இந்தியாவில் மத சுதந்திரத்திற்கு அதிகரிக்கும் ஆபத்து:

கேள்விக்குறியாகும் சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகள்

மஹாராஷ்டிரா அரசு 2013 ம் ஆண்டு இயற்றிய மாத்ரீக தடுப்பு சட்டத்தின் கீழ் உள்நோக்கத்தோடு தடை செய்யப்பட்ட கிறிஸ்துவ பிரார்த்தனை கூட்டத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது மும்பை உயர்நீதிமன்றம்

மகாராஷ்டிரா பொது அறக்கட்டளைகள் சட்டம், 1950′-இன் கீழ் பதிவு செய்யப்பட்ட Hope of Glory Ministry Trust சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மும்பை காவல்துறை மற்றும் அரசு நிர்வாகம் சட்டவிரோதமான முறையிலும்,பொதுமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும் செயல்பட்டுள்ளது. என்பதை நீதிபதிகள் Madhav J. Jamdar & Pravin S. Patil, தங்கள் உத்தரவில் தெளிவுப்படுத்தியுள்ளனர்

வழக்கின் பின்னணி என்ன ?

Hope of Glory Ministry Trust மகாராஷ்டிரா பிரார்த்தனை விழா – 2026′ என்ற தலைப்பில் மார்ச் 13 முதல் 15 வரையில் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி கோரி MIDC-யிடம் விண்ணப்பித்துள்ளனர்.

அதற்காக இடப் பயன்பாட்டுக் கட்டணமாக (occupation charges) ரூ. 1,69,920 மற்றும் கூடுதலாக வைப்புத்தொகை ரூ. 1,44,000 ஆகிய தொகைகளையும் அந்த Trust -ன் தலைவர் Dilip Bhore செலுத்தியுள்ளார்.

அதைத்தொடர்ந்து அந்த நிகழ்வை நடத்துவதற்கான அனுமதியை MIDC (Maharashtra Industrial Development Corporation) வழங்கியிருந்தது.

டாக்டர் பால் தினகரன் மற்றும் குடும்பத்தினர் 3 நாள் பிராத்தனை கூட்டத்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவில் மத சுதந்திரத்திற்கு அதிகரிக்கும் ஆபத்து

வருவாய்த்துறை, பஞ்சாயத்து நிர்வாகம், காவல்துறை தீயணைப்புத்துறை அனைத்து இடங்களிலும் பெறப்பட்ட ஒப்புதலைத் தொடந்து 07-03-026 அன்று நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

ஆனால், Sangli Rural Police Station சார்பில் வழங்கப்பட்ட ஒப்புதல் 09-03-2026 அன்று திடீரென்று ரத்து செய்யப்படுகிறது.

அதன்பிறகு மீண்டும் Hope of Glory Ministry Trust சார்பில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை அணுகி 12-03-2026 நிகழ்ச்சியை நடத்துவதற்கு மீண்டும் அனுமதியை பெறுகிறார்கள்.

திட்டமிட்டபடி, 13-03-2026 அன்று மகாராஷ்டிரா பிரார்த்தனை விழா – 2026 Kavalapur Airport Ground, Tasgaon – Sangli Road, Sangli என்ற இடத்தில நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 50 ஆயிரம் மக்கள் அந்த பிராத்தனைக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

எந்தவிதமான சட்டம் ஒழுங்கு பாதிப்போ, பிற மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான பேச்சுக்களோ இல்லாத நிலையில் 14-03-2026 அன்று அதிகாலை 2 மணிக்கு நிகழ்ச்சி நடத்துவதற்கான அனுமதியை Sangli Rural Police Station மீண்டும் ரத்து செய்கிறது.

அதோடு நிற்கவில்லை..

