ரு உயிர் போய் விடும் என்றால் மட்டுமே சட்ட முறைகளைப் பின்பற்றி துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய காவல்துறை “கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை, மக்கள் போலீசை விரட்டினர்” என்று கூறி துப்பாக்கி சூட்டை எப்படி நியாயப்படுத்த முடியும்?
இந்தக் கேள்விகள் எதற்கும் சிபிஐ இன் குற்றப்பத்திரிகையில் விடை இல்லை. மேற்கண்ட குற்ற இறுதி அறிக்கையை விட மோசமான, பொறுப்புணர்வற்ற, புலனாய்வே இல்லாத ஒரு குற்றப் பத்திரிக்கையை நாடு இதற்கு முன் கண்டிருக்காது. இந்திய வரலாற்றிலேயே, மோசமான குற்றப் பத்திரிக்கை என இதைச் சொல்லலாம். குழந்தைகள் எழுதுவது போன்று கதை எழுதப்பட்டுள்ளது.

காவல்நிலையத்தின் நான்கு சுவர்களுக்குள் நடந்த ஜெயராஜ் – பென்னிக்ஸ், கொலையில் தொடர்புடைய காவல்துறையினர் இன்றுவரை சிறையில் உள்ளனர். ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடியில் நடைபெற்ற இந்த “ இரண்டாம் ஜாலியன் வாலாபாக் படுகொலை” அறைக்குள் நடக்கவில்லை. உலகமே பார்க்க, பட்டப்பகலில்,தொலைக் காட்சி கேமராக்கள் முன்பு நடந்தது. இரண்டு வழக்குகளையும் சிபிஐ தான் விசாரித்திருக்கிறது. ஸ்டெர்லைட் படுகொலை வழக்கு ஒரு சார்பாக முடிக்கப்பட்டதன் காரணம், அனில் அகர்வால் மோடி அரசுக்கு நெருக்கமானவர் என்பதுதான். அன்று அந்த துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்திப் பேசிய ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி என்பதையும் இங்கே நினைவு படுத்துகிறோம்.

தூத்துக்குடி படுகொலை எப்படி திட்டமிட்டு நடத்தப்பட்டதோ, அதே போல இந்த குற்றப் பத்திரிகையும் திட்டமிட்டே ஸ்டெர்லைட்டுக்கும் அதன் கையாட்களுக்கும் ஆதரவாக தயாரிக்கப்பட்டிருக்கிறது.

மாநில – ஒன்றிய அரசுகளையும், மாசு கட்டுப்பாட்டுத் துறையையும், வருவாய்த்துறை, காவல்துறையையும் கைக்குள் போட்டுக் கொண்டு, தூத்துக்குடியை நஞ்சாக்கிய அனில் அகர்வாலின் கைக்குள் சிபிஐயும் அடக்கம்” என்ற உண்மை இந்த குற்றப்பத்திரிகையிலிருந்து தெரியவருகிறது.
சிபிஐ இன் கடுகளவும் நேர்மையற்ற உண்மைக்குப் புறம்பான இந்தக் குற்றப்பத்திரிகையை நாங்கள் நிராகரிக்கிறோம். நேர்மையான விசாரணை கோருகிறோம். நீதிக்கான எங்களது போராட்டத்தை அனைத்துக் கட்சிகளும் தமிழக மக்களும் ஆதரிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here