கண்டன செய்தி: திருக்கருகாவூர் தலித் மக்கள் மீது தடியடி! சீர்காழி போலீஸ் அராஜகம்!

கடந்த 5 ம் தேதி அன்று மக்கள் அதிகாரம், விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக சீர்காழி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் 300 க்கும் மேற்பட்ட மக்களை திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.

யிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திருக்கருகாவூர் தலித் மக்கள் மீதான அடக்கு முறையை வன்மையாக கண்டிக்கின்றோம்.

சீர்காழி வட்டம் திருக்கருகாவூர் கிராமத்தில் தலித் மக்கள் வசிக்கின்ற பகுதியில் ஆதிக்க சாதியினர் சுடுகாடு இருந்து வருகிறது.

இங்கு பிணம் எரிக்கும் போதும் புதைத்த பின்பும் குடலை பிரட்டும் துர்நாற்றம் ஏற்பட்டு குழந்தைகள், சிறுவர்கள் சாப்பிட முடியாமல் தூங்க முடியாமல் தண்ணீர் குடிக்க கூட முடியாமல் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள்.

எனவே இந்த சுடுகாட்டை மாற்று இடத்தில் அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரி தலித் மக்கள் 5 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறார்கள்.

மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், காவல்துறை அதிகாரிகள் மூலம் பல சுற்று பேச்சுவார்த்தை நடந்தும் தீர்வு கிடைக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 5 ம் தேதி அன்று மக்கள் அதிகாரம், விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக சீர்காழி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் 300 க்கும் மேற்பட்ட மக்களை திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.

இந்நிலையில் இன்று (09.04.2025) காலையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீஸ் கிராமத்திற்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி அராஜகமாக கைது செய்தது.

சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொது ஜனங்கள் கைது செய்யப்பட்டு சீர்காழி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள பத்மாவதி மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

அதன் பிறகு இதனைக் கண்டித்து மக்கள் அதிகாரம், ஜனநாயக சக்திகளும், பொதுமக்களும் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சீர்காழி கொள்ளிடம் முக்கூட்டு பகுதியில் சாலை மறியல் செய்து கைதாகி உள்ளனர்.

இவர்களோடு இந்தப் போராட்டத்தை வழி நடத்திய மக்கள் அதிகாரம் மாநில துணை செயலாளர் தோழர் பாலு, மற்றும் விவசாயி விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் தோழர் ரவி, திருக்கருகாவூர் கிளை செயலாளர் தோழர் இனியன் மற்றும் தோழர்களும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மக்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து சுடுகாட்டை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் ‌

அதனை விடுத்து அதிரடியாக பொதுமக்களை கைது செய்வதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

தோழர் பாலு,
துணைச் செயலாளர்.
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here