வெளியீடு: விலை ரூ.50
90-களில் உலக மேலாதிக்க போட்டியில் இருந்து தற்காலிகமாக வீழ்த்தப்பட்ட ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு பின்னர் ஒற்றைத் துருவ வல்லரசாக வலம் வந்து கொண்டிருந்த அமெரிக்க மேல்நிலை வல்லரசு உலகின் எந்த மூலையில் ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிரான தேசிய அரசுகள் அமைந்தாலும், ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மைக் கொண்ட ஜனநாயக அரசுகள் அமைந்தாலும் அதனை ஒழித்துக் கட்டுவது என்பதை ஒரு வாடிக்கையாகவே கொண்டுள்ளது.
20 ஆம் நூற்றாண்டிலும் 21 ஆம் நூற்றாண்டிலும் அமெரிக்க மேல்நிலை வல்லரசு நடத்திய ஜனநாயகப் படுகொலைகள்; ஆட்சிக் கவிழ்ப்புகள்; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை தூக்கி எறிந்து விட்டு தனது பொம்மைகளை ஆட்சியாளர்களாக நியமிப்பது என மனிதகுலத்தின் கொடிய எதிரியாக செயல்பட்டு வருகிறது. நவீன காலனியாதிக்கத்தின் மூலம் நாடுகளின் இறையாண்மையை ஒழித்து தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதன் மூலம் உலகப் போலீசுக்காரனாக தன்னை அறிவித்துக் கொண்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஈராக் அதன் பிறகு ஆப்ரிக்காவின் லிபியா வரிசையில் தென் அமெரிக்காவின் வெனிசுலா தற்போது ஈரான் என்று ஆட்சியாளர்களை தான் மாற்றுவதாகவும் அதன் மூலம் அந்த நாட்டில், ’ஜனநாயகம்; பூத்துகுலுங்குவதற்கு வழி ஏற்படுத்தி தருவதாகவும் அறிவித்துக் கொண்டு உலகை தனது ஒற்றைத் துருவ ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு பல மில்லியன் டாலர்களை செலவு செய்து கொண்டுள்ளது.

அமெரிக்க கார்ப்பரேட்டுகள் விவசாயம், தொழிற்துறை மட்டுமின்றி ராணுவ போர் தளவாடங்கள் தயாரிப்பதிலும் முன்னிலை வகிப்பதால் இவற்றின் கொடிய சுரண்டல் கொள்ளைக்கு உகந்த வகையில் போர்ப் பொருளாதாரத்தை முன்னிறுத்தி உலக நாடுகளின் மீது தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது அமெரிக்கா.
ஈரானில் அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாகவும், அதன் உச்ச தலைவரான அலி கொமெய்னி மதவாத ஆட்சி நடத்துவதாகவும், இதனால் அந்த நாட்டு மக்களுக்கு எதிராக அடக்குமுறைகளை செலுத்துவதாகவும் கூறிக்கொண்டு அந்த நாட்டின் மீது தாக்குதல்களை தொடங்க துவங்கிய அமெரிக்க- இஸ்ரேல் கூட்டுப்படையானது வரலாற்றில் என்றும் இல்லாத அளவிற்கு மிகப்பெரும் பின்னடையும், எதிர் தாக்குதல்களையும் எதிர்கொண்டு உள்ளது.
படிக்க:
♦ ஈரான் மீது கொலை வெறியாட்டம்! இஸ்ரேல்-அமெரிக்கா-இந்தியா பாசிச கொலைகார கூட்டணி!
♦ அமெரிக்க மேலாதிக்கத்துக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கும் ஈரான்!
அமெரிக்காவின் துணை அதிபர், தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத் தலைவர் முதற்கொண்டு சொந்த நாட்டிலேயே இந்த போருக்கு எதிரான பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வரும் பாசிச டிரம்ப் மற்றும் போர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள இஸ்ரேலின் நெதன்யாகு போன்றவர்கள் இன்னமும் உலகை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு துடித்துக் கொண்டுள்ளது மிகவும் அபாயகரமான கொடூரமான முயற்சியாகும்.
உலகம் முழுவதும் உள்ள பாட்டாளி வர்க்கம் இத்தகைய பாசிச கும்பலை எதிர்த்து ஓர் அணியில் திரள வேண்டும் என்பதற்காக புதிய ஜனநாயகம்(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) இந்த வெளியீட்டை கொண்டு வருகிறது. அமெரிக்க இஸ்ரேல் பாசிச கும்பலுக்கு துணை போகின்ற இந்திய பாசிஸ்டுகளான ஆர்.எஸ்.எஸ்-மோடி கும்பலுக்கு எதிராக கருத்தியல் ஆயுதமாக இந்த நூல் பயன்படும் என்ற நம்பிக்கையுடன் வெளியிடுகிறோம்.
ஏகாதிபத்தியமும் பாட்டாளி வர்க்க புரட்சியும் என்ற லெனினிச சகாப்தத்தில் பாட்டாளி வர்க்கத்தின் ஆயுதமாக இந்த நூலை கையில் ஏந்தி ஏகாதிபத்திய எதிர்ப்பு போரில் முன்னேறுவோம்.

தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்
(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)
புதிய ஜனநாயகம்(மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) புதிய வெளியீடு!
புத்தகம் தேவைப்படுவோர் கமெண்ட் செக்சனில் தங்களது அலைபேசி எண்ணை பதிவிடலாம்.
கீழைக்காற்று வெளியீட்டகம்
33/17 திருவள்ளுவர் தெரு, நேரு நகர் ,
வேளச்சேரி, சென்னை-42
+91 89256 48977
விலை: ரூ.50







