மோடி முன்னிலையில் எதிர்ப்பை காட்ட கூடாதா?

மோடி முன்னிலையில் ஸ்டாலின் திராவிட மாடல், தமிழகத்தின் பொருளாதார பங்களிப்பு, இந்திய ஒன்றிய அரசு என்று பேசியதை கண்டு கொதிக்கிறார் அண்ணாமலை.

திமுக எதிர்ப்பாளர்களும் இதில் என்ன குற்றம் கண்டுபிடிக்கலாம் என்று அறிக்கையில் விளக்கெண்ணையை ஊற்றி தடவிக் கொண்டிருக்கிறார்கள்.

இதைவிடக் கொடுமையாக மோடியை பாதுகாக்கின்ற திராவிட பவுன்சர்கள் என்று கருத்துப்படம் போட்டார்கள் பவுன்சர் கலாச்சாரத்தை அமைப்பிற்குள் கொண்டு வந்த உத்தமர்கள்.

இந்தியாவின் தேசத்தந்தை என்று அனைவரும் அழைக்கின்ற காந்தியை படுகொலை செய்த கோட்சேவை தூக்கிப் பிடிக்கிறார்கள் ஆர்எஸ்எஸ்காரர்கள்.

சென்னையில் மாநகராட்சித் தேர்தலில் கோட்சே ஆதரவு உமா மாமி பாஜகவின் அனைத்து கூட்டங்களிலும் கலந்துகொண்டு கும்மாளம் அடிக்கிறார்.

கூட்டத்தில் கலந்துகொண்டு ஜனநாயக பூர்வமாக மாற்றுக்கருத்து கூறுவதைக் கூட அனுமதிக்க முடியாது என்று பாசிஸ்டுகள் கூச்சல் போடுகிறார்கள்.

பாசிசத்தை வீழ்த்துவதற்கு திமுகவை ஒழிப்பது எந்தவகையிலும் பயனளிக்காது. கம்யூனிஸ்டுகள் செய்யவேண்டிய வேலையை திமுக செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது பாமரத்தனமும் முட்டாள்தனமுமாகும்.

3 COMMENTS

 1. திமுகவை ஒழிக்க சொல்லவில்லை. திமுக சரிகளை பாராட்டுங்கள். பாசிச எதிர்ப்பு முன்னனியில் இனைத்துகொளாளுங்கள்.
  இதெல்லாம் சரி.

  ஆனால் தவறுகளை கண்டுகொள்ளலாம் டாம் என்பது எந்த வகையில் சரி.
  இதுவரை ஒரே ஒரு லாக்கப் படுகொலையை கூட கண்டித்து ஒரு பதிவு போடாத உங்கள் அணுகுமுறை

  லாக்கப் படுகொலையை கண்டிக்க இயலாத புர்ர்ட்சியாளர்ஙள்.

  இதே புர்ர்ட்சியிளார்கள் அதிமுக ஆட்சியில் லாக்கப் படுகொலை நடந்தால் மட்டும் கொந்தளிப்பார்கள்.

  அதிமுக ஆட்சியில் நடந்தால் மனித உரிமை மீறல்.

  திமுக ஆட்சியில் நடந்தால் இந்த அரசமைப்பில் அரச பயங்கரவாதம் சகஜம்.

  திமுகவால் இதை மாற்ற முடியாது.

  அதிமுக ஆட்சியில் லாக்கப் படுகொலைக்கு கொந்தளித்தது சரி.

  திமுக ஆட்சியில் கொந்தளிக்காதது தவறு

  • https://makkalathikaram.com/seithigal/26-04-2022-lock-up-death-kavalduraiyin-athikara-thimir/ தாங்கள் இந்த பதிவை பார்க்கவும். மக்கள் அதிகாரம் இணையதளத்தை subscribe செய்யவும். அப்படி செய்தால் நாங்கள் போடும் பதிவுகள் அனைத்தும் படிக்க முடியும் நன்றி.

  • நண்பர் வேலுவுக்கு வணக்கம். இவர்கள் என்ன எழுதினாலும் குறை கண்டுபிடிப்பதே பிழைப்பான் வைத்திருக்கும் தாங்களும் தங்களை சார்ந்தவர்களும் மக்கள் அதிகாரம் அமைப்பின் இணையதளத்தை தொடர்ந்து படிக்க முயற்சிக்கவும். திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் எழுதியுள்ளார்கள். அதே நேரத்தில் சரியானதை அங்கீகரிக்கும் செய்துள்ளார்கள்.

   கடந்த காலங்களை மறந்துவிட்டு தலைவர்கள் சொல்வது தான் வேதவாக்கு என தலையாட்டி பொம்மையாக வாழாமல் சொந்தமாக சிந்திக்க பழகுங்கள். உங்கள் பிரச்சினை தீர்ந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here