தில்லை சிற்றம்பல மேடையில் மீண்டும் தமிழ் | போராட்டம் தொடர்கிறது.

சிதம்பரம் நடராசர் கோவில் பொதுமக்களின் சொத்து தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல அதை பாதுகாப்பது அனைவரின் கடமை.

0

தில்லை சிற்றம்பல மேடையில் மீண்டும் தமிழ்|  போராட்டம் தொடர்கிறது.


சிதம்பரம் சிற்றம்பல மேடையில் பக்தர்கள் ஏறி வழிபடுவதற்கு தில்லை தீட்சித பார்பனர்கள் விதித்திருந்த தடையை அகற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பக்தர்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டி உத்தரவிட்ட தமிழக அரசின் துணிவான இந்த நடவடிக்கை அடுத்ததொரு மைல்கல்.

தமிழ் வழிபாட்டு உரிமைக்காக மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் தொடர்ந்து போராடிவருகின்றது. இந்த போராட்டம் நந்தன் காலத்திலிருந்து ஆயிரம் ஆண்டுகாளாய் தொடர்கிறது. பழமை பிற்போக்குத் தனங்களை முடிவுக்கு கொண்டுவந்தாக வேண்டும். இது கன்னித்தீவு கதையல்ல. முடிவு என்ற ஒன்று நிச்சயம் உண்டு.

பார்க்க:

♦  தில்லையில் தமிழ் முழங்குவோம் | மக்கள் அதிகாரம் | LIVE 

அதிகார பீடத்திலும், அரசு இயந்திரத்திலும் தமக்கிருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி தீட்சித பார்ப்பனர்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றும் வாய்ப்புகள் உள்ளதை கவனத்தில் கொண்டு அடுத்தடுத்த தொடர் நடவடிக்கைகளில் முன்னெச்சரிக்கையுடனும், முன்முயற்சியுடன் ஈடுபடுவோம்.

தமிழக அரசுஅமைத்ததுள்ள விசாரணை குழுவை வரவேற்று துணைநிற்போம். விசாரணை குழுவிடம் தீட்சதர்களின் அடாவடி, அத்துமீறல், கிரிமினல் நடவடிக்கைகள், சொத்துகுவிப்பு குறித்து பொதுமக்கள் அனைவரும் சாட்சியமளிக்க ஊக்கப்படுத்தி தீட்சதர்களின் ஆதிக்கத்திற்கு முடிவுகட்டும் போராட்டத்தை தொடர்வோம்.

 

அரசியல்சட்டமும், அரசாணைகளும் எங்கள் குடுமிமுடிக்கு சமம் என்று தீட்சத பார்ப்பனர்கள் கொட்டமடிக்கின்றனர். காவல்துறை, நிர்வாகதுறை உள்ளிட்ட அரசு இயந்திரத்தின் பரிவான செயல்பாட்டில்தான் தீட்சத பார்பனர்கள் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்.

சிதம்பரம் நடராசர் கோவில் பொதுமக்களின் சொத்து தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல அதை பாதுகாப்பது அனைவரின் கடமை. சிதம்பரம் நடராசர் கோவிலை நிரந்தரமாக தீட்சித பார்பனர்களிடமிருந்து மீட்டு இந்துசமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர அனைத்து வழிகளிலும் முயற்சிகள் மேற்கொண்டு வெற்றியை நிலைநிறுத்த தொடர்ந்து போராடுவோம்.

“தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்று
நாயன்மார், ஆழ்வார்களைப்போல பார்ப்பன அடிவருடிகளளாக மக்கள் இருப்பார்கள் என்ற திடமான நம்பிக்கையில்தான் அவர்கள் காலம் கழிக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் தீட்சத பார்ப்பனர்களின் கொட்டமடக்குவது, நந்தன் நுழைந்த வாயில் தீண்டாமை சுவரை அகற்றுவது என்ற நடவடிக்கையை நோக்கி நகர்வோம்.

இராவணன்
மாநில இணைப் பொதுச்செயலர்
மக்கள் கலை இலக்கியக்கழகம்
தமிழ்நாடு
19-5-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here