டந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை பாஜகவின் தீவிர ஆதரவாளராகவும் இன்ஸ்டாகிராம் இன்ஃபுளுயன்சராகவும் இருந்தவர் தற்போதைய தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா. தவெக சார்பாக போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆகி அமைச்சராகவும் பொறுப்பேற்று இன்னும் ரீல்ஸ் மோகத்தில் இருந்து வெளிவராமல் தன்னுடைய ‘அசாத்திய திறமையை’ அரசுப் பள்ளி மாணவர்களிடம் காண்பித்துள்ளார்.

தவெக கட்சி விளம்பரங்கள் மூலமாகவும், இணைய கூலிப்படைகள் மூலமாகவும் மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் பிரபலப்படுத்தப்பட்டு பொய்யான வாக்குறுதிகள் மூலம் தமிழ்நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றி ஆட்சி செய்து வருகிறது. ஆட்சி அமைத்த முதல் 10 நாட்கள் அமைச்சர்கள் முதற்கொண்டு தவெகவின் அடிபொடிகள் வரை அரசு மருத்துவமனைகள், அரசுப் பள்ளிகள் வரை ஆய்வு மேற்கொண்டு ரீல்ஸ் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவேற்றியது கடும் எதிர்ப்பை உருவாக்கியது.

சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஒருபடி மேலேச் சென்று அரசு மருத்துவமனைகளின் நிர்வாகிகளுடன் உரையாடி வீடியோக்களை வெளியிட்டார். அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த உரையாடல் அவசியமும் ஆரோக்கியமும் தான். ஆனால் அதனை ரீல்ஸாக ஒளிபரப்புவதிலேதான் அவர்களின் விளம்பர வெறி வெளிப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அமைச்சர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளிளேயே சிகிச்சை எடுப்போம் என்றும் பேசினார் அருண்ராஜ் இதுவும் ரீல்சாக பரவியது.

சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கூறியது போல் இதுவரை ஒரு அமைச்சர் கூட அரசு மருத்துவமனையீல் சிகிச்சை மேற்கொண்டதாக தகவல் வெளியாகவில்லை. அப்படியிருந்தால் அதுவும் ரீல்சாக பரப்பப்பட்டிருக்கும். இவர்கள் செய்வது அனைத்தும் ரீல்ஸ் விளம்பர வெறிதானே தவிர மக்கள் மீதோ அரசு மருத்துவமனைகள் மீதோ துளியும் அக்கறை கிடையாது.

அமைச்சர் கீர்த்தனாவா? ரீல்ஸ் கீர்த்தனாவா?

அடுத்து ஆட்சிக்கு வந்த நாள் முதலே அரசுப்பள்ளியை குறிவைத்து தவெக தொண்டர்கள் என்ற பெயரில் விஜய் ரசிகர்கள் செய்யும் அலப்பறைகளும், அருவெறுப்பலும் பார்க்க சகிக்காத வண்ணம் உள்ளது. முதல்வர் விஜய் படத்தை மாட்டச் சொல்வது, விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்க வைத்து அதனை ரீல்ஸாக வெளியிடுவது என எல்லை மீறி செயல்படுகிறார்கள். அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளவர் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா. இவர் ஏற்கனவே ரீல்ஸ்-க்காக புகழ் பெற்றவர் தான் என்றாலும் அவருடைய தற்போதைய செயல் அனைவரையும் கோபப்படுத்தியுள்ளது.

எம்.எல்.ஏ-வாக வெற்றிப்பெற்ற அன்றே ஊடகங்களுக்கு இந்தியில் பேட்டியளித்து தனது பாஜக விசுவாசத்தை காட்டியவர் அமைச்சர் கீர்த்தனா. தொழிற்துறை சம்பந்தமாக தவறான தகவல்களை வெளியிட்டதுடன் அதுகுறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளிக்க துப்பில்லாமல் அதிகார தோரணையுடம் மிரட்டும் தொனியில் பதிலளித்தார். மேலும் முதலீடு குறித்த கேள்விக்கு “அந்த ரீல்ஸே போதுமே” என்று தான் வகிக்கும் பதவிக்கு துளியும் பொருத்தமில்லாமல் பதிலளித்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் அரசு மேள்நிலைப்பள்ளியில் தனது ரீல்ஸ் டீமுடன் ஆய்வுக்கு சென்றவர். ஒரு வகுப்பறைக்குள் நுழைந்து ‘ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஸ்கிரிப்ட்டுக்கு’ ஏற்றவாறு ஒரு மாணவியை அழைத்து கேள்வி எழுப்புகிறார். இந்த காட்சிகள் அனைத்தும் கேமிராவில் ரெக்கார்ட் செய்கிறது அவரது ரீல்ஸ் டீம். அதாவது அமைச்சரை க்ளோசப் லாங் ஷாட் என கேமரா அலைபாய்வதை பார்க்க முடிகிறது.

