சம்யுக்த கிசான் மோர்ச்சா

செய்தி வெளியீடு – 24 டிசம்பர் 2022

>>> ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்த கிசான் மோர்ச்சா) 2023 ஜனவரி 26 அன்று நாடு முழுவதும் மாவட்ட அளவில் டிராக்டர் அணிவகுப்பு நடத்துவதாக அறிவித்துள்ளது !

>>> ஜனவரி 26 ஆம் தேதி ஜிண்டில் மாபெரும் கிசான் மகாபஞ்சாயத் நடைபெறும். அங்கு நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் நடத்தவிருக்கும் பேரணியின் தேதி அறிவிக்கப்படும்!

>>> அரியானாவில் விவசாய விளைபொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது !

சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் தேசிய கூட்டம் கர்னாலில் உள்ள குருத்வாரா தேரா கர் சேவாவில் 24.12.2022 அன்று நிறைவடைந்தது.

கூட்டத்தில், 26.01.2023 அன்று நாடு முழுவதும் டிராக்டர் பேரணி நடத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும் என்றும், அரியானா மாநிலம் ஜின்டில், 2023 ஜனவரி 26, அன்று மாபெரும் கிசான் மகாபஞ்சாயத்தை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

2021 ஜனவரி 26 அன்று, விவசாயிகளுக்கு எதிராக ஒன்றிய அரசு செய்த சதி மற்றும் வன்முறை பற்றிய தகவல்களை சம்யுக்த கிசான் மோர்ச்சா 2023 ஜனவரி 26 நிகழ்ச்சிகள் மூலம் விவசாயிகளுக்குத் தெரிவிக்க இருக்கிறது. *குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்ட உத்தரவாதம், முழுமையான கடன் நிவாரணம், விவசாயிகளுக்கு மாதம் ரூபாய் 5000 ஓய்வூதியம், பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்க கோருதல், விவசாய நிலங்கள் கையகப்படுத்தத் தடை, லக்கிம்பூர் கேரி விவசாயிகள் படுகொலைக்குச் சதி செய்த ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டேனியின் ராஜினாமா, டெல்லி மற்றும் அனைத்துப் பகுதிகளிலும் விவசாயிகள் மீது போடப்பட்ட போலி வழக்குகளை ரத்து செய்வது, உள்ளிட்ட பிரச்சினைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியாளர்களிடம் கொடுக்க வேண்டும்.

குடியரசு தினத்தன்று தேசிய கொடியை ஏற்றிய பிறகு, மாவட்ட அளவில் விவசாயிகள் அமைப்புகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட வேண்டும் என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் தமிழக கிளை உதயம்!

கூட்டத்தில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, நாடாளுமன்றம் வரை விவசாயிகள் பேரணி நடத்துவது என்றும், அதற்கான தேதி மார்ச் மாதம் 26ம் தேதி ஜின்டில் அறிவிக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் விவசாயிகள் மீது அரசு போடும் போலி வழக்குகள் நிறுத்தப்பட வேண்டும், காவல்துறை அடக்குமுறையைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சம்யுக்த கிசான் மோர்ச்சா நாடு முழுவதும் நடக்கும் விவசாயிகளின் இயக்கங்களுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தது. பஞ்சாபில், பஞ்சாப் கிசான் மோர்ச்சாவை ஆதரிக்கும் கலைஞர்கள் கன்வர் கிரேவால் மற்றும் ரஞ்சித் பாபா ஆகியோர், மால்ப்ரோஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் மதுபான ஆலைக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையை கண்டித்துள்ளனர். மத்தியபிரதேச ரேவாவில் 80 நாட்களாக நடைபெறும் பன்றி வளர்க்கும் விவசாயிகளின் போராட்டத்திற்கும் SKM ஆதரவு தெரிவித்தது. அரியானாவில் விவசாய விளைபொருட்களுக்கு கூடுதல் மண்டி கட்டணம் விதிக்கப்பட்டதற்கும், நாடாளுமன்றத்தில் மின்சார மசோதாவை தாக்கல் செய்தது, ஒன்றிய அரசு விவசாயிகளுக்குச் செய்த துரோகம் எனக் கூறி சம்யுக்த கிசான் மோர்ச்சா எதிர்ப்பு தெரிவித்தது.

ஐக்கிய கிசான் மோர்ச்சாவின் வழிகாட்டு நெறிமுறையை முடிவு செய்ய, பிப்ரவரி 9ஆம் தேதி குருக்ஷேத்திரத்தில் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டம் சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் முக்கியஸ்தர் குழுவால் நடத்தப்பட்டது. இதில் பஞ்சாப்பை சேர்ந்த ஜோகிந்தர் சிங் உக்ரஹான், கேரளாவை சேர்ந்த பிஜு கிருஷ்ணன், ராஜஸ்தானை சேர்ந்த ரஞ்சித் ராஜு, மத்திய பிரதேசத்தை சேர்ந்த டாக்டர் சுனிலம், ஆந்திராவை சேர்ந்த ரவுலா வெங்கையா, ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அறிக்கையை வழங்கியவர்கள் :
சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்த்த ஹன்னன் மௌலா, டாக்டர். தர்ஷன்பால், ஜோகிந்தர் சிங் உக்ரஹான், யுத்வீர் சிங்.

வெளியீடு : ஐக்கிய விவசாயிகள் முன்னணி, தமிழ்நாடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here