ரான் தலைநகர் டெக்ரானில் உள்ள ராணுவ இலக்குகளை குறிவைத்து துல்லியமான தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளதாக IDF(Israel Defence Forces) கூறுகிறது. எஃப்-35, எஃப்-15ஐ மற்றும் எஃப்-16ஐ ஜெட் விமானங்களைப் பயன்படுத்தி ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரான், சிரியா, ஈராக் வான்பகுதிகளில் விமானங்கள் இயக்கப்படவில்லை.

கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி ஈரான் இஸ்ரேலின் மீது பாலஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நிகழ்த்தியது. கிட்டத்தட்ட 200 பாலிசிஸ்டிக் இஸ்ரேல் நகரங்களின் மீது விழுந்தன.

லெபனான் நாட்டில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டார். ஈரான் ராணுவத்தின் கமாண்டர் கொலைக்கும் பதில் அளிக்கும் விதமாக இந்த தாக்குதலை ஈரான் நடத்தியது.

இந்த தாக்குதல் குறித்து  “ஈரான் மிகப்பெரிய தவறு செய்து விட்டது அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும்” என்று ஜியோனிச வெறியன்,  இனப்படுகொலையாளன் இஸ்ரேலின் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் தான் ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. “இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் தாக்குதலுக்கு இஸ்ரேலின் பதிலடியை நாங்கள் முடித்து விட்டோம் என்பதை இப்போது என்னால் உறுதிப்படுத்த முடியும்” என்று IDF செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி ஒரு வீடியோவில் கூறியுள்ளார்.

மேலும் “ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதலை நடத்தினோம். இஸ்ரேல் அரசுக்கு ஏற்பட்ட  உடனடி அச்சுறுத்தல்களை முறியடித்தோம்” என்றும் கூறியுள்ளார்.

“எங்களிடம்  தீர்க்கமாக செயல்படும் திறன் மற்றும் உறுதியும் உள்ளது. நாங்கள் இஸ்ரேலை பாதுகாக்க தயாராக உள்ளோம்” என்றும் டேனியல் ஹகாரி கூறியுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை “இரு நாடுகளின் தாக்குதல் என்பது இத்துடன் நிற்க வேண்டும்” என்று  இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கண்டிக்காமல் ஒரு சார்பாக அறிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் ஈரானுக்கு எதிரான முதல் தாக்குதலை சிரியாவிலுள்ள ஈரான் தூதரகம் மீது நடத்தியது. இதற்கு பதில் தாக்குதலை ஈரான் ஏப்ரல் மாதம் இஸ்ரேல் மீது நடத்தியது. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவிற்கு வந்தவரை கொலை செய்தது இஸ்ரேல். இதற்கான பதில் தாக்குதலை அக்டோபர் 1 அன்று ஈரான் இஸ்ரேல் மீது 200 பாலஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. இதற்கு எதிர்வினை ஆற்றும் விதமாகத்தான் ஈரான் மீதான தாக்குதல் நடந்துள்ளது.

ஆனால் இது நிற்கப் போவதில்லை என்று தெரிந்தும் அமெரிக்கா பெரியண்ணன் மனநிலையில் இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அறிக்கை வெளியிடுவது, அக்டோபர் 1 இஸ்ரேல் மீதான தாக்குதலின் போது ‘‘கடுமையான விளைவுகளை சந்திக்க கூடும்” என்று இஸ்ரேலுக்கு உறுதியான  ஆதரவையும் வெளிப்படுத்திவிட்டு பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் அமெரிக்காவின் அயோக்கியத்தனமாகும்.

அல்ஜசீரா செய்தி நிறுவனத்தின் தகவல் படி “ILam, Khuzestan  மற்றும் Tehran மகாணங்களில் உள்ள ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்களால்  ‘வரையறுக்கத்தக்க சேதம்’ ஏற்படுத்தியதாக ஈரானின் இராணுவம் தெரிவித்துள்ளது”.

இரு நாடுகளும் தங்களுக்குள் நடத்திக் கொள்ளும் தாக்குதல்களால் பாதிக்கப்படுவது இருநாட்டு மக்களும் தான் இருவருக்குமே உயிர் சேதம் பொருளாதார சேதமும் ஏற்பட்டுள்ளது ஏற்படுகிறது ஆனால் அதிகார வர்க்கம் தன்னை பாதுகாத்துக்  கொண்டு  தாக்குதல்களை நடத்துகிறது. முன்கூட்டியே கணித்துக் கொண்டு தற்காத்துக் கொள்கிறது.

அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் நடக்கும் பதிலிப் போர்களை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் அமெரிக்க மேலாதிக்க வெறிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். அமெரிக்காவுடன் பொருளாதார உறவுகளை நிறுத்த வேண்டும். டாலர் வணிகத்தை கைவிட வேண்டும். இதனை ஆளும் அரசுகள் செய்வதற்கு மக்கள் தங்களின் போராட்டங்கள் மூலம் தான் நெருக்கடியை ஏற்படுத்த முடியும்.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here