உள்ளூரில் உள்ள இந்துத்துவ அமைப்புக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்நிலையத்தில் Black Magic Act-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது

Maharashtra Prevention And Eradication Of Human Sacriice And Other Inhuman, Evil And Aghori Practices And Black Magic Act, 2013 (“Black Magic Act”)-ன் கீழ் FIR-ம் பதிவு செய்யப்படுகிறது.

https://x.com/SanatanPrabhat/status/2032835134572171767?s=20

ஆனால் முதல் தகவல் அறிக்கையை இன்னும் இணையத்தளத்தில் மும்பை காவல்துறை பதிவேற்றம் செய்யவில்லை.

கிறிஸ்துவ பிராத்தனை நிகழ்ச்சி நடத்தியதற்காக மகாராஷ்டிராவின் (“Black Magic Act”)-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் வழக்கு இது.

இந்த நேரத்தில் குஜராத்தைச் சேர்ந்த Ramesh Madhukar Modak alias Shivkrupanand Swami என்பவர் மீது Black Magic Act-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் (Rohan Vishwas Kulkarni Vs The State of Maharashtra-Criminal Writ Petition No. 2595 of 2023) மும்பை உயர்நீதிமன்றம் 02.04-2025 அன்று பிறப்பித்த உத்தரவில் என்ன கூறியுள்ளது என்பதை நினைவூட்டுவது அவசியம்.

அதில் கீழ்கண்டவாறு கூறியுள்ளது மும்பை உயர்நீதிமன்றம் The Black Magic Act was enacted to curb harmful practices that posed serious risk to individuals and society, including human sacrifices, fraudulent rituals, and psychological exploitation; and explicitly excludes legitimate religious practices, the sharing of traditional knowledge, and cultural or artistic expressions

அதாவது..மகாராஷ்டிராவின் கருப்பு மந்திரச் சட்டம் சட்டப்பூர்வமான மத மரபுகளைத் தண்டிப்பதற்காக அல்ல, மாறாக தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பம்பாய் உயர் நீதிமன்றம் தெளிவாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

இருந்தபோதும், உள்நோக்கத்துடன் மும்பை அரசு மற்றும் மும்பை காவல்துறை Hope of Glory Ministry Trust சார்பில் பிரார்த்தனை நிகழ்ச்சி நடத்தியதற்காக Black Magic Act-ன் கீழ் வழக்கை பதிவு செய்துள்ளது

நிகழ்ச்சி நடத்துவதற்கான அனுமதியை 14-03-2026 அன்று திடீரென்று நள்ளிரவு ரத்து செய்த்தை எதிர்த்து Hope of Glory Ministry Trust சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதை அவசர மனுவாக நீதிபதிகள் Madhav J. Jamdar &Pravin S. Patil அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

13-ம் தேதி நடத்தப்பட்ட பிரார்த்தனை நிகழ்ச்சியில் பிற மதங்களையோ, பிற மதத்தவர்களின் வழிபாட்டுத் தலங்களையோ அல்லது அவர்களின் மத நம்பிக்கைகளையோ விமர்சிக்கும் வகையிலான கருத்துகளும் முன்வைக்கப்படவில்லை என்பதை நீதிபதிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

படிக்க:

 முடக்க நினைத்த மத வெறியர்களுக்கு பதிலடி கொடுத்த ஜெமிமா ரோட்ரிக்ஸ்!

 மதமாற்ற தடை சட்டம்: இந்தியாவின் மத சுதந்திரத்தின் மீதான இருகட்சி தாக்குதல்!

அத்தோடு, 2026 மார்ச் 7-ஆம் தேதி குறிப்பிட்ட நிகழ்விற்கு அனுமதி அளித்துவிட்டு, பின்னர் 2026 மார்ச் 9-ஆம் தேதி அந்த அனுமதியை ரத்து செய்து, மீண்டும் 2026 மார்ச் 12-ஆம் தேதி அனுமதி அளித்து, இறுதியாக நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே, 2026 மார்ச் 14-ஆம் தேதி அதிகாலை 02:00 மணிக்கு மீண்டும் அந்த அனுமதியை ரத்து செய்திருப்பது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்டவிரோதமான முறையிலும், உள்நோக்கத்துடனும் (mala fide) செயல்படுகிறார்கள் என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.

