ஆஸ்திரேலியாவில் சமூக வலைதள பயன்பாட்டுக்கு தடை! ’கருத்துரிமைக் காவலன்’ எலான் மஸ்க் எரிச்சல்!

ப்ளூஸ்கியின் மூலம் எக்ஸ் தளத்துக்குக்கு கடுமையான போட்டி உருவாகியுள்ளது என்று ஐரோப்பாவில் இருந்து வெளி வருகின்ற செய்தி ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சுமார் 22 மில்லியன் பேர் ப்ளூஸ்கையில் இணைந்துள்ளனர்

ன்றைய தலைமுறையினர் மத்தியில் சமூக வலைதள பயன்பாடு அதிகரித்துள்ளது. பள்ளிக் குழந்தைகள் கூட எப்போதும் சமூக வலைதளங்களில் மூழ்கி கிடப்பதால் அவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. அதுமட்டும் இன்றி மன ரீதியாகவும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம் ஒன்றை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது. அதாவது 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பார்க்க தடை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தனது நாட்டில் உள்ள இளைய தலைமுறை இது போன்று காட்சி போதைக்கு அடிமையாவதை தடுப்பதற்கு ஆஸ்திரேலியா அரசாங்கம் எடுத்துள்ள முயற்சி பற்றி டெஸ்லா நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் எக்ஸ் பக்கத்தின் உரிமையாளரான திருவாளர் எலான் மஸ்க் கடுமையாக ஆஸ்திரேலிய அரசாங்கத்தை பாசிஸ்டுகள் என விமர்சித்துள்ளார்.

உலகிலேயே முதல்முறையாக இளைய தலைமுறையின் சீரழிவை தடுப்பதற்கு தங்களது அரசாங்கம் முயற்சித்துள்ளதாக ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோணி அல்பானிஷ் தெரிவித்துள்ளார்.

முதலாளித்துவ சமூகத்தில் கருத்துரிமை என்பது வரம்புக்குட்பட்ட, தணிக்கைக்கு உட்பட்ட உரிமையே ஆகும். ’சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்; என்ற மூல முழக்கங்களுடன் பிறந்த முதலாளித்துவம் இன்று தான் முன்வைத்த அனைத்து முழக்கங்களுக்கும் எதிராக மாறியுள்ளது மட்டுமின்றி இவை ஒவ்வொன்றையும் லாப வேட்டைக்கு உரிய தளங்களாக மாற்றியுள்ளது என்பதுதான் முதலாளித்துவத்தின் பரிணாம வளர்ச்சியாகும்.

ஒரு எடுத்துக்காட்டாக ட்விட்டர் நிறுவனம் 2019 ஆம் ஆண்டு சமூக ஊடகங்களில் சுதந்திரமான மற்றும் அதிக செலவில்லாத ஊடகம் ஒன்றை உருவாக்குவதாக கூறிக் கொண்டது அதற்கு ப்ளூஸ்கி என்று பெயர் வைத்தது.

அப்போது அதன் செயல்பாட்டை கண்காணிப்பதற்கு ட்விட்டரின் இணை இயக்குனரான ஜாக் டோர்சியால் என்பவர் செயல்பட்டு வந்தார். அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிய பிறகு இந்த திட்டம் கைவிடப்பட்டது என்பதால் அதன் பிறகு தற்போது அதை ஜே கிரைபர் என்பவர் இயக்கி வருகிறார்.

ட்விட்டர் முதலாளியாக எலான் மஸ்க் மாறிய பிறகு அதன் பயன்பாடுகள் மீது பல கட்டுப்பாடுகளை உருவாக்கினார். குறிப்பாக புதிய பயனர்கள் 300 பதிவுகளையும் பழைய பயனர்கள் 600 பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும் என்றும் புளூ டிக் குறியீடு தொழில்நுட்பத்திற்கு கட்டணம் என பல்வேறு விதிமுறைகளை உருவாக்கி கட்டுப்படுத்த துவங்கியதால் அதிலிருந்து இடதுசாரிகள், கருப்பினத்தவர்கள், திருநங்கைகள் மற்றும் சுதந்திரப் படைப்பாளிகள், பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளின் அதிபர்கள் உட்பட அனைவரும் வெளியேறி புளூஸ்கி சமூக ஊடகத்தில் இணைந்தனர்.

இந்த புளூஸ்கி மூலம் பயனர்களின் உரைச் செய்திகள், அவர்கள் எடுக்கின்ற புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் வெளி உலகத்திற்கு அவர்கள் சொல்ல விரும்பும் செய்திகளை வெளியிடுவதாக அறிவித்துக் கொண்டது.

