பஞ்சம் பிழைக்க வரும் வட மாநிலத்தவர்கள் நம் எதிரிகளா?

டந்த சில நாட்களுக்கு முன்னர் திருப்பூர் பகுதியில் வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழர்களை தாக்கியதாக சமூக வலைதளங்களிலும், செய்தித்தால்களிகு செய்திகள் வைரலாக பரவியது.

இதில் பலரும் பஞ்சம் பிழைக்க வந்த வடமாநிலத்தவர்கள் தமிழர்களை தாக்குவதா என்றுய் கொதித்தெழுந்து பேசினார்கள். சில இனவாத கும்பல்கள் அன்றே ‘அண்ணன்’ சொன்னார் என்று கருத்து பேச ஆரம்பித்தார்கள். உண்மையாகவே வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் நம்மை அடக்கினாலோ, அடித்தாலோ இயல்பாகவே கோபம் வரும்.

ஆனால், அவர்கள் நம் மாநிலத்திற்கு ஏன் வருகிறார்கள் என்று சிந்தித்து பார்ப்பதில்லை. இன்று தமிழ்நாட்டின் தொழில்நகரங்களில் வேலைப் பார்க்கும் பலரும் பலமாவட்டங்களில் இருந்து வந்து வேலை பார்ப்பவர்கள் தான். காரணம் தனது சொந்த மாவட்டத்தில் வேலை இல்லாததே! அதே போல தான் வட மாநிலங்கள் பலவும் தொழில்வளர்ச்சியில்லாமல் பின் தங்கியுள்ளது. அங்கு வாழவே வழையில்லாமல் தான் தனது குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ள, பஞ்சம் பிழைக்க தொழில்வளர்ச்சியில் முன்னேறிய தமிழகத்தை நோக்கி படையெடுக்கிறார்கள்.

இங்கு வேலையின்மை தான் பிரச்சினையே! அது இந்தியா முழுவதும் நிலவும் பிரச்சினை. இதற்கு காரணமான கும்பலை எதிர்க்காமல், இதனால் பாதிக்கப்பட்ட உழைக்கும் மக்களை எதிர்ப்பது ஆளும் வர்க்கத்திற்கு சாமரம் வீசுவதே!

இது குறித்து கோவை மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாவட்ட துணைத்தலைவர் தோழர் கோபிநாத் பேசியுள்ளார்.

பாருங்கள்! பகிருங்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here