மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம், தற்காலிகமாக நிறுத்திவைப்பு! சென்னை காசிமேடு மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் வெல்லட்டும்!
கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!
தமிழக அரசையும் மீன்வளத் துறையையும் வன்மையாக கண்டிக்கின்றோம்! என்ற முழக்கத்தை முன்வைத்து, ஆந்திர மாநிலத்தில் ஆறு மாதங்களாக சிறைபிடிக்கப்பட்டுள்ள 8 மீன்பிடி விசைப்பலகைகளை உடனடியாக உபயோகிக்க கோரி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் கடந்த 20ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இன்று கடல், விசைப்படகு, பைபர் படகு, மீன் மார்க்கெட் என அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. ஒட்டுமொத்த மீனவர்களும் ஓர் குடையின் கீழ் மேற்படி கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 20.11.2026 முதல் காலவரையற்ற போராட்டத்தை துவங்கியுள்ளனர்.
ஒரு நாள் படகு செல்லவில்லை என்றால் 6 முதல் 8 கோடி வரை எப்படி ஏற்படும் இதுவே சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் படகு செல்லவில்லை என்றால் 60 முதல் 80 கோடி வரை எப்படி ஏற்படும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு முன்பெல்லாம் ஆந்திர கடலோர எல்லையை பலமுறை மீனவர்கள் தங்களை அறியாமல் கடந்துள்ளனர். அப்போதெல்லாம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் சிறைபிடிக்கப்பட்ட படகு பேசிவிட்டு திருப்பி அனுப்பப்படும். ஆனால் தூய சக்தி என்று சொல்லக்கூடிய த.வெ.க பொறுப்பேற்ற சில நாட்களிலேயே எட்டு படகுகள் சிறைபிடிக்கப்பட்டன. ஆனால், இது சம்பந்தமாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையோ அல்லது நடவடிக்கையோ இந்த அரசு மேற்கொள்ளவில்லை.
இன்று(22.11.2026) அடுத்த கட்ட போராட்டத்தை எப்படி கொண்டு செல்வது என அனைத்து மீனவ மற்றும் வியாபாரிகள் சங்கம் ஒருங்கிணைத்து ஆலோசனை கூட்டம் நடத்தி வந்தனர்.
3 நாட்கள் போராடிய மீனவர்கள் பார்க்க வராத மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் அவர்களும் சரி, RK நகர் சட்டமன்ற உறுப்பினரும், நிதி அமைச்சருமான மரிய வில்சனும் போராடும் மீனவர்களை எட்டி கூட பார்க்கவில்லை.
மீனவ சங்கங்கள் ஒண்றினைந்து ஆலோசனை நடத்தி அடுததக்கட்ட என்ன மாதிரியான நடவடிக்கையை கொண்டு செல்லலாம் என்ற செய்தி அறிந்த மரிய வில்சன் அவர்கள் காலை முதல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மீனவ பிரதிகளுடன் பேச்சு வார்த்தை என்று பறக்க ஆரம்பித்தனர்.
அதன் பிறகு போராட்ட களத்திற்கு வந்த மரிய வில்சன் ஒரு சில ஆசை வார்த்தைகளை கூறி வருகின்ற செவ்வாய்க்கிழமை (24.11.2026) உரிய முடிவு அறிவிக்கப்படுன் என தெரிவித்தார். அதனை மரியாதை நிமித்தமாக ஏற்றுக்கொண்ட மீனவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.
ஆனால், ரீல்ஸ் ஆட்சியில் செய்வதுபோல் மீனவ சமூகத்திடம் பொய் கூறி ஏமாற்ற நினைத்தால், எங்களுடைய போராட்டம் மீண்டும் தொடரும் என அறிவித்துள்ளனர்.
மக்கள் அதிகாரம்
ஊடகக்குழு






