அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக கிராமசபை தீர்மானம்!

அரும்பனூர் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

ன்றிய அரசின் டங்ஸ்டன் சுரங்கம் அமைவதை கண்டித்து….

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி கிராமத்தில் டங்ஸ்டன் சுரங்கம் ஏற்படுத்தி கனிம வளங்களை கொள்ளையடிக்க பாசிச ஒன்றிய அரசு 5000 ஏக்கர் பரப்பளவை கொலைக்கார கார்ப்பரேட் கனிமவள கொள்ளைக்காரன் மேலும் 13 அப்பாவிகளை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்திற்கு ஏலம் விட்டுள்ளது.

ஒன்றிய அரசு டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை திரும்ப பெறக்கூறியும் தமிழ்நாட்டு இயற்கை வளங்களையும், மக்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசுக்கு சிறப்பு சட்டம் நிறைவேற்றி நடவடிக்கை எடுக்க கோரியும் நமது மக்கள் அதிகார தோழர்கள், தோழமை கட்சி நண்பர்களுடன் இணைந்து யா.ஒத்தக்கடை மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களுக்கு சென்று கிராமசபை கூட்டத்தில், டங்ஸ்டன் எனும் பேராபத்தை பற்றி விளக்கி தீர்மானம் நிறைவேற்றினர்.

இதில் மக்கள் அதிகார மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் த.சரவணன் அவர்கள் 23.11.2024 அன்று அரும்பனூர் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் உரையாற்றினார்.

உடன் மதுரை மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் க.காளிதாஸ் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகி பிலால்ராஜா கலந்துகொண்டு உரையாற்றினார்.

தகவல்:

மக்கள் அதிகாரம்
மதுரை மாவட்டம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here