சில பேருக்கு ஒரு வார்த்தை சொன்னா சுருக்குன்னு கோவம் வரும். சிலருக்கு எவ்வளவு திட்டினாலும் எருமை மாட்டு மேல மழை பெஞ்ச மாதிரி கடந்து போவார்கள். இரண்டாவது ரகம் தான் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி.
அடிக்கடி நானும் இருக்கிறேன் என்பதை காட்டிக் கொள்வதற்காக ஏதாவது ஆர்.எஸ்.எஸ் கருத்துக்களை பைத்தியக்காரதனமாக உளருவதும், தமிழ்நாட்டு மக்கள் கழுவி ஊற்றிய பின்பு சில நாட்கள் பதுங்குவதும் என கேவலமான வாழ்க்கையை தமிழ்நாட்டில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் ஆர்.என்.ரவி.
ஆனால் அவர் பேசுவது பைத்தியக்காரத்தனம் என்று கடந்துப் போய்விடவும் முடியாது. இந்துத்துவ கருத்துக்களை பரப்பவும், சங்பரிவார் அமைப்புகளை தமிழகத்தில் காலூன்ற செய்யவும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பலால் அனுப்பி வைக்கப்பட்ட அதிகார வர்க்கம் தான் இவர்.
தமிழ்நாட்டில் ஆளுநராக பதவியில் அமர்ந்து கொண்டு பல்கலைகழகங்களில் பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ கருத்துக்களை பரப்புவதை முழுநேர வேலையாக செய்துக் கொண்டிருக்கிறார். மாணவர்கள் மத்தியில் அறிவுக்கு ஒவ்வாத ஆர்.எஸ்.எஸ் கருத்துக்களை பரப்புவதன் மூலம் அவர்களின் சிந்தனையை முடமாக்கப் பார்க்கிறார்.
தற்போது ‘மதச்சார்பின்மை’ ஐரோப்பியர்கள் உருவாக்கியது என்று பேசியுள்ளார். கன்னியாகுமரியில் நடைப்பெற்ற விழா ஒன்றில் பேசிய ஆர்.என்.ரவி, “…மதச்சார்பின்மை என்பது ஒரு ஐரோப்பிய கருத்தாக்கம். இந்தியாவின் கருத்தல்ல. ஐரோப்பாவில் சர்ர்சுக்கும் மன்னருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையால் மதச்சார்பின்மை வந்தது. இந்தியா எப்படி தர்மத்திலிருந்து விலகி நிற்க முடியும்.? மதச்சார்பின்மை என்பது இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இல்லை. சில பிரிவு மக்களை திருப்திப்படுத்துவதற்காக ஒரு பாதுகாப்பற்ற பிரதமரால் அவசரநிலை காலகட்டத்தின் போது இது சேர்க்கப்பட்டது” என்று பேசியுள்ளார்.
ஆளுநரின் இந்த பேச்சுக்கு எதிர்கட்சி உட்பட பல்வேறு மக்களால் எதிர்ப்பு தெரிவித்தாலும் நாம் ஏற்கனவே சொன்னது போல் கடந்து போய் விடுவார் ஆளுநர் ரவி. புதிதாக ஒரு விவாதத்தை கிளப்பிவிட்டோம் என்ற திருப்தியும் இந்துராஷ்டிர அஜண்டாவின் ஒரு பகுதியாக மதச்சார்பின்மை மீது கேள்வி எழுப்பிய ஒரு திருப்தியும் இருக்கும்.
ஆளுநர் ரவி கூறியது போல் 1976 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திராவால் ‘மதச்சார்பின்மை’ என்ற சொல் இந்திய அரசியலமைப்பின் 42 வது திருத்தத்தின் போது அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் நோக்கம் இந்திய அரசாங்கம் எந்தவொரு குறிப்பிட்ட மதத்தையும் பின்பற்றவோ அல்லது ஆதரிக்கவோ கூடாது. மாறாக ஒவ்வொரு மதமும் சமமாக நடத்தப் பட வேண்டும் என்பது தான்.
இந்த திருத்தம் தான் அதாவது ‘ஒவ்வொரு மதமும் சமமாக நடத்தப்பட வேண்டும்’ என்பதை இந்துத்துவ பாசிச கும்பல் எப்படி ஏற்றுக் கொள்ளும். அதனால் தான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே மாற்ற முயல்கிறது. அதன் வெளிப்பாடாக தான் ஆர்.என்ரவியின் பேச்சு. இதன் மூலம் மதச்சார்பின்மையின் விழுமியங்களை அழித்து வரும் ஆர்.எஸ்.எஸ் பாஜக பாசிச கும்பல் ஒட்டு மொத்தமாக மதச்சார்பின்மையை ஒழித்துக் கட்டி இந்து நாடாக இந்தியாவை அறிவிக்க முயல்கிறது. மதச்சார்பின்மை மதத்திலிருந்து அரசை பிரிக்கிறது. ஆனால் பாசிச மோடி அரசோ பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் ராமர் கோவிலைகட்டி அதன் திறப்பு விழாவில் கலந்துக் கொண்டு மதச்சார்பின்மை கைக்கழுவி விட்டது.