‘எங்களுக்கு லாப நோக்கம் எதுவும் இல்லை’ என்று அறிவித்துக் கொண்ட இதன் தற்போதைய CEO-வான ஜே கிரைபர் இந்த வேலைக்கு வருவதற்கு முன்னால் கிரிப்டோ கரன்சியான Z Cash நிறுவனத்தில் மென்பொருள் பணியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.


படிக்க: கருத்து சுதந்திரத்துக்கு கல்லறை கட்டும் மோடி அரசு!


ட்விட்டர் தளத்தின் பல்வேறு விதமான மாற்றங்களை மற்றும் கட்டுப்பாடுகளை விரும்பாத பயணங்கள் சுமார் 22 மில்லியன் பேர் ப்ளூஸ்கியில் இணைந்துள்ளனர் என்பதும், அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு ட்ரம்ப் தேர்வானதால் ட்விட்டரில் இருந்து பிரிட்டனில் இருந்து வெளியாகும் தி கார்டியன், ஸ்பெயினில் இருந்து வெளியாகும் லா வான்கார்டியா போன்ற முக்கியமான செய்தி நிறுவனங்களும் வெளியே வந்துள்ளது.

இதற்கிடையில், முன்னாள் மனித உரிமைகள் கண்காணிப்பு இயக்குனர் கென்னத் ரோத், “எக்ஸை விட்டு முற்போக்காளர்கள் வெளியேறுவது தவறு” என்று பதிவிட்டுள்ளார்.

ப்ளூஸ்கியின் மூலம் எக்ஸ் தளத்துக்குக்கு கடுமையான போட்டி உருவாகியுள்ளது என்று ஐரோப்பாவில் இருந்து வெளி வருகின்ற செய்தி ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனால் ’கருத்துரிமைக் காவலனான’ திருவாளர் எலான் மஸ்க் எரிச்சல் அடைந்துள்ளார் என்பதும், ப்ளூஸ்கிக்கு எதிராக பல்வேறு அவதூறுகளை பரப்பி வருகிறார் என்பதும் ஜனநாயகம் பற்றிய அவரது யோக்கியதையை காட்டுகிறது. இத்தகைய கருத்துக் காவலர்தான் அமெரிக்க ஜனநாயகத்தின் புதிய ஆலோசகர் என்பது ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள சவால் என்பதும் பாசிச பயங்கரவாதத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள அங்கீகாரம் என்பதும் புரிந்து கொள்ள வேண்டிய செய்திகளாகும்.

அதே சமயத்தில் தொழில் போட்டியில் ஒருவரை ஒருவர் முறியடிப்பதற்கு முயற்சித்து வருவதால் பயனர்களின் சுதந்திரத்தை இது கட்டுப்படுத்தாது என்பதெல்லாம் அப்பட்டமான மோசடியாகும்.

சுதந்திரம் என்பதற்கு முதலாளித்துவ சமூகத்தில் சொல்லப்படும் பொதுவான வரையறுப்பு இதுதான், ”நல்ல மழை காலத்தில் நெருக்கடியான தெருவில் நீங்கள் நடந்து செல்லும் போது நீங்கள் வைத்திருக்கும் குடை மற்றொருவரின் மீது இடிக்காத வரை உங்களுக்கு சுதந்திரம் உண்டு” என்பது தான் முதலாளித்துவ ஜனநாயகம் தனது ஆட்சியின் கீழ் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு கொடுத்திருக்கும் சுதந்திரமாகும்.

இந்த சூழலில் ட்விட்டருக்கு பதிலாக வெளிவந்துள்ள ப்ளூஸ்கி போட்டியாளராக கருதப்பட்டாலும் அதுவும் ஏகாதிபத்திய முதலாளித்துவ பிக் டெக் நிறுவனங்களில் ஒன்றாகவே உள்ளது என்பதும் இதுதான் முதலாளித்துவ ஜனநாயகத்தின் உண்மையான முகம் என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

  • ஆல்பர்ட்.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி

1 COMMENT

  1. ட்விட்டர் Vs ப்ளுஸ்கி போட்டி; பாசிச வெறியன் எலான் மஸ்க்; மொத்தத்தில் முதலாளித்துத்தின் கோர வெறி அனைத்தையும் ஒரு சேர அம்பலப்படுத்தியுள்ளது இக்கட்டுரை. வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here