சாம்சங் தொழிலாளர் போராட்டம் தீவிரமாக நடந்துக் கொண்டிருக்கும் இந்நிலையில் கம்யூனிஸ்ஸ்ட் தொழிற்சங்கம் மீது அவதூறு பரப்பு விதமாக செய்திகள் திமுக ஐடி விங்கால் பரப்பப்பட்டு வருகிறது.
கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம் உள்ளே நுழைந்ததால் தான் நோக்கியா ஆலையை மூடி விட்டு சென்றார்கள் என்று வாய்க்கு வந்ததை சகட்டு மேனிக்கு அடித்து விடுகிறார்கள். நோக்கியா தனது ஆலையை மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் விற்று விட்டு பல்லாயிரம் தொழிலாளர்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு சென்றது. அவர்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்று தந்தது தொழிற்சங்கம் தான். அதுமட்டுமல்ல 21,000 கோடி வரி பாக்கியை செலுத்தாமல் அரசை ஏமாற்றி சென்றது கூட தெரியாமல் தவறான தகவலை பரப்பிக் கொண்டு வருகிறார்கள்.
தொழிற்சங்கத்தின் வரலாறு தெரியாமால் பேசுவதும் முதலாளித்துவத்திற்கு சாதகமான கருத்துக்களை பரப்புவதும் என செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இணைய கும்பல்.
இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் பேட்டி அளித்துள்ளனர். இதன் மீது கருத்துக்கள் இருந்தால் வாசகர்கள் கமெண்ட் பாக்சில் தெரிவிக்கவும்.