சிறு குறு தொழில் செய்வோர், வணிகக்கடை நடத்துவோர், உணவகங்கள் நடத்துவோர் போன்றவர்கள் இதுவரை தாங்கள் உற்பத்தி செய்து விற்கும் பொருளுக்கு அல்லது வாங்கி விற்கும் பொருளுக்கு ஜிஎஸ்டி வரி கட்டி வந்தனர்.
இப்படி, ஜிஎஸ்டி கட்ட முடியாமல் தொழிலை விட்டுச் சென்றவர்கள் ஏராளம் உள்ள நிலையில் வாடகைக் கட்டிடங்களில் தொழில் நடத்துவோர் தாங்கள் செலுத்தும் வாடகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டும் என்று பாஜக அரசு இப்பொழுது அறிவித்துள்ளது.
சிறு தொழில்புரிவோர், வணிகக் கடை நடத்துவோரிடம் ஒருமுறை மட்டுமே ஜிஎஸ்டி வரி வசூலிப்பது பாசிச பாஜக அரசுக்கு போதவில்லை. அதனால் தான் சிறு தொழில் புரிவோர் செலுத்தும் வாடகைக்கும் ஜிஎஸ்டி வரி போட்டு தாக்கி விட்டார்கள்.
எந்த மீனும் தப்பி விடக்கூடாது என்றால் வலையை அகலமாகவும் ஆழமாகவும் விரிக்க வேண்டும் என்று கூறுவதை பார்த்திருக்கிறோம்.
அதே மாதிரி, ‘எந்த நபரும் வரி செலுத்துவதில் இருந்து தப்பி விடக் கூடாது. அதற்கு வரிவலையை நாடு முழுவதும் அகலமாகவும் விரிக்க வேண்டும்’ என்ற வகையில் தமது வரி வேட்டையை தொடங்கிய பாஜக இப்பொழுது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதை பார்க்கிறோம்.
படிக்க: ஜிஎஸ்டி வரியை ரத்து செய்! கார்ப்பரேட்டுகளுக்கு அதிக வரி விதித்து பொருளாதாரத்தை ஈட்டு!
ஒரு மாட்டை இருமுறை தோல் உரிப்பது என்பதைப் போல சிறு முதலீட்டாளர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் மீதும் விற்பனை செய்யும் பொருட்கள் மீதும் ஜிஎஸ்டி -யை விதித்தது போதாமல் அவர்களின் செலுத்தும் வாடகைக்கும் ஜிஎஸ்டி வரியை திணித்திருக்கிறது பாசிச பாஜக.
இப்படி வரிக்குமேல் வரியைப் போட்டு மக்களை கசக்கி பிழிவதன் மூலமாகத்தான் கார்ப்பரேட்டுகளுக்கு பல்வேறு வரி சலுகைகளை கொடுத்து, கடன்களை தள்ளுபடி செய்து உலகப் பணக்காரர்கள் வரிசையில் அம்பானி – அதானிகளை உட்கார வைக்க முடியும் என்பதால் தான் ஜிஎஸ்டி வெறிபிடித்து அலைகிறது பாசிச பாஜக.
வாடகை மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி, மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் விலை உயர்வு என்ற வகையில் கடைசியில் சாதாரண உழைக்கும் மக்களின் தலையில் தான் வந்து இறங்கப் போகிறது.
இது சிறு தொழில் புரிவோர் வணிகக் கடை நடத்துவோர் மீதான தாக்குதல் அல்ல; உழைக்கும் மக்களின் மீதான தாக்குதல் என்பதை நாட்டு மக்களுக்கு புரிய வைப்போம்.
—தங்கசாமி
வரி போட்டு கொள்ளையடிப்பவர்களிடம் நாம் என்ன எதிர் பார்க்க முடியும்?
GST வரியிலிருந்து யாரும் தப்பக் கூடாது என்று நினைக்கும் நிர்மலா மாமி, என்றைக்காவது முதலாளிகள் தாங்கள் வாங்கிய கடனிலிருந்து தப்பிவிடக்கூடாது என்று நினைத்ததுண்டா?
கார்ப்பரேட்டுகளுக்கு வரி சலுகை, காவிகளுக்கு முழு சுதந்திரம், சாதாரண மக்களுக்கு புல்டோசர் இதுவே BJP.