அமெரிக்காவில் பாலஸ்தீன மாணவர் கைது! குடியுரிமையை ரத்து செய்த ட்ரம்ப்!

போராட்டக்காரர்கள் மீதான ட்ரம்பின் அடக்குமுறை பாலஸ்தீன ஆதரவாளர்களை மட்டும் மட்டுப்படுத்தாது என்றும் மற்றவர்கள் கவலைப்படுகிறார்கள்.

0
அமெரிக்காவில் பாலஸ்தீன மாணவர் கைது! குடியுரிமையை ரத்து செய்த ட்ரம்ப்!
கலீலை விடுவிக்கக்கோரி ட்ரம்ப் -ஐ கண்டித்து நியூயார்க் நகரில் போராடிய மக்கள்

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனிய மாணவர் ஆர்வலர் மஹமத் கலீல் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் முகாமில் வைக்கப்பட்டுள்ளார். சிவில் உரிமை அமைப்புகளும், கல்வியாளர்களும் இதனை கண்டித்துள்ளனர். ட்ரம்ப் நிர்வாகத்தில் பேச்சு சுதந்திரம் மறுக்கப்படுவதாக கூறியுள்ளனர்.

மஹ்மூத் கலீல் ஒரு கிரிமினல் குற்றம் செய்ததற்கான எந்த ஆதாரத்தையும் அமெரிக்க அரசு வழங்கவில்லை, ஆனால் சனிக்கிழமை இரவு, அவர் அரசு அதிகாரிகளால்(agents of the state) அவரது வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு ஒரு தடுப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டார் , அங்கு அவரது கர்ப்பிணி மனைவியோ அல்லது அவரது வழக்கறிஞரோ அவரை சந்திக்ககூட முடியவில்லை.

அமெரிக்காவில் சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளரும், கடந்த வசந்த காலத்தில் இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு எதிராக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டங்களுக்கு தலைமை தாங்க உதவிய பாலஸ்தீன ஆர்வலருமான கலீல், தனது அரசியல் கருத்துக்கள் காரணமாக அமெரிக்க அரசாங்கத்தால் அகதிகள் முகாமில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இஸ்ரேலுடனான நிதி மற்றும் கல்வி உறவுகளை பல்கலைக்கழகம் துண்டிக்க வலியுறுத்திய மாணவர்களில் கலீலும் ஒருவர். (பிற வகை குடியேறிகளைப் போலல்லாமல், சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளர்களின் நிலையை ரத்து செய்வதற்கு பொதுவாக தவறு செய்ததற்கான சான்றுகள் தேவை.

நேற்று, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை கலீலை “பெருமையுடன் கைது செய்ததாக” அறிவித்தார் , அவரை “தீவிரவாத வெளிநாட்டு சார்பு ஹமாஸ் மாணவர்” என்று விவரித்தார். உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கலீலை “ஹமாஸுடன் இணைந்த நடவடிக்கைகளை வழிநடத்தியதாக” விவரித்தார். குறிப்பாக, அந்த விளக்கத்தில் குற்றவியல் நடத்தைக்கான ஒரு குறிப்பு கூட இல்லை. எந்தவொரு பயங்கரவாதக் குழுவின் உறுப்பினராகவோ, அதற்காகப் போராடுவதாகவோ அல்லது பொருள் ஆதரவை வழங்குவதாகவோ அவர்கள் அவரைக் குற்றம் சாட்டவில்லை, இவை அனைத்தும் வழக்குத் தொடரக்கூடிய குற்றங்கள். டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் ஒரு கிரீன் கார்டு வைத்திருப்பவரின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று நினைத்தால், அவர்கள் அவரது சுதந்திரத்தைப் பறிக்கக்கூடும் என்பதை இந்த சொற்றொடர் குறிக்கிறது . இஸ்ரேலிய அரசாங்கத்தை மிகவும் விமர்சிப்பதாகக் கருதப்படும் எவருக்கும் வீசக்கூடிய ஒரு அகநிலை மற்றும் தன்னிச்சையான தீர்ப்பான ஹமாஸுடன் அவர்கள் “இணைந்தவர்கள்” அல்ல என்பதை ஒருவர் எவ்வாறு நிரூபிப்பார்?

“அமெரிக்காவில் வெளியுறவுக் கொள்கையில் கடுமையான பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று வெளியுறவுச் செயலாளர் நம்புவதற்கு நியாயமான காரணங்களைக் கொண்ட வெளிநாட்டினரை” வெளியேற்றுவதற்கு வெளியுறவுச் செயலாளருக்கு அதிகாரம் அளிக்கும் குடிவரவு மற்றும் தேசியச் சட்டத்தின் ஒரு விதியின் கீழ் கலீலின் கிரீன் கார்டு ரத்து செய்யப்பட்டதாக அரசாங்க அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

காசா மீதான இஸ்ரேலின் போரால் கிட்டத்தட்ட 50,000 க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு உறுதுணையாக இந்த படுகொலையை நிகழ்த்தியதில் இனவெறியன் நெதன்யாகுவிற்கு ஆயுதம் கொடுத்து பக்கபலமாய் இருந்தது அமெரிக்கா.

