
2025 – 2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை ஒன்றிய பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்தது. அதில் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகைகள் அளிக்கும் வகையிலும் சாதாரண உழைக்கும் மக்களுக்கு எந்த வித சலுகைகளும் இல்லாமல் குறிப்பாக தமிழகத்தை வஞ்சிக்கும் வகையிலும் பட்ஜெட் இருப்பதால்…
மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தலைமையில் இன்று (06.02.2025) காலை 12 மணியளவில் திருச்சி தில்லைநகர் 7 வது கிராஸில் உள்ள ஒன்றிய அரசின் பாஸ்போர்ட் கிளை அலுவலகம் முன்பு ஜனநாயக அமைப்புகளுடன் இணைந்து ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்தும், பட்ஜெட் நகலை எரித்து போராட்டம் நடத்தப்பட்டது.
காவல்துறையினர் உடனடியாக பட்ஜெட் நகலை பிடுங்கியதால் தோழர்கள் தனித்தனியாக சென்று நகலை கொளுத்தி முழக்கமிட்டனர்.
போர்குணத்துடன் போராடிய தோழர்கள் அனைவரையும் காவல்துறை சுற்றி வளைத்து கைது செய்தது. தோழர்களின் போராட்டத்தால் அப்பகுதியே பரபரப்பாக மாறியது. கைது செய்யப்பட்ட தோழர்கள் அனைவரும் தற்போது மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இப்போராட்டத்திற்கு ம.க.இ.க மாவட்டச் செயலாளர் தோழர் ஜீவா தலைமை தாங்கினார்.
ம.க.இ.க மையக் கலைக்குழு பொறுப்பாளர் தோழர்.லதா, பு.ஜ.தொ.மு மாவட்ட மாவட்டத் துணைத் தலைவர்கள் தோழர்கள் ஆனந்த், செந்தில், ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் தோழர்.சிவா, மாவட்டச் செயலாளர் தோழர்.மணலிதாஸ், முன்னாள் தலைவர் தோழர்.செல்வராஜ், மக்கள் அதிகாரம் மாவட்ட பொருளாளர் தோழர்.கார்க்கி, ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர்.சம்சுதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர்கள் விடுதலை, முரசு, ரெட் பிளாக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர்.A.C.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் ம.க.இ.க, பு.ஜ.தொ.மு, ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம், ரெட் பிளாக் கட்சி தோழர்கள் கைதாகினர்.
தகவல்:
ம.க.இ.க
பு.ஜ.தொ.மு
திருச்சி மாவட்டம்.
தொடர்புக்கு: 8056905898.