குறிப்பிட்ட அந்த நிகழ்விற்காக அங்கு திரண்டிருந்த பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன என்பது மிகத் தெளிவாகிறது,” என்று நீதிபதி அமர்வு தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது

இந்தியாவில் கிறிஸ்துவ திருச்சபைகள், தேவாலயங்கள் மீது வலதுசாரி மற்றும் இந்துத்துவ அமைப்புக்கள் கொடூரமான தாக்குதல் நடத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில் Black Magic Act-ன் கீழ் வழக்கை பதிவு செய்து புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்துள்ளது மஹாராஷ்டிரா அரசு

பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான தாக்குதல்கள், அழுத்தங்கள் அதிகரித்து வருவதை மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது

உண்மையில் கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களை மட்டும் நசுக்கும் வகையில் உள்நோக்கத்தோடு அரசும்,காவல்துறையும் செயல்படுவது மத சுதந்திரத்திற்கு மட்டுமல்ல மனித வாழ்வுக்கே ஆபத்து தான்

அரவிந்தக்ஷ்சன்

முகநூல் பதிவு 

3 COMMENTS

  1. இந்தியாவில் மத சுதந்திரத்திற்கு அதிகரிக்கும் ஆபத்து !

    மத சுதந்திரத்தை பறிக்கும் பிளாக் மேஜிக் ஆக்ட் மகாராஷ்டிராவில் எப்படி நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்து ரத்து செய்துள்ளார்கள் ரத்து செய்துவிட்டு அனுமதி கொடுத்துள்ளார்கள் நிகழ்ச்சி நடக்கும்போது ரத்து செய்துள்ளார்கள் என்று முகநூல் செய்தி பதிவு செய்துள்ளது இது மத சுதந்திரத்துக்கு மட்டும் இல்ல மனித சுதந்திரத்திற்கு எதிரானது இந்த மேஜிக் பிளாக் ஆக்ட் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது

  2. காவி பாசிஸ்டுகளும் அதிகார வர்க்க பாசிஸ்டுகளும் மத சிறுபான்மை சமூகத்தை இந்தியாவில் அடித்து ஆட ஆரம்பித்தது விட்டார்கள்.
    ஒன்று காவிகள் மூலம் கலவரம் படுகொலைகளை அரங்கேற்றுவது.
    இரண்டு அதிகார வர்க்க பாசிஸ்டுகள் மூலம் சட்டபூர்வமாக கைது ,ரத்து செய்வது என்பதை தொடர்ந்து செய்கின்றனர்.
    இவர்கள் இயேசு அழைக்கிறார் என்று சென்றால் கலவரம் உருவாக்கப்படும்.
    கம்யூனிஸ்ட் அழைப்பை ஏற்று வந்தால் இந்த மக்கள் பாதுகாக்கப்படுவார்கள்.

  3. இந்தியா என்பது
    பல இனங்களும் மதங்களும் மொழிகளும் கலாச்சார பண்பாடுகளையும் கொண்டது,
    பார்ப்பனிய கும்பல்கள் இதனை ஒழித்துக் கட்டி விட்டு,,
    இயற்கைக்கு ஒவ்வாத, முரணான இந்து ராஷ்டிரத்தை அமைக்க வேண்டும் என்ற செயல்பாட்டில், அதிகாரத்துவ போக்கில் நாட்டை நடத்துகின்றன அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் இது ஆபத்தான ஒன்றாக நகர்ந்து கொண்டுள்ளது இதில் பாதிக்கப்படக்கூடிய மக்கள் பாசிச அடக்குமுறையை ஒடுக்குமுறையை வீழ்த்த “”பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி”” என்ற வகையில் எதிர்த்து களமாட ஒற்றைப் புள்ளியில் ஒன்றிணைய வேண்டும் என்பதே தற்போதைய எதார்த்த நிலை…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here