ஜிஎஸ்டி வரி பயங்கரவாதத்தின் மூலம் மக்களை கொள்ளையடிக்கும் பாசிச பாஜக.

இந்திய ஒன்றிய அரசு வசூல் செய்கின்ற தொகையில் 50 சதவீதம் திருப்பி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் அதனைப் பார்த்து பார்ப்பன கும்பலும், திமுகவிற்கு எதிரான மனப்போக்குடைய முட்டாள் கூட்டமும் நக்கலடிக்கின்றனர்.

டந்த மே மாதத்தில் ரூ.2.01 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டு இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் சார்பில் 17 வகையான வரிகள், 13 வகையான செஸ் வரிகள் விதிக்கப்பட்டு வந்தன. இதற்கு பதிலாக கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி வரி அமல் செய்யப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

2024 ஆம் ஆண்டில் மட்டும் ஜிஎஸ்டி வரி மூலம் இந்திய ஒன்றிய அரசுக்கு கிடைத்த தொகை 21.36 லட்சம் கோடி ஆகும். இந்தியாவின் பொருளாதாரத்தை 50 லட்சம் கோடி பொருளாதாரம் ஆக மாற்றப் போகிறோம் என்று பாசிச மோடி உலகம் முழுவதும் தம்பட்டம் அடித்துக் கொண்டுள்ளார்.

இந்த சூழலில் மக்களிடமிருந்து வரியாக மட்டுமே 21.36 லட்சம் கோடி ரூபாயை கொள்ளையடித்திருப்பது சாதனையாக பீற்றிக் கொள்ளப்பட்டது வருகிறது.

வரிகளில் மூலம் சொந்த நாட்டு மக்களின் தாலியறுத்துக் கொண்டுள்ள ஆர்எஸ்எஸ் பாஜக அரசாங்கம் இதற்கு நேர் மாறாக கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல ஆயிரம் கோடி பரிச்சலுகையை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவிற்குள் முதலீடு செய்வதற்கு வரிகளை கட்டாமல் கொல்லைப்புற வழியாகவும், திருட்டுத்தனமாகவும் வருவதற்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ளது.

அதில் ஒன்றுதான் கேமன் தீவுகள் மூலமாக அல்லது மொரீசியஸ் தீவுகள் மூலமாக முதலீடுகளை இந்தியாவிற்குள் கொண்டு வருகின்ற சதித்தனமாகும்.

அரசாங்கத்தின் சலுகைகளை எவ்வாறெல்லாம் கொள்ளையடிக்கலாம் என்பதை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சொல்லிக் கொடுப்பதற்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் சார்ட்டட் அக்கவுண்டன்ட் உள்ளிட்ட படிப்புகளை படித்த பல்வேறு மெத்த படித்த அறிவாளிகள் அதிகாரிகள் என்ற பெயருடன் வரிசைகட்டி நிற்கிறார்கள்.. இது மட்டும் இன்றி ‘சிறப்பாக’ ஆலோசனை சொல்வதற்கு என்று சிந்தனை குழாம்களை உருவாக்கி வைத்துள்ளனர்.

இந்த வகையில் மெத்த படித்தவர்கள் 24 மணி நேரமும் மக்களின் உழைப்பை எவ்வாறு சுரண்டுவது; பொதுச் சொத்துக்களை எவ்வாறு சூறையாடுவது; அமலாக்கத்துறையில் சிக்கிக் கொள்ளாமல், யாரிடமும் மாட்டிக் கொள்ளாமல் எவ்வாறு திருடுவது என்பதை எல்லாம் தனியாக ரூம் போட்டு யோசிக்கிறார்கள்.

சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரி தான்ரைடு செய்யாமல் இருப்பதற்கு லஞ்சமாக கோடிகளில் கேட்டுள்ளார் என்பதால் சிபிஐ வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகளை கைது செய்துள்ளனர் என்று செய்தி வெளியாகியுள்ளது. நீதிபதி ஒருவர் வீட்டில் கட்டு கட்டாக இருந்த பணத்தை மாட்டிக் கொள்ளாமல் தப்பிப்பதற்கு எரிப்பதற்கு முயற்சி செய்தார் என்பதும் அது சரியாக எரியவில்லை என்பதால் செய்தி வெளியே கசிந்தது என்பது கடந்த மாத செய்திகளாக உள்ளது.

கல்விக் கடன் என்ற பெயரில் மாணவர்கள் வாங்குகின்ற கடனையும், விவசாயத்திற்கு கடன் என்ற பெயரில் விவசாயிகள் வாங்குகின்ற கடனையும் பறிமுதல் செய்வதற்கு வீடுகளில் புகுந்து அள்ளிக் கொண்டு செல்லும் வங்கிகள் இதற்கு நேர் மாறாக கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கு சாதகமாக துணை போகின்றனர்.

