ந்து மத வெறியர்கள், இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்குச் சென்றாலும் கூட, தங்களின் சாதி வெறியை விடுவதாக இல்லை ; அப்படிச் சென்ற நாடுகளில் கூட தங்களுடைய சாதி வெறியை வெளிக்காட்டிக்கொள்ள தயங்குவதில்லை. இதற்கு தற்பொழுது உதாரணமாக வெளிவந்திருக்கிறது சியாட்டில் நகர மன்றத்தில் கொண்டுவரப்பட்ட சாதி ஒடுக்கு முறைக்கு எதிரான சட்டம்.

அமெரிக்காவின் நியுயார்க் மாகாணத்தில் உள்ள நகரம் சியாட்டில். இந்தியாவில் இருந்து இந்த நகருக்குச் சென்றுள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன சாதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் சாதிய ரீதியிலான ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

இந்த நகரத்தின் ஹோட்டல்களில், பொது போக்குவரத்தில் , சில்லறை விற்பனை நிறுவனங்களில் மற்றும் உணவகங்கள் போன்ற பொது இடங்களில் வேலைக்கு எடுப்பது, சம்பளம் கொடுப்பது, பதவி உயர்வு கொடுப்பது …. போன்றவற்றில் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுகிறது . மேலும் வீட்டு வாடகை, சொத்து விற்பனை ஆகியவற்றிலும் கூட சாதிய பாகுபாடுகள் நிலவுகின்றன.


இதையும் படியுங்கள்: ஒப்பந்தப்படி செய் என மிரட்டும் அமெரிக்கா; விசுவாசத்துடன் அணுமின் நிலையம் அமைக்கும்  மோடி அரசு!


இந்த நிலையில் தான் சியாட்டில் நகரின் நகர மன்றத்தில்,
சியாட்டில் நகர சபை உறுப்பினரான க்ஷாமா சாவந்த், பிப்ரவரி 21ஆம் தேதி அன்று சியாட்டிலின் பாகுபாடு எதிர்ப்புச் சட்டங்களில் சாதியைச் சேர்க்க ஒரு அவசரச் சட்டத்தை முன்மொழிந்துள்ளார். இது வாக்கெடுப்புக்கு விடப்பட்டு 6-1 என்ற வாக்கின் அடிப்படையில் சட்டமாக்கப்பட்டது.

இந்து அமைப்புகளின் எதிர்ப்பு

இந்து அமெரிக்கன் அறக்கட்டளை மற்றும் வட அமெரிக்காவின் இந்துக்களின் கூட்டணி போன்ற அமைப்புகள் இந்த சட்டத்தை எதிர்க்கின்றன.

எதிர்ப்பதற்கு இவர்கள் கூறும் காரணம் என்ன?
வெள்ளையர் அல்லாதவர் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிற மக்களை, ஏற்கனவே வெறுப்பிற்கும் ஒடுக்க முறைக்கும் உள்ளாக்கப்படுகிற மக்களை (அதாவது இந்துக்களை) இந்தச் சட்டம் புண்படுத்துகிறதாம்.

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் சாதி ரீதியாக அமெரிக்காவில் ஒடுக்கப்படுவதில்லை என்று இவர்கள் கூறவில்லை ; அப்படி ஒடுக்கப்படுவது தவறு என்றும் கூறவில்லை. இந்து மத வெறியர்கள் தங்களின் மனம் புண்படுவதால் இந்த சட்டத்தை எதிர்க்க கிளம்பி விட்டார்கள் . நாங்கள் நாடு கடந்து போனாலும் சாதி வெறியை விட மாட்டோம் என்கிறார்கள்.

சியாட்டில் நகரில் மட்டுமின்றி அமெரிக்காவின் பிறநகரங்களிலும் சாதி ஒடுக்குமுறை நிலவுகிறது.
அமெரிக்காவில் வேலை செய்வதற்காக செல்பவர்கள் மட்டும்தான் சாதி ரீதியாக ஒடுக்கப்படுகிறார்கள் என்பது இல்லை. அமெரிக்க கல்வி நிறுவனங்களில் கூட சாதி ரீதியான ஒடுக்கு முறைகள் இருக்கின்றன. எனவே தான் அவற்றிற்கு எதிரான முன்னெடுப்புகளும் செய்யப்பட்டு வருகின்றன.

அமெரிக்க கல்வி
நிலையங்களிலும் சாதி

சியாட்டில் நகர சபையில் இந்த சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பே, கடந்த 2019ம் ஆண்டு முதலே, இது போன்ற தீர்மானங்கள் அமெரிக்க கல்வி நிலையங்களில் இயற்றப்பட தொடங்கிவிட்டன. போஸ்டன் நகருக்கு அருகிலுள்ள பிராண்டீஸ் பல்கலைக்கழகத்தில் முதன் முதலில் இந்த தீர்மானம் இயற்றப்பட்டது. இதனையடுத்து கலிபோர்னியா மாநில பல்கலைக்கழக அமைப்பு, கோல்பி கல்லூரி, பிரவுன் பல்கலைக்கழகம் மற்றும் டேவிஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆகியவை இந்த தீர்மானத்தை இயற்றின.

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தனது பட்டதாரி மாணவர் சங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் சாதி ஒடுக்கு முறை குறித்த அம்சத்தை சேர்த்ததன் மூலம் 2021 இல் மாணவர் தொழிலாளர்களுக்கு சாதிப் பாதுகாப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்க கல்வி நிறுவனங்களிலேயே சாதி ரீதியான ஒடுக்கு முறை இருக்கிறது என்னும் பொழுது இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் சாதி ஒடுக்குமுறைகள் காரணமாக தற்கொலைகள் நிகழ்வது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.

இந்து மத வெறியர்கள் நாடு கடந்து சென்றாலும் சாதி வெறியை விடுவதில்லை என்பதில் இருந்து
இந்தியாவில் நிலவும் சாதி வெறியின் வீரியத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வருங்கால சமூகத்தை பாதுகாக்க இந்து மதவெறியர்களை வீழ்த்துவதற்கு மக்கள் ஒன்று பட வேண்டும்.

பாலன்

https://www.theguardian.com/us-news/2023/feb/21/seattle-ban-caste-based-discrimination

https://www-indiatoday-in.translate.goog/world/story/seattle-considers-historic-law-barring-caste-discrimination-2337120-2023-02-21?_x_tr_sl=en&_x_tr_tl=ta&_x_tr_hl=ta&_x_tr_pto=tc

1 COMMENT

  1. கட்டுரை சிறப்பு.

    இந்து மதவெறியர்கள் எங்கு சென்றாலும் விசத்தை கொட்டுகிறார்கள்.

    அமெரிக்காவின் தென்பகுதியில் கருப்பின மக்கள் மீதான ஒடுக்குமுறை அதிகம்.

    கருப்பின மக்கள் பல உணவகங்களில், தங்கும் ஹோட்டல்களில் சாப்பிட, தங்க இடம் மறுக்கிறார்கள்.

    அதனால் கருப்பின மக்கள் எங்கு தங்கலாம்? எங்கு உணவருந்தலாம் என 1936 துவங்கி 1964 வரை green book என்ற பெயரில் கையேடு தயாரித்து வெளியிட்டார் ஒருவர். வெள்ளையின வெறிக்கு அந்த புத்தகம் சாட்சியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here