அன்பார்ந்த வாசகர்களே!

மக்கள் அதிகாரம் இணையதளம் துவங்கி ஓராண்டுக்கு மேல் ஆகிறது.
இந்த ஓராண்டு காலத்தில் மக்கள் அதிகாரம் பல்வேறு பிரச்சனைகளில் மக்கள் மத்தியில் செய்த பணிகள் மட்டுமின்றி, குறிப்பிடத்தக்க சர்வதேச, உள்நாட்டு நிலைமைகளை பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்தில் பகுப்பாய்வு செய்து கட்டுரைகளாக தயாரித்து வெளியிட்டோம்.

அவ்வப்போது முக்கியமான பிரச்சனைகளின் மீது காணொளிகளை தயாரித்தும் எமது இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம் என்பதை அறிவீர்கள்.

இவை மட்டுமின்றி மக்கள் அதிகாரத்தின் ஊடகப்பிரிவு முகநூல் பக்கத்திலும் ஊக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.அது மட்டும் இன்றி சமூக வலைதளங்கள் அனைத்திலும் மக்கள் அதிகாரம் இடம் பெற்றுள்ளது என்பதையும் தங்களின் வரவேற்பின் மூலம் அறிந்து கொள்கிறோம்.

கார்ப்பரேட்-காவி பாசிசம் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள இந்த தருணத்தில் பாசிசத்திற்கு எதிராக போராட முன் வரும் ஊடகவியலாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், மற்றும் பல்வேறு அமைப்புகளின் கீழ் செயல்படும் சமூக போராளிகள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கு மக்கள் அதிகாரத்தின் இணையதளம் தொடர்ந்து முன் முயற்சி உடன் செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த 10 நாட்களாக இணையதளத்தில் சில தொழில்நுட்ப பணிகளை மேற்கொண்டு இருந்ததால் இணையம் செயல்படவில்லை என்றவுடன் நேரிலும், அலைபேசியிலும் விசாரித்த வாசகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தற்போது மீண்டும் புதுப் பொலிவுடன் மக்கள் அதிகாரம் இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து தங்கள் ஆதரவை வழங்குங்கள்.

தங்கள் உறவினர்கள், நண்பர்கள், உடன் பணி புரியும் தொழிலாளர்கள், தங்களுடன் படிக்கும் மாணவர்கள் மற்றும் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரிடமும் நமது இணையதளத்தை கொண்டு சேருங்கள் என்று அன்புடன் கோருகிறோம்.

தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
ஊடகம்.
மக்கள் அதிகாரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here