மாதக்கணக்கில் மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில்கூட (அங்கே போவது இருக்கட்டும்) அதை பற்றி பேசுவதற்குக்கூட பயப்பட்டுக் கொண்டு இருந்த 56 இன்ச் மோடி தற்பொழுது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.
இந்தியாவில் மோடி தலைமையிலான பாஜக அரசு மக்கள் மீது நடத்திவரும் பாசிச தாக்குதல்களை கண்டித்து அமெரிக்காவில் மோடிக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்தியப் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ஜோபைடன் சந்திக்கும் பொழுது
இந்தியாவில் மனித உரிமைகள் மீறப்படுவது, கருத்து சுதந்திரம் –பத்திரிக்கை சுதந்திரம் நசுக்கப்படுவது, இணையதளம் முடக்கப்படுவது, சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் போன்ற ஜனநாயக விரோத செயல்கள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு 18 செனட்டர்கள் மற்றும் 57 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கடிதம் எழுதியுள்ளனர்.
நம்மூரில் ஆட்டோவில் –வேனில் பேனரை கட்டிக்கொண்டு பிரச்சாரம் செய்வதை போல நியூயார்க் நகரில் டிரக்கில் டிஜிட்டல் திரை வைத்து பிரச்சாரம் செய்வது என்பது வழக்கமான ஒன்று. அப்படிப்பட்ட டிஜிட்டல் டிரக்கில் மோடியை குறித்து விமர்சித்து நியூயார்க் நகரில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
அதில் மோடிக்கு “கிரைம் மினிஸ்டர் ஆஃப் இந்தியா ” ( “Crime minister of India”) என்று பட்டம் சூட்டி விட்டனர். அதாவது”இந்தியாவின் குற்ற அமைச்சர்” என்று மோடிக்கு பட்டம் கொடுத்து விட்டனர்.
அப்படி பட்டம் சூட்டுவதற்கான காரணங்களாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தக்காரணம் என்ன?
2005 முதல் 2014 ஆம் ஆண்டு வரை பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு வரக்கூடாது என்று தடை விதிக்கக் காரணம் என்ன?
மாணவர் சங்க தலைவர் உமர் காலித் எந்த விசாரணையும் இல்லாமல் 1000 நாட்களுக்கு மேல் ஏன் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்?
என்பன போன்ற பல்வேறு கேள்விகளை முன் வைத்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: பாசிஸ்டுகள் அஞ்சி நடுங்க சொல் ஒன்று போதும்!
இந்தக் கேள்விகளைக் கண்டெல்லாம் பயப்படுபவர் அல்ல மோடி. கிரிமினல் என்ற பட்டத்தை கண்டுவெட்கப்ப்படுபவரும் அல்ல.
ஆனால் இப்படிப்பட்ட மோடியின் ஆட்டத்தை அடக்காமல் விட்டு வைத்திருப்பது இந்திய மக்களுக்கு வெட்கக்கேடானது என்பதை உணர்ந்து நாம் களத்தில் செயலாற்றுவோம்.
- பாலன்
செய்தி ஆதாரம்: ஒன்இண்டியா.காம்
https://tamil.oneindia.com/news/new-york/pm-modi-criticised-in-america-as-crime-minister-of-india-in-a-digital-truck-campaign-517743.html