நாடு முழுவதும் தரகு முதலாளிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சி சாராத நடுநிலை என்ற பெயரில் ஆளும் வர்க்கத்திற்கு சாதகமாக செயல்படும் ‘நடுநிலை’ முதலாளிகள் கையில் தான் ஊடகங்கள் சிக்கிக் கிடக்கின்றன.
சமூக ஊடகங்களில் நடுநிலை என்ற பெயரில் ஏதாவது ஒரு அரசியல் கட்சியை ஆதரித்து அதற்குப் பொருத்தமான கருத்தாக்கத்தை உருவாக்குவது என்று செயல்படுகின்ற ஊடகங்கள் இன்னொரு புறம் உள்ளது.
இந்த சூழலில் சுதந்திரமாக செயல்படுகின்ற மாற்று ஊடக மையத்தின் தேவை என்று அதிகரித்துள்ளது. அவை வெறும் மாற்று ஊடகமாக மட்டும் இல்லாமல் மாற்றத்திற்கான ஊடகமாகவும் செயல்படுவது காலத்தின் கட்டாயம்.
அந்த வகையில் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் நடத்துகின்ற மே தின விழாவில் அனைவரும் கலந்துக் கொள்வோம்.











