டகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் கடந்த மூன்று மாத காலமாக பல்வேறு வன்முறை வெறியாட்டங்களை அனுபவித்துக் கொண்டுள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு வரை 30க்கும் மேற்பட்ட இன குழுக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்த மணிப்பூர் இன்று சிதறுண்டு போய் உள்ளது.

காஷ்மீரத்திலும் குஜராத்திலும் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறைகள் மணிப்பூரில் பழங்குடி மக்கள் மீது தலை விரித்து ஆடுகிறது. கடந்த மே மாதம் 4-ஆம் தேதி குக்கி சமூகத்தைச் சார்ந்த மூன்று பெண்களை நிர்வாணப் படுத்தி ஊர்வலமாக கொண்டு செல்ல முயன்றுள்ளனர். ஆனால் 19 வயது இளம் பெண் ஒருவரும் 40 வயது பெண்மணி ஒருவரும் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

தனது மகளின் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமையை தடுக்க முயன்ற தந்தையார் முதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஊர்வலத்தின் இறுதியில் கூட்டு வன்புணர்வுக்கு முயற்சி செய்தபோது தடுக்க முயற்சித்த சகோதரன் இரண்டாவதாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

“ஆடைகளை அவிழ்த்து விடு அல்லது உங்களை கொன்று விடுவோம்” என்று மிரட்டி இரண்டு பெண்களையும் நிர்வாணப்படுத்தியுள்ளனர். அதன் பிறகு ஊர்வலமாக இழுத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் நடந்து 77 நாட்கள் கடந்த பிறகு தான் அது பற்றிய வீடியோ வெளியாகி உள்ளது. குறிப்பாக மணிப்பூர் வன்முறை துவங்கிய காலத்தில் நடந்த இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் நூற்றுக்கணக்கில் நடந்திருக்கலாம் என்பதுதான் நமது ரத்தத்தை உறைய வைக்கிறது. அந்த மாநிலத்தின் முதல்வர் பிரேன் சிங் இதுபோன்று பல புகார்கள் வந்துள்ளதாக அறிவித்துள்ளது இதனை நிரூபிக்கிறது.

மணிப்பூர் பெண்கள் மீது ராணுவம் நடத்திய கூட்டு பாலியல் வன்முறையை எதிர்த்து “ராணுவமே எங்களை வன்புணர்வு செய்” என்று நிர்வாணமாக எதிர்த்து போராடினார்கள் மணிப்பூர் தாய்மார்கள். அத்தகைய வீரம் செறிந்த பெண்கள் இன்று ஆர்எஸ்எஸ் மூலம், இந்து மத வெறியூட்டப்பட்ட பொறுக்கி கும்பலால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டு வரும் பெரும்பான்மை இனத்தவரான மெய்டி அல்லது சிறுபான்மையினரான குக்கி ஆகிய இருவரில் எந்த தரப்பாக இருந்தாலும் பெண்கள் மீது தனது வீரத்தை காட்டும் ஆணாதிக்க வக்கிரமும், பாலியல் பொறுக்கி தனமும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்த செய்தி ஊடகத்திற்கு வருவதற்கு முன்பாகவே அரசு பதவியில் உள்ள அதிகார வர்க்கத்திற்கும், போலீசுக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும், நாட்டின் பிரதமர் அலுவலகத்திற்கும் கண்டிப்பாக செய்தி தெரிந்திருக்கும். ஆனால் எதுவும் நடவாதது போல கள்ள மவுனம் சாதிக்கின்றது ஆர்எஸ்எஸ் – பாஜக பாலியல் வெறி பிடித்த, கொலைகார கும்பல்.

 

நாட்டின் பிரதமர் பாசிச மோடி 77 நாட்கள் கடந்த பிறகு மணிப்பூரை பற்றி வாயை திறந்து உள்ளார். இத்தனை நாள் அமைதியாக இருந்த மோடி இந்த வீடியோ குறித்து வாயை திறந்து பேசி இருப்பதன் மூலம் இந்து மத வெறியூட்டப்பட்ட குண்டர்களின் வன்முறை வெறியாட்டம் மேலும் அதிகரிக்கும் என்று அச்சப்படுகிறார் மணிப்பூரைச் சேர்ந்த மனித உரிமை போராளி. ஒனிலின்.

