பெண்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்களைப் போல பாசிச பாஜக அரசியல் நடத்துவது ஊரை ஏமாற்றலாம். ஆனால் அவர்களின் நடவடிக்கை அனைத்தும் பெண்களை மிகக் கொடூரமாகவும், கீழ்த்தரமாகவும் நடத்துகின்ற பாசிச வக்கிரம் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை திணிப்பது ஆகியவற்றை இயல்பாக செய்து கொண்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள உள்ளூர் பாஜக பெண் தலைவர் அனாமிகா தனது காதலனும், அவரது உதவியாளரும் தனது 13 வயது மகளை பலமுறை கண்முன்னே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்துள்ளார்.
சிறுமியின் மருத்துவ பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாஜக தலைவர் அனாமிகா சர்மாவும் அவரது காதலன் சுமித் பட்வாலும் ஹரித்வாரில் உள்ள ஹோட்டலில் இருந்து கைது செய்யப்பட்டனர். பட்வாலின் கூட்டாளியான சுபம் மீரட்டின் ஷாபூரில் கைது செய்யப்பட்டார்.
13 வயதேயான சிறுமியின் தாயான அனாமிகா சம்மதத்துடனும், அவரது முன்னிலையிலும், அந்த நபர்கள் இந்தக் குற்றத்தைச் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்..
இந்த பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியின் தாயான அனாமிகா பாஜக மகிளா மோர்ச்சாவின் ஹரித்வார் மாவட்டப் பிரிவின் தலைவராக இருந்தார்.
இந்த சம்பவம் மட்டுமல்ல கடந்த 2014 முதல் இன்று வரை வாரத்திற்கு இரண்டு மூன்று சம்பவங்களாவது பாசிச பாஜகவின் தலைவர்கள் துவங்கி உள்ளூர் மட்ட தலைவர்கள் பொறுப்பாளர்கள் வரை பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்தி வருவது செய்தியாக மாறி உள்ளது.
பார்ப்பன (இந்து) மதம் பெண்களை இழிவாக நடத்துவது மட்டுமின்றி அவர்களை ஆணாதிக்க சமூகத்தின் கீழ் நிரந்தர அடிமைகளாக வைத்துக் கொண்டுள்ள பாசிச பாஜக பார்ப்பன கும்பல் தான் இந்தியாவில் பெண்களின் உரிமைக்காக போராடுவதாகவும் பெண்கள் சக்தி என்றெல்லாம் மாய்மாலம் செய்து கொண்டுள்ளனர்.
அயோத்தி ராமர் கோயிலை கட்டுவதற்கு செங்கல் யாத்திரை நடத்த துவங்கிய காலத்தில் இருந்து பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை ஒரு அடக்குமுறை கருவியாகவே பயன்படுத்தி வருகின்றனர் என்பது பாஜகவின் வரலாற்றை அறிந்த அனைவருக்கும் தெரியும்.
குஜராத்தில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்கள் கொலை வெறியாட்டங்கள் ஆகியவற்றுடன் இணைந்து பாலியல் வக்கிர வெறியாட்டங்கள் நடத்தப்பட்டது என்பது பல்வேறு ஊடகங்களிலும் சமூக செயல்பாட்டாளர்களின் அறிக்கைகள் மற்றும் ஊடக செய்திகள் மூலமாக நாடே அறிந்து கொண்டது.
ஆனாலும் நீதிமன்றத்தின் உதவியுடன் அதாவது தனது சங் பரிவார கும்பல் மூலம் நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் துணையுடன் இத்தகைய பாலியல் கிரிமினல் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர்.
அதன் பிறகு காஷ்மீரில் சிறுமி ஆசிபா முதல் பாஜகவின் மகளிர் அணி தலைவிகள் வரை பாஜகவில் உள்ள பாலியல் வெறியர்கள் மற்றும் குண்டர்களின் காம இச்சைக்கு பலியாக்கப்பட்டனர் என்பதும் இதனை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டவர்களை கொடூரமான முறையில் தண்டிப்பது அடக்கி வைப்பது ஆகியவற்றில் பாசிச வழிமுறைகளை பாஜக கையாண்டு வருகிறது.
இத்தகைய கேடுகெட்ட கிரிமினல் கும்பல் தமிழகத்தில் பெண்களின் உரிமைக்காக போராடுவதை போலவும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவியின் மீதான பாலியல் வன்கொடுமையை எதிர்த்து களமாடுவதாகவும் அப்பட்டமாக நடித்துக் கொண்டுள்ளனர்.
படிக்க:
🔰 பாலியல் குற்றவாளிகளின் கூடாரம் பாஜக: பாலேஷ் தன்கர் மற்றுமொரு எடுத்துக்காட்டு!
🔰 மணிப்பூர் பாலியல் வன்முறை! ஆர்எஸ்எஸ் பாஜக காரனை நடமாட விடாதே!
“அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது” என்று கூறியுள்ளார் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை. இருந்தாலும் இந்த வழக்கு தொடர்பான பல விடை தெரியாத கேள்விகள், இன்னமும்’ என்று தலைப்பில் வீடியோ பதிவு ஒன்றில் அண்ணாமலை விரிவாக கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறும் போது, டிசம்பர் 24-ந்தேதி குற்றம் செய்தபிறகு அடுத்த நாள் ஞானசேகரன் என்ன செய்கிறான்? CDR-ஐ பொறுத்தவரைக்கும் பழக்க வழக்கம் எப்படி இருக்கும் என்று தமிழகத்தின் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி கேட்கிறார்.
அவருக்கு ஜால்ரா அடிப்பதைப் போல பார்ப்பன கும்பல் பத்திரிக்கை, ஊடகங்கள் இதனை தலைப்புச் செய்தியாக மாற்றுகிறது.
சொந்த மகளையே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குகின்ற வக்கிர மிருகங்கள் நிறைந்த பாலியல் குற்ற கும்பலான பாசிச பாஜகவிற்கு பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை மீதான விசாரணை மற்றும் குற்றவாளி ஞானசேகரன் தண்டிக்கப்பட்டது குறித்து வேறு கருத்துக்கள் இருந்தால் அல்லது ஆதாரங்கள் இருந்தால் அவர்களே முன்வைக்கின்ற சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து நீதிமன்றத்தில் வழக்குகளை தொடுக்கலாம் ஆதாரங்களை முன் வைக்கலாம்.
ஆனால் அதற்கு பதிலாக பொதுவெளியில் இவ்வாறு பேசுவது சண்டமாருதம் செய்வது அனைத்தும் திமுகவிற்கு எதிரான அரசியலே தவிர பெண்களை பாதுகாக்கின்ற கண்ணோட்டமும், பொறுப்புணர்வு சிறிதும் கிடையாது என்பது தான் உண்மை.
மேற்கண்ட சம்பவங்கள் பாசிச பாஜகவின் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற நடவடிக்கைகளில் சில உதாரணங்கள் தான். கடந்த 11 ஆண்டுகளாக அவர்கள் நடத்தி வருகின்ற பல்வேறு பாலியல் வன்கொடுமைகள் பற்றி எழுதினால் பக்கங்கள் போதாது.
ஆனால் இத்தகைய கீழ்த்தரமான நடவடிக்கைகளை செய்து கொண்டே மற்றொருபுறம் பெண்களின் காவலர்களை போல நடிப்பதற்கு மாபெரும் துணிச்சல் வேண்டும் அத்தகைய துணிச்சல் பாசிஸ்டுகளுக்கு கைவந்த கலை என்பதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மையாகும்.
◾பார்த்தசாரதி
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி