சாதி ஒடுக்குமுறை :
உங்கள் முன்னே சில கேள்விகள் !


ச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி D.Y. சந்திரசூட் கல்வி நிறுவனங்களில் சாதிசெயல்படும் விதங்களை அம்பலப்படுத்தி, அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் அதிர்ச்சியைக் கூட்டுகின்றன. அடுத்த பத்திகளில் வருபவை சந்திரசூட்டின் மனவேதனை என்றுதான் சொல்லவேண்டும்.

” தற்கொலை செய்துகொண்டு இறக்கும் மாணவர்களில் அதிகம் பேர் பழங்குடி, தலித் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.இது வெறும் புள்ளிவிவரக் கணக்கு அல்ல. இவை சிலநேரங்களில் நூற்றாண்டுகளாய் நடந்துவரும் கொடூர உண்மைக் கதைகளின் தொடர்ச்சியைச் சொல்கின்றன…..”

சந்திரசூட், ஐதராபாத் தேசியக் கழகம், சட்டப்படிப்புகள் மற்றும் ஆய்வுத் துறைகளின் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் பேசும்போது கூறியவை இதோ :

” ….இப்படிப்பட்ட தற்கொலை முடிவுகளுக்கு இவர்கள் ஏன் தள்ளப்படுகிறார்கள் ? சமீபத்தில் மும்பை தொழில்நுட்பக் கழகத்தில் ( ஐ ஐ டி ) 18 வயதே நிரம்பிய தலித் மாணவர் தர்ஷன் சோலங்கி தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டார்….அவரது பெற்றோர் இதற்குக் காரணம் சாதிப் பாரபட்சம்தான் என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்…..

நம் நிறுவனங்கள் எங்கே தப்பு செய்கின்றன ? ”

” ……..இந்த மாணவர்களுக்கு விடுதிகள் எப்படி ஒதுக்கீடு செய்யப்படுகின்றன தெரியுமா, நுழைவுத்தேர்வு மதிப்பெண்களை வைத்து….. எல்லா மாணவர்கள் முன்னிலையில் உனக்கு என்ன மார்க், நீ என்ன சாதி என்று விசாரிக்கும்போது உனக்கு ஆங்கிலமும் சரளமாகப் பேசத் தெரியாது என்று சேர்த்துக் கேலி செய்கிறார்கள்…..இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்……”

பார்ப்பதற்கும் மதிப்பிடுவதற்கும் இது அற்பச் சிறு விசயமாகத் தெரியலாம். ஆனால் அப்படியல்ல. அந்தச் சின்னஞ்சிறு விசயத்திலும் சாதியச் சித்திரவதைகளின் சிறு அளவு நுணுக்கமான அளவில் நடைமுறையில் இருக்கிறது என்பதை நாம் கவனிக்கவேண்டும். சந்திரசூட்டின் விவரிப்பில் அதைப் பாருங்கள்.

‘ கவுரவமான ‘ விடுதி அறை கொடுப்பதற்கு மதிப்பெண் அளவுகோல் ; அதே மதிப்பெண் சித்திரவதைக்கும் தூண்டுகோல்.

கல்விக்கூடம் புனிதத் தலமாம், ‘ கல்விக் கடவுள் ‘ சரஸ்வதி வாசம் செய்யும் தலமாம். இது மோடி அரசின், ஒன்றிய அரசின், பார்ப்பன இந்துமத அரசின் புராணப் புளுகு, கட்டுக் கதை ; இன்றும் தொடருகின்ற , பார்ப்பனீயத்தின் மனிதத் தன்மையை அலட்சியமாகத் தூக்கிஎறியும் நடைமுறையும்கூட.

ஈவிரக்கமேயில்லாத இந்தப் பச்சையான ஆதிக்கச் சாதி சர்வாதிகார அடிமைமுறைக்கு என்ன தண்டனை, யார் எப்படி வழங்குவது ?

ஆதாரம் : 25.2.2023, Bar and Bench செய்தியை ஆதாரம் காட்டி 

Scroll.in வெளியிட்ட குறிப்பு.

தகவல் : இராசவேல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here