சமீபத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய்களை கடன் கொடுப்பதற்கு லஞ்சமாக கொள்ளையடித்த யூகோ வங்கியின் நிர்வாக இயக்குனர்கள் எந்தவிதமான குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாமல் தப்பித்து விட்டனர்.

யூகோ வங்கியின் சேவையைப் பற்றி முன்வைத்த வாடிக்கையாளர் ஒருவர் சாதாரண மக்கள் வந்தால் பல மணி நேரங்கள் இழுத்தடிப்பார்கள். அதுவே பசையுள்ளவன் அல்லது பணக்காரன் வந்தால் பல்லைக்காட்டுவது என்பது சாதாரண கிளைகளில் துவங்கி கார்ப்பரேட் அலுவலகம் வரை பரவி இருக்கின்றது என்று விமர்சித்தார்.

இது ஒரு வங்கியை பற்றிய உதாரணம் தான், நாட்டின் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் துவங்கி தனியார் வங்கிகள் வரை அனைத்தும் பொது மக்களின் சேமிப்பு தொகையை பல்லாயிரம் கோடி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடன் தொகையாக வாரிக் கொடுக்கின்றது.

படிக்க:

🔰 ஜிஎஸ்டி வரி பயங்கரவாதத்தின் மூலம் மக்களை கொள்ளையடிக்கும் பாசிச பாஜக.

🔰 ஜிஎஸ்டி வெறி பிடித்து அலையும் பாசிச பாஜக!

அதனையும் நேர்மையாக திருப்பி கட்ட சொல்லி போராடுவதற்கு பதில் இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் வழிகாட்டுதலின் பேரில் வரிச்சலுகை கொடுத்து தள்ளுபடி செய்கிறது.

ஆனால் சாலையோரத்தில் அனுதினமும் 15 மணி முதல் 18 மணி நேரம் உழைக்கின்ற தரைக்கடை வியாபாரிகள் முதல் சிறு குறு தொழில் முனைவர்கள்; தனது ரத்த வியர்வை சிந்தி உழைக்கின்ற தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு பிரிவு உழைக்கும் மக்களின் வருமானத்திலிருந்து நேர்முக மற்றும் மறைமுக வரியாக இவ்வாறு கொள்ளையடிப்பது உச்சகட்டத்தை எட்டியுள்ளது என்பதன் துலக்கமான எடுத்துக்காட்டு தான் இந்த ஜிஎஸ்டி வரி வசூல்.

ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வரிவசூல் மூலம் இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் வருமானம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று நிதி அமைச்சகமும், கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி ஊடகங்களும், ஆர்எஸ்எஸ் பாஜக தேச விரோத கும்பலும் முன்வைத்து பெருமிதம் கொள்கின்றனர்.

ஆனால் இத்தகைய மோசடிகளை எதிர்த்து பாட்டாளி வர்க்கம் விழிப்புணர்வு பெறாததன் காரணமாக கொள்ளையடிக்கும் தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.. இந்திய ஒன்றிய அரசு வசூல் செய்கின்ற தொகையில் 50 சதவீதம் திருப்பி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் அதனைப் பார்த்து பார்ப்பன கும்பலும், திமுகவிற்கு எதிரான மனப்போக்குடைய முட்டாள் கூட்டமும் நக்கலடிக்கின்றனர். ஜிஎஸ்டி கூட்டத்திற்கு ஸ்டாலின் ஏன் சென்றார் என்று இரண்டாம் பட்ச, மூன்றாம்பட்ச கேள்விகளை ‘கூர்மையான மதிநுட்பத்துடன்’ எழுப்பி திமுகவினரை திணறடிக்கின்றனர்.

சொந்த நாட்டு மக்கள் மீது ராணுவத்தை ஏவி படுகொலை செய்கின்ற இந்திய ஒன்றிய அரசாங்கம் இன்னொரு புறத்தில் வரி பயங்கரவாதத்தின் மூலம் கொள்ளையடித்து வருகிறது, மக்களை கொன்றொழித்து வருகிறது என்பதை எதிர்த்து போராட வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம்.

மாநிலங்களின் வரிகளை இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் கையில் ஜிஎஸ்டி என்ற பெயரில் கொடுத்துவிட்டு, கெஞ்சி கேட்பதை கைவிட்டு மாநிலங்களின் வருமானத்தை மாநிலங்களே பயன்படுத்துகின்ற வகையில் மாநில தன்னாட்சி வேண்டும் என்ற முழக்கத்தை மீண்டும் மீண்டும் எழுப்புவோம்.

பார்த்தசாரதி

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here