மணிப்பூரில் கடந்த மூன்று மாதமாக நடந்து வரும் வன்முறை வெறியாட்டங்கள் பாலியல் வக்கிரங்கள் போன்றவற்றைப் பற்றி வாயையே திறக்காத பாஜகவினர் பாலியல் வன்கொடுமை வீடியோ வெளியான பிறகு உத்தமர்களைப் போல அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றனர் பாஜகவின் ஸ்மிருதி ராணி முதல் தமிழகத்தின் குஷ்பூ வரை. மற்றொருபுறம் தேசிய மகளிர் ஆணையம் முதல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் வரை இந்திய ஒன்றிய அரசை வன்மையாக கண்டித்துள்ளனர். இந்த வீடியோக்கள் எல்லாம் பெண்ணின் வயிற்றில் பிறந்த ஒவ்வொருவருக்கும் நெஞ்சை பதை பதைக்க செய்ய வேண்டும்.

ஆனால் எதுவுமே நடவாது போல தமிழகத்தில் தினமும் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்து கொண்டு இருக்கிறார் பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை. பாரதிய ஜனதா கட்சி என்ற பயங்கரவாத கும்பலைச் சார்ந்த எச் ராஜாவோ, உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு ஈடி ரெய்டு செல்ல போகிறது என்று நாக்கில் எச்சில் ஒழுக பேசிக் கொண்டிருக்கிறார். பதவி வெறியுடன் அலைந்து கொண்டிருக்கும் அண்ணாமலை தமிழகத்தின் சாலைகளில் 110 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளப் போவதாக திகிலூட்டிக் கொண்டிருக்கிறார்.

குஜராத், காஷ்மீருக்கு அடுத்து மணிப்பூரில் மக்களை மோத விட்டு ரத்தம் குடித்துக் கொண்டிருக்கும் ஓநாய்களான ஆர்எஸ்எஸ் பாஜகவினரை வீதியில் நடமாட விடுவதே பெரும் ஆபத்தாகும்.

மதச்சார்பின்மைக்கும், ஒற்றுமைக்கும் இந்தியாவிலேயே முன்னிலையில் உள்ளது தமிழகம் என்பதை 20ஆம் தேதி மாலை 6 மணிக்கு மெரினா கடற்கரையில் மணிப்பூர் பாலியல் வன்முறைக்கு எதிராக ஒன்று கூடுவோம் என்ற அறிவிப்பின் கீழ் திரண்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:

இதனை ஒரு நம்பிக்கையான முன்னுதாரணமாக கொள்வோம்.. கிராமம் தொடங்கி நகரம் வரை ஆர்எஸ்எஸ் சாகாக்களில் பயிற்சி பெறுகின்ற பார்ப்பன பாசிச வெறியூட்டப்பட்ட தொண்டர்கள் அனைவரையும் பயிற்சிகளை தடுத்து வீட்டுக்கு அனுப்பி வைப்போம். பத்திரிக்கையாளர் சந்திப்பு முதல் மக்களை சந்திக்கின்ற நிகழ்ச்சிகள் வரை எதையும் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்த ஒன்றிணைவோம்.

அன்றாடம் ஒவ்வொரு மணி தோறும் நாட்டின் மூலை முடுக்குகளில் பெண்களுக்கு எதிராகவும், தலித்துகள், பழங்குடி மக்களுக்கு எதிராகவும், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும், தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு எதிராகவும் பயங்கரவாத வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு எதிராக வீதியில் இறங்கி முறியடிப்பதுதான் உடனடி தீர்வாகும். இது வன்முறை அல்ல. கார்ப்பரேட் காவி பாசிச வன்முறை நடத்துகின்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான எதிர் வன்முறை.

  • மருது பாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here