ஆர் எஸ் எஸ் பாஜக உருவாக்க துடிக்கின்ற முற்றும் முழுதான பார்ப்பன இந்திய தேசியம் நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது.
2025 இறுதிக்குள் பார்ப்பன பேரரசை நிறுவுவதற்கு எத்தனிக்கின்ற ஆர் எஸ் எஸ் மற்றும் சங்க பரிவார கும்பலுடன் அறிவு ரீதியாக மோதுவது மிகப்பெரும் சவாலானது.
உண்டக்கட்டி சுந்தரங்களும், படிக்காசு புலவர்களும் பார்ப்பன பாசிஸ்டுகளை புகழ் பாடி பரிசுகளைப் பெறும்போது மக்கள் நலனில் இருந்து அதை எதிர்த்துப் போராடுகின்ற ஊடகவியலாளர்கள் அரிதிலும் அரிதாகவே உள்ளனர்.
சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் நடத்துகின்ற தேர்தலில் ஜனநாயக சக்திகளாக போட்டியிடுகின்ற மு. ஆசிப் தலைமையிலான அணியை ஆதரிப்போம்.
நீதிக்கான கூட்டணியான இந்த அணியை ஆதரிக்குமாறு புரட்சிகர, ஜனநாயக எண்ணம் கொண்ட ஊடகவியலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
மக்கள் கலை இலக்கியக் கழகம்
தமிழ்நாடு
13-12-2024