மாபெரும் தேசபக்திப்போர் என்று வரலாறு மதிப்பிடுகிற ஸ்டாலின் கிராடு யுத்தம் உங்களுக்கு நினைவிருக்கிறதுதானே?
அபரிமிதமான பொறியியல் வளம், இராணுவக் கட்டமைப்பு, ஆயுதக்குவியல் அனைத்தையும் தன் வசம் வைத்திருந்த ஜெர்மனி எளிதாக வீழ்த்திவிடலாம் என்ற கணக்குடனே சோவியத்துக்குள் ஊடுருவியது நாஜிப்படை.
1942, ஜூலை 17, ஆப்பரேசன் ப்ளூ என்கிற யுத்தத்தை சோவியத்தின் மீது துவக்கியது ஜெர்மனி.
மூன்று குறிக்கொள்கள்.
1. காகாசஸ் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவது
2. வோல்கா நதியை கட்டுப்படுத்துவது
3. ஸ்டாலின் கிராடைக் கைப்பற்றுவது.
மூன்று படைப்பிரிவுகள்.
1942 ஆகஸ்ட் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள், நகரம் முழுவதும் சுமார் ஆயிரம் டன் குண்டுகள் வீசீன. நகரத்தின் 90% வீடுகள் அழிந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு, நகரம் முழுக்க சாம்பலானது.
1942, ஆகஸ்ட் 23 ஜெர்மன் தரைப்படை ஸ்டாலின் கிராடை அடைந்தது. வடக்கே அவர்கள் வோல்கா நதி வரை முன்னேறி வந்தார்கள். இன்னொரு படைப்பிரிவு தெற்கே 300–400 கி.மீ வரை முன்னேறி இருந்தது.
1942 செப்டம்பர் 13 ஸ்டாலின் கிராடுக்குள் போர் துவங்கியது. வீடு வீடாக, தெரு தெருவாக, தொழிற்சாலைகள் கூட போர்க்களமாய் இருந்தன. பெண்கள், ஆண்கள், சிறுவர்கள், சிறுமிகள் என ஓவ்வொரு சோவியத் குடிமக்களும் தன் நாட்டுக்காக உயிரைப் பணயம் வைத்துப் போராடினார்கள்.
கடுமையான போர். கடுமையான இழப்பும் கூட. செஞ்சேனை பின்வாங்கிக் கொண்டே போனது. போகிற வழியில் சொந்த வயல்களுக்கு அவர்களே தீ வைத்தார்கள். சொந்த நீர் நிலைகளை உடைத்தார்கள். எதிரிகளின் கைகளுக்கு நீரும் உணவும் போகக்கூடாது.
1942 செப்டம்பர் இறுதியில் நகரத்தின் 90% பகுதி ஜெர்மனியின் கையில் விழுந்திருந்தது. சோவியத் படை, வோல்கா நதிக்கரையின், 15 கி.மீ அகலமுள்ள ஒரு குறுகலான நதிக்கரையில் ஒரு சூழலுக்குக் காத்திருந்தது.
காலநிலை மாறியது. அப்போதைய குளிர் மைனஸ் 50 டிகிரி. தரைவழி சோவியத்தால் அடைக்கப்பட்டது. வீமானத்தின் வழி மட்டுமே சரக்குப் போக்குவரத்து சாத்தியம். 700 டன் உணவுப்பொருட்களுக்கான தேவை இருந்தது. வந்து சேர்ந்ததோ 100 டன். ஜெர்மனி வீரர்கள், குளிராலும், பசியாலும் செத்து மடிந்தனர்.
1942 நவம்பர் 19 சோவியத் யூனியன் திடீரென பெரிய எதிர்த் தாக்குதல் நடத்தியது. சுமார் 2,50,000 – 3,00,000 ஜெர்மன் படைகள் நகரத்துக்குள் சிக்கினார்கள்.
படிக்க:
♦ உண்மையறிவோம் “லெனின்- ஸ்டாலின் – குரூப்ஸ்கயா”
♦ ஈரான் மீது கொலை வெறியாட்டம்! இஸ்ரேல்-அமெரிக்கா-இந்தியா பாசிச கொலைகார கூட்டணி!
1943 ஜனவரி 31 ஜெர்மனியின் தெற்கு படைப்பிரிவு சரணடைந்தது. 2 பிப்ரவரி முழுப் படையும் சரணடைந்தது. மொத்தம் 6 மாதங்கள் நடந்த போரில் சோவியத் செஞ்சேனை 11 லட்சம் வீரர்களையும். ஜெர்மனி கூட்டுப்படை 8 லட்சம் வீரர்களையும் இழந்திருந்தனர். சோவியத் இராணுவம் பெர்லினை வீழ்த்தியதை விட மிகவும் பிரசித்தி பெற்ற போர் இந்த ஸ்டாலின் கிராடு யுத்தம்.
நிற்க.
நேற்றைய முன் தினம் அமெரிக்காவின் ஒரு இராணுவ அதிகாரி ஒரு பேட்டியில் சொல்கிறார். இரானின் ஒவ்வொரு வீட்டிலும், மக்கள் சிறிய ரக துப்பாக்கிகள் வைத்திருக்கிறார்கள். அதைக்கொண்டு அச்சமின்றி சண்டை செய்கிறார்கள். நாங்கள் விமானிகளை மீட்கிற பணியில் கடுமையான சவால்களை எதிர்கொண்டோம் என்கிறார்.
அவர் பேச்சு எனக்கு ஸ்டாலின் கிராடு யுத்தத்தை ஞாபகப் படுத்தியது. சோவியத் மக்களின் வீரத்துக்கும், இரானிய மக்களின் வீரத்துக்கும் ஒரு பொருத்தம் உண்டு. இரண்டுமே சித்தாந்தத்தால் வலிமைப்படுத்தப்பட்ட மக்கள் திரள். முன்னது மார்க்சியம். இன்னொன்று இஸ்லாம்.
இந்த இரண்டு சித்தாந்தங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஆனால் ஒரேயொரு புள்ளியில் இவை இரண்டின் மையங்களும் கூர்மையாக ஒன்றினைந்து நிற்கும்.
அது ஏகாதிபத்திய எதிர்ப்பு..!
நன்றி : சம்சுதீன் ஹீரா
முகநூல் பதிவு







ஏகாதிபத்திய எதிர்ப்பு / வெளிநாட்டு அக்கிரமிப்பு என்பது கம்யூனிஸ்டுகளின் பணி! என்று கூறி மற்றவர்கள் ஒதுங்க முடியாது .
அது சுதந்திரத்தை நேசிக்கும் ஒவ்வொரு மனிதனும் மதம், இனம், மொழி தாண்டி ஒன்றிணைந்து போராடும் நிலைமை உருவாக்கும் .
அன்றைக்கு ஸ்டாலின்கிராட் ஆக்கிரமிப்புக்கு பாசிச ஹிட்லர் மண்ணை கவ்வியது போல், இன்று பாசிச கோமாளி டிரம்ப் ஈரானிடம் மண்ணை கவ்வி உள்ளார்