ன்றிய அரசு சினிமா துறைக்கான தேசிய விருதுகளை அறிவித்துள்ளது. இதில் காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்காக தேசிய ஒருமைப்பாட்டிற்கான விருதை அறிவித்தது சமூக ஆர்வலர்களிடம் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

இன்றைய இந்திய சினிமாக்கள் பெரும்பாலும் ஆபாசத்தையும், ஹீரோயிசத்தையும் கேடாக சுமந்தே எடுக்கப்படுகிறது. அதைத்தாண்டி சமூகத்தில் மக்களுக்கு ஏற்படும் அவலங்களை சுமந்து வரும் சினிமாக்கள் மிகவும் குறைவாக உள்ளது. அப்படி எடுக்கப்படும் சினிமாக்கள் சென்சார் போர்டில் சமூகத்திற்கு சொல்லப்படும் கருத்துக்கள் வெட்டுப்பட்டே வெளிவருகிறது. இதுதான் தற்போதைய இந்திய சினிமாக்களின் நிலைமை.

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் சமூக கருத்துக்களை சொல்லும் படங்கள் அதிகமாக வந்துக் கொண்டிருக்கிறது. அதற்கான அடிப்படை தமிழ்நாட்டு மக்கள், அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக  தொடர்ந்து போராடுவதே. இது சினிமாக்களிலும் பிரதிபலிக்கிறது. சாதிய கொடுமைகளையும், கார்ப்பரேட் கொள்ளைகளையும், சீரழிந்துப் போன கட்டமைப்பை அம்பலபடுத்தியும் பல்வேறு படங்கள் வந்துக் கொண்டிருக்கிறது.

புதிதாக வரும் இளம் இயக்குனர்கள் இடதுசாரி சித்தாந்தத்தை வரித்துக் கொண்டவர்களாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணம். வேறு வழியே இல்லாமல் ஹீரோயிசத்தை வைத்து கல்லாக்கட்டும் இயக்குனர்களும் சமூக அவலங்களை தங்களது படத்தில் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஹீரோக்கள் மக்களை பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றும் சூப்பர் ஹீரோக்களாக காட்டும் கோமாளித்தனமும் அரங்கேறி தான் வருகிறது.

சமூக அவலங்களை அம்பலப்படுத்தும் படங்கள் இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பை பெறுவதும், பொருளாதார ரீதியாக வெற்றி பெறுவதும் சமூக அவலங்களுக்கு காரணமான சாதிய மதவாதிகளை கோபப்படுத்துகிறது என்பதே உண்மை.

சினிமா மக்களிடம் கருத்துக்களை கடத்திச் செல்லும் மிகப்பெரிய ஆயுதம். ஆனால் அதனை பயன்படுத்தும் நபர்களை பொறுத்து மாறுபடும். எம்.ஜி.ஆர் என்ற பாசிச கோமாளியை மக்கள் தலைவனாக்கியதும் இதே சினிமா தான் என்பது மக்களின் சாபக்கேடு. அதே நேரத்தில் எம்.ராதா, என்.எஸ்,கே உள்ளிட்ட மாபெரும் நடிகர்கள் மூலம் பார்ப்பனியத்தை அம்பலப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களும் உண்டு. இது தான் திராவிட கருத்தை மக்கள் மத்தியில் விதைத்தது என்பதில் வியப்பில்லை.

கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட ஜெய்பீம், கர்ணன் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன் காவி கும்பலுக்கு எரிச்சலையும் ஏற்படுத்தியது என்பதே உண்மை.

மக்களிடத்தில் சாதி, மத விசத்தை பரப்ப சினிமாவை காவி கும்பலும் ஆயுதமாக பயன்படுத்தியது. அதில் இந்திய மக்களிடம் பரப்பரப்பாக பேசப்பட்ட படம் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம். இந்தப் படம் முழுக்க முழுக்க இஸ்லாமிய வெறுப்பை விதைத்ததால் பலராலும் விமர்சிக்கப்பட்டது. ஆனால் காவி பாசிச அரசோ படத்திற்கு வரிச்சலுகை வழங்கி சிறப்பித்தது.

இதையும் படியுங்கள்: நிழல் ஜெய்பீம்களும்! நிஜ ஜெய்பீம்களும்!

காவி கும்பல் ஆளும் மாநிலங்களில் வரிச்சலுகை அளித்ததோடு மட்டுமல்லாமல் அரசு அதிகாரிகளுக்கு சினிமா பார்க்க விடுமுறையும் அளித்து மத வெறுப்பை வளர்த்தது. காஷ்மீர் ஃபைல்ஸ் இஸ்லாமிய வெறுப்பை விதைக்கவும் இந்து – முஸ்லீம் பிரிவினையை ஏற்படுத்தவும் திட்டமிட்டே சங்பரிவார் கும்பலால் எடுக்கப்பட்ட திரைப்படம்.

ஆனால் இந்தப்படத்திற்கு தான் தேசிய ஒருமைப்பாட்டிற்கான விருது வழங்கப்பட்டுள்ளது. மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் படம் தான் சங்கிகளுக்கு தேவை. அந்த கடமையை காஷ்மீர் ஃபைல்ஸ் நிறைவேற்றி உள்ளதாக காவி பாசிச அரசு கருதுகிறது. அவர்கள் ஊர் ஊராக சென்று செய்ய வேண்டிய வேலையை இந்த கேடான சினிமா செய்துள்ளதை நினைத்து அவர்கள் பெருமைப்படுகிறார்கள். மதவெறுப்பை உருவாக்கிய படத்தின் இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி இந்திய பிரதமர் மோடியை சந்திக்கிறார். இன்னப்பிற அமைச்சர்களையும் சந்தித்து நான் அவர்களின் ஆள் என்று காட்டுகிறார். இதுபோல் மேலும் சினிமாக்களை எடுப்பேன் என்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கிறார்.

இதையும் படியுங்கள்: தி காஷ்மீர் ஃபைல்ஸ்  சொல்ல மறந்த கதைகள்

பாசிச கும்பல் மக்களிடம் வெறுப்பை விதைக்க எல்லா வழிகளையும் பயன்படுத்துகிறார்கள். அதே நேரத்தில் மக்களிடம் கருத்து சொல்லும் சினிமாக்களையும் வரும் காலத்தில் முடக்கலாம். ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது வழங்காதது குறித்து சினிமாத்துறையில் பல்வேறு நபர்களும் விமர்சனம் வைத்துள்ளதையும் பார்க்க முடிகிறது. இது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது. நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியது போல் “காந்தியை கொன்றவர்கள், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தந்த அம்பேத்கரின் சமத்துவம் தத்துவத்தை கொல்ல முயற்சிப்பவர்கள் ஜெய்பீம் படத்திற்கு எப்படி விருது தருவார்கள்” இது தான் உண்மை. காவி பாசிச கும்பலிடம் விருதை எதிர்பார்ப்பது நம்முடைய தவறு. நல்ல சினிமாக்களுக்கு மக்கள் அளிக்கும் வரவேற்பு விருதை மேலானதாக பார்க்க வேண்டும்.

வரும் காலத்தில் காவி பாசிசத்தை அம்பலப்படுத்தும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தரமான சினிமாக்களை  எடுங்கள். அவர்கள் சாவர்க்கரை தலைவனாக்கி சினிமாக்கள் எடுக்கிறார்கள், நாம் பகத்சிங்கின் வீர மரபை உயர்த்தி பிடித்து சினிமாக்கள் எடுப்போம். மக்களை தலைவர்களாக்குவோம். பாசிசத்தின் பிடியில் இருந்து இந்தியாவை மீட்போம்.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here