மோடி அரசின் இந்த நடவடிக்கை PFI, NCHRO & இசுலாமியர்களுக்கு எதிரானது மட்டுமல்ல. அரசியல் சட்டம், ஜனநாயகத்திற்கு எதிரானது. அம்பேத்கர் உயிரைக் கொடுத்தாவது தடுக்க வேண்டும் என்று சொன்ன “இந்து ராஷ்ட்ரா” வருவதற்கான முன்னோட்டம்தான் இந்த நடவடிக்கை. இன்று இசுலாமியர்கள். நாளை, சூத்திர, பஞ்சம உழைக்கும் மக்கள், பெண்கள்தான். மோடி அரசின் இந்த பாசிச நடவடிக்கைகளை இன்று நாம் எதிர்க்காவிட்டால், நாளைய இந்தியாவில் எதிர் கட்சிகள், தேசிய இனங்கள், மொழிவாரி மாநிலங்கள், அரசியல் சட்டம் என எதுவும் இருக்காது. 2000-ஆண்டுகள் பின் தள்ளப்படுவோம்.

PFI & NCHRO-தடை தொடர்பாக இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் மவுனம் காப்பது சரியானதல்ல. காஷ்மீரில் இந்திய அரசை ஆதரித்து நின்ற பலரும் போராளி அமைப்புகளை ஒடுக்கியபின், கடும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டதை நாம் அறிவோம். PFI உள்ளிட்ட அமைப்புகளின் கொள்கைகளில் மாற்றுக் கருத்துகள் பலருக்கு இருக்கலாம். ஆனால், எந்த ஒரு கட்சி, அமைப்பையும் முற்றிலும் முடக்கி, ஒழித்துக்கட்டும் மோடி அரசின் பாசிச நடவடிக்கையை எதிர்க்காமல் இருந்தால் நாளை யாரும் இயங்க முடியாது.

எனவே, களத்தில் இறங்குவோம், போராடுவோம், பாசிச மோடி அரசை வீழ்த்தும் வரலாற்றுக் கடமைக்கு அணியமாவோம்.

பாசிச மோடி அரசே…!
PFI& NCHRO மீதான தடையை நீக்கு! அனைவரையும் விடுதலை செய்!
அரசியல் சட்ட, மக்கள் விரோத UAPA & NIA-சட்டங்களை நீக்கு!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.
தமிழ்நாடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here