“பலர் மாணவர்கள் அல்ல, அவர்கள் ஊதியம் பெறும் கிளர்ச்சியாளர்கள்” என்று டிரம்ப் திங்கள் அன்று ஒரு சமூக ஊடகப்பதிவில் அடிப்படையான ஆதாரங்கள் இல்லாமல் எழுதியுள்ளார். மாணவர் போராட்டக்காரர்கள் பயங்கரவாத ஆதரவு, யூத எதிர்ப்பு, அமெரிக்க எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்கேற்பதாகவும் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். இதற்கும் எந்த ஆதாரங்களும் இல்லை.

படிக்க: 

🔰  பிரிக்ஸ் நாடுகளை மிரட்டும் ட்ரம்ப்! சரியும் உலக மேலாதிக்கத்தை தக்கவைக்கும் முயற்சி !

🔰  பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எப்போதுமே ஆதரிக்கும் அமெரிக்காவும் அதன் அடிவருடிகளும்!

கலீலின் இந்த தடுப்புக்காவல் அமெரிக்காவில் நடக்கவிருக்கும் பலவற்றின் தொடக்கமாக இருக்கும் என்று என்கிறார் ட்ரம்ப். இந்த பயங்கரவாத ஆதரவாளர்களை நம் நாட்டிலிருந்து கண்டுபிடித்து கைது செய்து நாடு கடத்துவோம் ஒருபோதும் மீண்டும் அனுமதிக்க மாட்டோம் என்கிறார்.

உள்நாட்டு பாதுகாப்புத்துறை கலில் பயங்கரவாத அமைப்பான ஹமாசுடம் இணைந்த செயல்பாடுகளை வழிநடத்துவதாக குற்றச்சாட்டுகிறார்கள். ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் உறுதியானதாக இல்லை. இஸ்ரேல் மீதான விமர்சனத்தை பயங்கரவாதத்திற்கான ஆதரவுடன் இணைக்க முயற்சிக்கிறது வலதுசாரி சிந்தனை குழுவான ஹெரிடேஜ் பவுண்டேஷனால் தொகுக்கப்பட்ட ட்ரம்பின் இரண்டாவது பதவி காலத்திற்கான சர்ச்சைக்குரிய கொள்கை முன்மொழிவு. ப்ராஜெக்ட் 2025 அதன் பிரதிபலிப்பாக தெரிகிறது

போராட்டக்காரர்கள் மீதான ட்ரம்பின் அடக்குமுறை பாலஸ்தீன ஆதரவாளர்களை மட்டும் மட்டுப்படுத்தாது என்றும் மற்றவர்கள் கவலைப்படுகிறார்கள். அனைத்து சட்டவிரோத போராட்டங்களுக்கும் கடுமையான தண்டனை விதிக்க போவதாக அவர் முன்னர் கூறினார். அது என்ன என்பது வரையறுக்கப்படவில்லை.

ட்ரம்ப் -ம், மோடியும் இணையும் புள்ளி!

இந்தியாவில் பாசிச மோடி குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு எதிராக டெல்லியில் போராடிய ஜெ.என்.யு மாணவர் உமர்காலித்தை ஊபா சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது மோடி அரசு. இன்று வரை ஜாமீன் வழங்கப்படாமல் பொய் குற்றச்சாட்டில் சிறைவைத்துள்ளது.

சிறுபான்மையினரை குறிவைத்து தனது மத அரசியலை செய்து வருகிறது பாசிச பாஜக. இந்தியாவை இந்துத்துவா நாடாக மாற்றுவதன் ஒரு பகுதியாக கொண்டு வரப்பட்டது தான் குடியுரிமை திருத்தச் சட்டம். இதன் மூலம் இஸ்லாமியர்களை இந்தியாவில் இல்லாமல் செய்யும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டது.

அமெரிக்காவிலும் ட்ரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு அமெரிக்காவில் குடியுரிமை இல்லாதவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். அமெரிக்க மக்களிடையே தேசிய வெறியை உருவாக்குகிறார். இன்று இஸ்ரேலின் இனவெறிக்கு ஆதரவாக அமெரிக்க குடியுரிமை பெற்ற பாலஸ்தீன மாணவரை வெளியேற்ற முற்படுகிறார்.

அமெரிக்காவோ, இந்தியாவோ இரண்டு நாடுகளிலும் அநீதியை எதிர்த்து போராடும் உரிமையை மறுக்கிறது பாசிசம். இவர்கள் அமெரிக்கா ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொண்டாலும் மாணவர் கலீல் கைதும் அவரது குடியுரிமை ரத்தும் அதுகுறித்து சமூக வலைதளத்தில் ட்ரம்பின் கருத்தும் பாசிஸ்டுகளின் குணாம்சத்தையே அம்பலப்படுத்துகிறது.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here