கல்வியை கார்ப்பரேட்- காவி மயமாக்கும் மாநில உரிமைகளை பறிக்கும் பல்கலைக்கழக மானிய குழுவின் புதிய வரைவு விதிகளைத் திரும்பப்பெறு!
என்ற தலைப்பில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தமிழகம் தழுவிய அளவில் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்கள், மாணவர்களிடம் மற்றும் மக்களிடம் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது.


அதனுடைய இறுதியாக கடந்த
03- 02- 2025 அன்று சென்னை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டத்தில் காலை 11 மணி அளவில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.


இந்த ஆர்பட்டத்திற்கு வந்தவர்களை வரவேற்று வரவேற்புரையாற்றினார் தோழர். தமிழ்ச்செல்வன் மாநில செயற்குழு உறுப்பினர் பு.மா.இ.மு. மேலும் இந்த ஆர்பட்டத்திற்கு தோழர் மணியரசன் மாநில செயற்குழு உறுப்பினர் பு.மா.இ.மு. அவர்கள் தலைமை தாங்கினார்.

ஆர்பாட்டத்தில் கண்டன உரையாக
பேராசிரியர், சிவக்குமார் ஒருங்கிணைப்பாளர், மக்கள் கல்வி கூட்டியக்கம் தமிழ்நாடு,
தோழர் இந்திர குமார் தேரடி, ஊடகவியலாளர்.
தோழர் மதுர் சத்யா, துணைத் தலைவர், தென்சென்னை, ISCUF.
தோழர் வளர்மதி, பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம், சென்னை.
தோழர் சுதா காந்தி, வழக்கறிஞர், இளைஞர் அரண், சென்னை.
தோழர் அரவிந்தசாமி, மாநில செயலாளர், SFI.
தோழர் மணிகண்டன், தென்சென்னை மாவட்ட செயலாளர், AISF.
தோழர் பேரன்பு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர், TSF.
தோழர் சஞ்சய், திக மாணவர் அணி, சென்னை.
தோழர் ச.அன்பு, மாநில பொதுச் செயலாளர், பு.மா.இ.மு. தமிழ்நாடு.
ஆகியோர் UGC யின் புதிய வரைவு அறிக்கை என்பது ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்வியை பறிக்கும் வகையிலும் கல்வியின் மீதான மாநில அரசின் உரிமை பறிக்கும் வகையிலும் கல்வியில் இந்துத்துவா கருத்துக்களையும் இந்துத்துவாவாதிகளையும் சட்டபூர்வமாக திணிக்கும் வகையில் யுஜிசி புதிய வரைவு அறிக்கையை வெளியிட்டு உள்ளது எனவே இந்த அறிக்கையை உடனடியாக பாசிச மோடி அரசு, UGC திரும்பப்பெற வேண்டும் என்பதையும் கல்வி உரிமை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து பேராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.
இறுதியாக தோழர். பால்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர், பு.மா.இ.மு. அவர்கள் நன்றி உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இளைஞர்கள் கலந்து கொண்டு யுஜிசி புதிய வரைவுக்கு எதிராக தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.
தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தமிழ்நாடு- 9500792976