அன்பார்ந்த மாணவர்களே! இளைஞர்களே! பேராசிரியர்களே! மற்றும் வழக்கறிஞர்களே! உங்கள் அனைவருக்கும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்!

இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று நம்பிக் கொண்டுள்ளீர்கள்!  ஆனால் 1947 முதலே இந்தியா ஒரு போலி ஜனநாயக நாடாகத்தான் இருந்து வருகிறது. அந்த போலி ஜனநாயகத்தை தூக்கி எறிந்து விட்டு, பாசிச உள்ளடக்கம் கொண்ட தன்மையுடன் தற்போது இந்திய ஒன்றிய அரசு அதிகாரத்தை செலுத்தி வருகிறது.

இந்திய ஒன்றியத்தை ஆளுகின்ற ஆர்எஸ்எஸ் பாஜக, பிற கட்சிகளைப் போல மற்றொரு கட்சி அல்ல அது ஒரு பாசிச பயங்கரவாதத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சி என்பதை பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம்.

இந்தப் பாசிச பயங்கரவாதக் கட்சி, இந்தியாவில் நிலவி வந்த தேர்தல் ஜனநாயக நடைமுறைகளை ஒழித்துக் கட்டி அப்பட்டமான பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கு தருணம் பார்த்துக் கொண்டுள்ளது.

அதற்காக சட்டபூர்வமான வழியில் தேர்தல் ஆணையத்தை சட்ட திருத்தம் மூலம் 2023 ஆம் ஆண்டு மாற்றியது. பின்னர் தனது சித்தாந்தவாதிகளை, அதாவது காவி பாசிச சக்திகளை தேர்தல் ஆணையத்திற்குள் நுழைத்தது.

அந்த வகையில் தேர்தல் ஆணையத்தின் உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்ட திருவாளர் ஞானேஷ்குமார் அதன் பின்னர் தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக மாறி உள்ளார்.

இவரது பரிபாலனத்தின் கீழ் நடத்தப்பட்ட தேர்தல்கள் அனைத்தும் ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு சாதகமாக மாறி உள்ளது என்பது மட்டுமன்றி, சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் 13 கோடி வாக்காளர்களை, அதாவது 2024 ஆம் ஆண்டு ஓட்டு போட்ட 13 கோடி வாக்காளர்களை, 2026 ஆம் ஆண்டு, இன்றைக்கு உள்ள கணக்கின்படி,  இரண்டு ஆண்டுகளில் 13 கோடி பேர் இறந்து விட்டார்கள் என்று சொன்னால் அது எவ்வளவு பெரிய மோசடி என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

படிக்க:

♦ தேர்தல் திருட்டு: தேர்தல் ஆணையத்தில் ஆழமாக ‘அகழாய்வு’ செய்ய வேண்டும்!

♦ தேர்தல் திருட்டுக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றுபடுவோம்!

இந்தத் தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது அடுத்த கட்டமாக குடியுரிமை சட்ட திருத்தத்தை நோக்கி முன்னேறும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

இந்த சூழலில் இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் இந்து பத்திரிகை ஆகியவை இணைந்து நடத்திய புலனாய்வின் அடிப்படையில் 13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டது உறுதி என்றும், அதுதான் தொடர்ச்சியான ஆர்எஸ்எஸ் பாஜக மற்றும் மோடி அமித்ஷா கும்பலின் வெற்றிக்கு காரணம் என்பதும் நிரூபணம் ஆகி உள்ளது.

எனவே இத்தகைய சதிகார கும்பல் ஒன்றிணைந்து, சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகத்திற்கு சாவு மணி அடித்துள்ளது.

இதனை நாங்கள் ‘ஓட்டு திருட்டு ‘என்று குற்றம் சுமத்துகின்றோம். பெரும்பான்மை மக்கள், தாம் ஜனநாயக நாட்டில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் ஜனநாயக உரிமையின் அடிப்படையில் தேர்தலில் ஓட்டு போட்டு வருவதாகவும் புரிந்து வைத்துள்ளார்கள். இவை அனைத்தும் பாசிச சர்வாதிகாரத்தில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கின்ற ரத்த சாட்சியம் தான் 13 கோடி வாக்காளர் பெயர் நீக்கம்.

எனவே ஓட்டு திருட்டுமூலம் ஜனநாயகத்தை படுகொலை செய்துள்ள, திருவாளர் ஞானேஷ் குமார் பதவியை விட்டு விரட்டியடிக்கப்பட வேண்டும் என்பதையும், நாட்டை மிகப்பெரும் அபாயமாக கவ்வியுள்ள பாசிச பயங்கரவாதத்தில் இருந்து மீட்க போராட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்து, எதிர்வரும் 13/ 10/ 2026 அன்று சென்னை எழும்பூரில் ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம்.

அந்த ரயில் முற்றுகைக்கு மாணவர்கள், இளைஞர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் மற்றும் அனைத்து பிரிவு உழைக்கும் மக்களும் ஒன்று திரண்டு வருமாறு தோழமையுடன்  அழைக்கின்றோம்.

தோழமையுடன்,

(ஒருங்கிணைப்பு பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணி தமிழ்நாடு- புதுச்சேரி)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here