (இணைப்பு)
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருச்சி மாவட்டம்.

தொடரும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here