டகிழக்கு பருவமழை தொடங்கும் போது தமிழகத்தின் தலைநகரான சென்னை மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக கன மழை பொழியும் என்றும் இது 2015, 2023-ல் ஏற்பட்ட பாதிப்புகளை போல இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் அரசின் வானிலை அறிக்கைகளும், தனியார் வானிலை அறிக்கைகளும் தெரிவித்தன.

இதனால் முன்கூட்டியே எச்சரிக்கையுடன் காய்கறிகள், மளிகைப் பொருட்கள், குடி தண்ணீர் மற்றும் சில அத்தியாவசிய பொருட்களை தேவைக்கும் அதிகமாகவே வாங்கி வைத்துக் கொண்டது வாழ்க்கை உத்திரவாதம் கொண்ட நடுத்தர வர்க்கமும், மேட்டுக்குடி கும்பலும்.

இந்த பாதிப்புகளை உணர்ந்தாலும் அன்றாட உணவு மற்றும் பிற தேவைகளுக்காகவே கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்ற பெரும்பான்மை உழைக்கும் மக்கள் வேலையும் இல்லாமல், கையில் காசும் இல்லாமல் தவிக்கப் போவதை எண்ணி மிகவும் கவலையுடன் இருந்தனர்.

இவ்வாறு மழை பொழியப் போகிறது என்ற செய்தியை கேள்விப்பட்டவுடன் வீட்டுக்கு ஒரு கார் வைத்திருக்கக்கூடிய நடுத்தர பணக்கார கும்பலும், மேட்டுக்குடி கும்பலும் இணைந்து தங்களது கார்களை வேளச்சேரியில் உள்ள மேம்பாலத்தின் மீது நிறுத்தி வைத்தனர் என்பது அதிசயமான செய்தியாக ஊடகங்களால் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது. ஊடகங்கள் வெளி உலகத்திற்கு தெரிவிக்காத வேறு சில உண்மைகளும் உள்ளன.

அதாவது யார் எக்கேடு கெட்டுப் போனால் என்ன, நான் பிழைத்துக் கொள்ள வேண்டும், என்னுடைய 2+2 கொண்ட ’அற்பக் குடும்பம்’ எந்த சிக்கலும் இல்லாமல் வாழ வேண்டும் என்ற, சமூகத்தில் ஒட்டாத ’ஒண்டித்தன வாழ்க்கை கலாச்சாரம்’ அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த வாழ்க்கையை உயர்வாக கருதி வாழும் கும்பலால் சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதிகளில் அறைகள் திடீரென அதிகமாக புக்கிங் ஆனது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தகையவர்கள் ”தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி, பாதுகாப்பான இடங்களைத் தேட துவங்கினர். குறிப்பாக, சென்னையில் இருக்கும் ஐடி ஊழியர்களும், தொழில்நுட்ப வல்லுனர்களும் இந்த மழை காலத்தில் தாங்கள் பாதுகாப்பாக இருப்பது மட்டும் அல்லாமல் எந்த நேரமும் பணிபுரிய மின்சாரம், வைஃபை, தண்ணீர் மற்றும் வாகனம் நிறுத்த பார்க்கிங் வசதிகளை தேடி ஹோட்டல்களில் தங்கத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து GRT ஹோட்டல்களின் சிஇஓ விக்கிரம் கோத்தா கூறுகையில், “பாதுகாப்பாக வாகனத்தை நிறுத்த மக்கள் அதிக தொகையை செலவழிக்கத் தயாராக உள்ளனர். இந்த வாரம் தியாகராய நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், குறிப்பாக வாகனத்தை நிறுத்துவதற்காக மட்டுமே ஒரு நாளுக்கு 8000 ரூபாய் வரை செலவு செய்ய தயாராகிப் பல ரூம்களை முன்பதிவு செய்தனர்” என்று தெரிவித்தார்

சென்னையில் மட்டும் சுமார் 3 லட்சம் பிக்டெக் ஊழியர்கள் உள்ளனர். இவர்களுக்கு மழை, வெள்ளக் காலத்தில் பாதுகாப்பான சூழ்நிலையில் பணியாற்றுவதற்கான இடம் தேவை என்பதால் நிறுவனத்தின் வாயிலாகவே புக்கிங் செய்யப்பட்டதாக ஹோட்டல் நிர்வாக அதிகாரிகள் கூறுகின்றனர். தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் மட்டும் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு நாளில் மட்டும் ரூம் புக்கிங் 15% அதிகரித்தது. அதிக எண்ணிக்கையில் குடும்பங்கள் முன்பதிவு செய்துள்ளன.

சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகளை கூட்டுத்துவ முறையில் எதிர்த்து சந்திக்க வேண்டும் என்ற உணர்வு இல்லாமல், தான் மட்டும் வசதியாக வாழ வேண்டும் என்றும், எந்த பாதிப்பும் தன்னை அணுகி விடக்கூடாது என்பதை சதா சர்வ காலமும் சிந்தித்துக் கொண்டிருக்கும் இத்தகைய நடுத்தர பணக்கார குடும்பத்தினரும், அவர்களது வாரிசுகளும் தான் பாசிச உளவியலுக்கு முதலில் பலியாகிறவர்கள்.

கொட்டி தீர்த்த மிக்ஜாம் புயல்: நிராதரவாக வட சென்னை மக்கள்!

அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் தலைமையிலான நிதி மூலதன-ஏகபோக ஆதிக்க கும்பல்கள் உலகை சூறையாடுவதற்கு அனைத்து துறைகளிலும் புகுந்து கட்டுப்படுத்துவதும், காலனிய, அரைக்காலனிய, நவீன காலனிய, மறுகாலனிய நாட்டு மக்களை சுரண்டி கொள்ளையடிப்பதும் கண் முன்னே நடந்து கொண்டுள்ள போதிலும், இதில் தனக்கு என்ன தேவை என்பதை சிந்திக்கின்ற மனிதர்களும் உள்ளனர் என்பதை தான் இது போன்ற நெருக்கடியான தருணங்கள் நமக்கு காட்டுகிறது.

இத்தகைய கும்பல்கள் தான் மழை பற்றி வானிலை அறிக்கை சொன்ன தகவல்கள் சிறிது மாறுபட்டவுடன், ’வானத்திற்கும் பூமிக்கும்’ குதிக்கின்றனர். தமிழகத்தை ஆளுகின்ற திமுக அரசின் மீது கடுமையான விமர்சனங்களையும், மீம்ஸ் கன்டென்ட் கிடைத்தது என்ற போர்வையில் கீழ்த்தரமான பல்வேறு மீம்ஸ்-களையும் வெளியிட்டு தனது அரிப்பை சொரிந்துக் கொள்கின்றனர்.

அக்கம் பக்கத்து வீடுகளில் என்ன நடந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாத, இழவே விழுந்தாலும் எட்டி பார்க்காத, இத்தகைய இழி பிறவிகள் கையில் கையில் ஒரு ஆப்பிள் ஐ போனும், அதை ரீசார்ஜ் செய்து ஒலி, ஒளிபரப்புவதற்கு டேட்டாவும் இருக்கின்ற ஒரே காரணத்தினால் இவர்கள் பரப்பும் கருத்து சமூக வலைதளங்களில் இடத்தை நிரப்புகிறது. மழை, வெள்ள பாதிப்புகளில் உண்மையாக ஏற்படக்கூடிய சிக்கல்களையும், அதனால் வாழ்க்கை இழக்க போகின்ற பெரும்பான்மை மக்களின் வாழ்க்கையை பற்றியும் சிறிதும் அக்கறையின்றி தான் சொகுசாக ஓட்டல்களை தங்கியது மட்டுமின்றி, ஏன் அரசும், தனியாரும் சொன்னது போல மழை பொழியவில்லை என்று எதிர்மறையாக கேள்வி கேட்டு தனது கீழ்த்தரமான புத்தியை காட்டிக் கொண்டுள்ளனர்.

இன்னொரு புறம் பாதிப்புகளை தெரியப்படுத்துகிறோம் என்ற போர்வையில் தண்ணீர் தேங்கி கிடக்கின்ற இடத்தை தேடி ஓடி அதனை படம் எடுத்து சமூக ஊடகங்களில் பரப்புகின்ற திடீர் ’சமூக ஆர்வலர்களும்’ உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

200 ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவு: தென் மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளிப்பு!

இவர்களுக்கு மக்களின் வாழ்க்கை துன்ப துயரங்கள் பற்றி அக்கறை இல்லை அதைப்பற்றி கண்டு கொள்ளாத போதிலும் எதிர்மறையான கருத்துக்களை உருவாக்குவதில் முன்னிலை வகிக்கின்றனர் என்பதால் பாசிச நச்சுக் கருத்துகள் இவர்களுக்கு பொருத்தமாக உள்ளது. அன்றாடம் பல்வேறு நெருக்கடிகளுடன் வாழ்க்கை நடத்தும் பெரும்பான்மை மக்கள் இவர்களுக்கு புரிகின்ற மொழியில் தக்க பாடம் புகட்ட வேண்டிய கட்டாயம் உள்ளது.

முகம்மது அலி.

2 COMMENTS

  1. அருமை அருமை சிறப்பு..

    சமூகத்திற்கான தேவை,
    சமூக மயமாக்கப்பட்ட உற்பத்திமுறை,
    பகிர்வுமுறை. சமூகத்திற்கான அரசியல், இவைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய அரசியல் இல்லையென்றால்,
    மக்களில் ஒரு பிரிவினர்,..
    தான் வாழ்ந்தால் போதும், இந்த சமூகம் எக்கேடு கெட்டாலும் அதன் மீது கடுகளவும் அக்கறை தேவையில்லை என்ற சுயநல கண்ணோட்டத்தில் வாழ்க்கை நடத்தும்…

    இதனை மாற்ற ஒரே வழி தான் உள்ளது..

    சமூகத்தைப் பற்றி, ஆக பெரும்பான்மையாக இருக்கக்கூடிய உழைக்கும் மக்களைப் பற்றி சிந்திக்க கூடிய மார்க்சிய கம்யூனிச அரசியல் இல்லாமல் மாற்றம் நிகழாது..

  2. யார் எக்கேடு கெட்டுப்போனால் என்ன? தானும் தன் குடும்பமும் செழித்தோங்கி வாழ வேண்டும் என்ற சுயநல கண்ணோட்டம் பெருகி வருவது – அப்படிப்பட்ட எண்ணம் உடையோரைக் கூட தனிப்பட்ட முறையில் நிம்மதியாக வாழ்ந்து விடக்கூடிய சூழ்நிலையை இச்சமூகம் உருவாக்கித் தரவில்லை. எனில் கட்டுரையாளர் விரிவாக விளக்கி இருப்பது போல அனைத்து மக்களும் சமூகம் சார்ந்து – ஒருங்கிணைந்து வர்க்க உணர்வு பெற்று , பிரச்சனைகளுக்கான விடியல் பயணத்தை சரியான அரசியல் தத்துவார்த்த வழித்தடத்தில் பயணிக்க வேண்டும் என்பதனை நன்றாகவே புரிய வைத்துள்ளது இக்கட்டுரை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here