இது மட்டுமல்லாமல் திருவாளர் மோடி ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்து கொண்டு பூஜை செய்தார். 2020 டிசம்பரில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான பூஜை நடந்தது. அடுத்து புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்துக் கொண்டு திறந்து வைத்தது. இந்த விழா முழுக்க முழுக்க இந்து முறைப்படியே நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் எங்கே மதச்சார்பின்மை உள்ளது?.
ஆகவே ஆர்.என்.ரவி பேசியது ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் கருத்து. இதனை நிஜமாக்க இந்தியாவை இந்து நாடாக்க முயலும் கும்பல்களில் ஒருவர் தான் இவர். ஆர்.என்.ரவியின் கூற்றுப்படியே பார்த்தாலும் ஐரோப்பியர்களால் மதச்சார்பின்மை உருவாக்கப்பட்டிருந்தாலும் கூட அவன் அதை மட்டுமா உருவாக்கினான்?. இந்தியாவை காலனியாக்க வந்த ஆங்கிலேயர்கள் (ஐரோப்பியர்கள் தான்) இந்தியா என்ற நாட்டை உருவாக்கினார்கள். அதனை கலைத்துவிட்டு தன்னாட்சி உரிமையை எல்லோருக்கும் வழங்கி விடலாமா? இந்து என்ற மதத்தை உருவாக்கியதும் அவன் தான். ஆகையால் யாரும் இந்து இல்லை என்று அறிவித்து விடலாமா? இந்தியாவிற்கே உரியது என்பதால் சாதி- சாதி- தீண்டாமையை அப்படியே அனுமதிக்கலாமா? ஆர்.என்.ரவி செய்து கொண்டது போல் குழந்தை திருமணத்தை நீடிக்க விடலாமா? இதையெல்லாம் தாண்டி ஆர்.என்.ரவி வகிக்கும் ஆளுநர் பதவியே ஆங்கிலேயனால் உருவாக்கப்பட்டது தானே. அதனை அனுபவித்துக் கொண்டு தான் மல்லாக்கப்படுத்து எச்சிலை துப்பிக் கொள்கிறார் ஆளுநர்.
மக்களின் வரிப்பணத்தில் சொகுசான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டு அடித்தட்டு மக்களுக்கு எதிராக செயல்படும் ஆர்.என்.ரவி-யை சங்கி என்று சொல்வதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.
படிக்க:
♦ ஆர்.என்.ரவி: ஆளுநரின் பெயரில் ஆர்.எஸ்.எஸ். அடியாள்!
♦ தெண்டச்சோறு ஆளுநர் ரவியும் ஆர்.எஸ்.எஸ் ன் தேசப்பக்தியும்!
மதச்சார்பின்மைக்கு எதிரான ஆர்.என்.ரவியின் கருத்து வன்மையான கண்டனத்திற்கு உரியது. ஆளுநர் என்ற அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு இப்படி பேசுவது அரசியலமைப்பு சட்டத்தை மிதிப்பதற்கு சமம். ஆகையால் ஆளுநர் ரவியை ஆளுநர் பதவியில் இருந்து விரட்டியடிக்க வேண்டும். மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். முடிந்தால் ஆளுநர் பதவியையே ஒழித்துக் கட்ட வேண்டும். அது என்றைக்கும் தேவையில்லாத ஆணிதான்.
- நலன்
இந்தப் போக்கிரி ஆளுநர் RNR -ஐ தமிழ்நாட்டு மண்ணிலிருந்து விரட்டி அடித்தே யாக வேண்டும்.வாயைத் திறந்தாலே ‘கூவம்’ கொப்பழித்து வழிகிறது! கட்டுரையாளர் நலன், இந்த RSS-காரனை நன்றாகவே திரை கிழித்து அம்பலப்படுத்தியுள்ளது பாராட்டிற் குரியது. நாகலாந்தில் இந்தப் பார்ப்பனப் பிறவி போட்ட இழிந்த ஆட்டத்தினால், அந்த மக்கள் கோபமுற்று எப்படி விரட்டி அடித்தார்களோ, அது போன்ற நிகழ்வை தமிழ் மண்ணில் என்று நிகழ்த்தப் போகிறோம் என்பதே அனைவரின் அவாவாக இருக்கிறது.