ஒரு மாணவியை அழைத்து ஆங்கில வார்த்தைக்கு பொருள் கேட்கிறார். மொத்த மாணவர்களும் பதிலளிக்கிறார்கள். இதனை அவர் எதிர்பாக்கவில்லை போலும். ஓகே என்று சொன்ன அவர் இன்னொரு கேள்வி எழுப்புகிறார் பதில் வராமல் அமைதிநிலவுவதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு “பார்த்தீங்களா என்றவாறு கீர்த்தனா ஆங்கில ஆசிரியரை பார்க்கிறார். உடனே தான் ஏதோ மேதாவி போல இதுபோல் நாங்களும் மனப்பாடம் செய்து ஒப்பித்தோம் என சொல்லி “ஸ்போக்கன் இங்கிலீஷ் தெரியுமா?” முதல் வரிசை பெண் மாணவியிடம் கேள்வி எழுப்புகிறார். குழந்தை தயங்கி நிற்கிறது. அதான் சொல்றேன் என்று அடுத்து அக்குழந்தையிடம் “வாட் இஸ் யுவர் பாதர்” என்று கேட்கிறார். இதெல்லாம் அமைச்சர் தானா என்பது போல் குழந்தை விழிக்கிறது. உடனே கீர்த்தனா மீண்டும் “பார்த்தீங்களா? ஸ்போக்கன் இங்கிலீஸ் தெரியல” என்கிறார். சுதாரித்துக் கொண்ட ஆசிரியர் அக்குழந்தையிடம் பயப்படாதே தைரியமா பேசு எனக் கூறிவிட்டு “வாட் இஸ் யுவர் பாதர் புரொபெஷன்” என்று கேட்டவுடன் தயங்காமல் அக்குழந்தை பதிலளிக்கிறது. உடனே தனது அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காகவே “இதெல்லாம் சரிங்க இதே பின் வரிசையில் கேட்டிருந்தால் ஒருவருக்கு பதில் தெரிந்திருக்காது” என்று ஆசிரியர்களுக்கு வகுப்பெடுக்கிறார் தற்குறி அமைச்சர்.

படிக்க:

 மூன்று வயது குழந்தையும் குற்றவாளியா!?

 பஞ்ச் டயலாக் மட்டும் போதாது முதல்வரே!

முதலில் தொழிற்துறை அமைச்சர் கேமரா சகிதமாக அரசுப் பள்ளிக்குள் சென்று வீடியோ எடுத்தது முதல் தவறு. அதனை மீடியாவிற்கு கொடுத்தது அடித்த தவறு. அதில் குழந்தைகளின் முகத்தை ப்ளர் செய்யாமல் பதிவிட்டது அதவிட மிகப்பெரிய தவறு. ஆனால் தான் அரசுப்பள்ளியின் தரத்தை ஆய்வு செய்தேன் என கூசாமல் சமூகவலைத்தில் பதிவிட்டுள்ளார் ரீல்ஸ் அமைச்சர்.

அவரது நோக்கம் என்ன? அரசுப் பள்ளி தரமில்லாமல் உள்ளது. அங்கு படித்தால் மாணவர்களுக்கு ஆங்கில அறிவு இருக்காது என்பதை தனது ரீல்ஸ் காணொளியின் மூலம் நிறுவியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அந்த காணொளியை சமூக வலைதளங்களில் பதிவு செய்ததன் மூலம் அக்குழந்தைகளின் சுயமரியாதையை பொதுவெளியில் சீர்குலைத்துள்ளார். இது அக்குழந்தைகளின் பெற்றோரையும் சங்கடப்பட வைத்திருக்கும். ஆனால் இதெல்லாம் அமைச்சர் கீர்த்தனாவுக்கு பிரச்சினையில்லை. தன்னுடைய பிரபலம் தான் முக்கியம்.

அமைச்சர் பதவி என்பது மக்களின் வரிப்பணத்தில் அவர்களுக்கு சேவை செய்வது. அதுபோல் அரசு பள்ளிகளின் மீது பொதுவெளியில் நன்மதிப்பை ஏற்படுத்த வேண்டுமே தவிர தவறான அபிப்பிராயத்தை உருவாக்கக் கூடாது. ஆனால் அமைச்சர் கீர்த்தனா அரசுப் பள்ள்ளியின் மீதுள்ள கொஞ்சநஞ்சமுள்ள நன்மதிப்பையும் கெடுத்துள்ளார். மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை உருவாக்குவதற்கு பதிலாக கேமரா முன்பு கூனிக்குறுக செய்துள்ளார்.

இதே அமைச்சர் தனியார் பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு தனியார் பள்ளிகளின் தரத்தை பொதுவெளியில் பேசுவாரா? செய்யமாட்டார். ஏனென்றால் ஆட்சிக்கு வந்த உடனே தவெக அரசு எந்த கேள்வியும் எழுப்பாமல் ஆயிரம் தனியார் பள்ளிகளை தொடங்க அனுமதி வழங்கியுள்ளது. அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்தால் தனியார் பள்ளிகள் கொள்ளையடிக்க முடியாதல்லவா? அதற்கு தான் அமைச்சர் கீர்த்தனா போன்றோர் மக்களின் வரிப்பணத்தில் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு தனியாருக்கு வேலை செய்கிறார்கள்.

தொழிற்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் அமைச்சர் கீர்த்தனா, சென்னைக்கு அருகில் திருவள்ளூர் கன்னிகைப்பேரில் 18 பேர் அம்மோனியா வாயு கசிவால் கொல்லப்பட்ட தனியார் இறால் பதப்படுத்தும் ஆலைக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ளவில்லை. தொழிலாளர்களின் படுகொலைக்கு காரணமாக ரீல்ஸ் போடவில்லை. இதிலிருந்தே இவர்களின் நோக்கத்தை புரிந்துக் கொண்டு பொதுவெளியில் அம்பலப்படுத்த வேண்டும். அரசு கொடுக்கும் சலுகைகளை பயன்படுத்திக் கொண்டு தனியாருக்கு வேலை செய்வதற்கு வெட்கமில்லையா என்று கேள்வி எழுப்ப வேண்டும். மக்கள் தங்கள் மொழியில் புரியவைக்கவில்லை என்றால் இதுபோன்ற ரீல்ஸ் அமைச்சர்கள் திருந்தப் போவதில்லை.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here