இதுதான் இன்றைய இந்தியா!

ரிமைக்காக குரல் கொடுப்பவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள் அல்லது அவர்களின் மீது பொய் வழக்குப் பதிவு செய்து கோர்ட்டுகளுக்கு இழுத்தடிக்க படுகிறார்கள்.

தற்போது பாசிசத்தின் நவீன கொலைக் கருவியாக புல்டோசர் மூலம் வீடுகளை இடித்து தள்ளுகிறார்கள். அதன்மூலம் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு மரண பயத்தையும், பாசிசத்திற்கு எதிராக வாய்திறக்க முடியாத அளவிற்கு கருத்து பயத்தையும் உருவாக்கி விடுகிறார்கள்.

மகளே, ஆப்ரின் பாத்திமா! உங்களது குடும்பத்தின் நிலையை கண்டு கொதிப்படைந்து இருக்கிறோம்.

#StandWithAfreenFathima


பிறப்பால் இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, இந்த நாட்டில் பிறந்த ஒரே ‘குற்றத்திற்காக’ கருத்துரிமை மறுக்கப்பட்டு கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்ற இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் ஒரு புறம்.
வெடிகுண்டு, துப்பாக்கிகள், பாலியல் சீரழிவு, அரசின் அரவணைப்பு, பயங்கரவாத பயிற்சிகள் ஆகியவற்றை கையில் வைத்துக்கொண்டு இந்தியாவின் வீழ்ச்சிக்கு காரணமான ஆர் எஸ் எஸ் பார்ப்பன பயங்கரவாதிகள் மறுபுறம் என்று இரண்டு இந்தியாவாக பிரிந்து கிடக்கிறது.

இதில் நீங்கள் யார் பக்கம் முடிவெடுக்கும் தருணம் இதுதான்.

 

ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here