சங்கிகளின் முருகன் மாநாடு: தடி ஊர்வலம் மூலம் முறியடிப்போம்!

3

சங்கிகளின் முருகன் மாநாடு: தடி ஊர்வலம் மூலம் முறியடிப்போம்!

தமிழகமே, உஷார்! எச்சரிக்கை!
கலவரம் நடத்தவே முருகன் மாநாடு!
காவிக்கு எதிரான லல்லு-பாணி தடி ஊர்வலம் மூலம் முறியடிப்போம் வாரீர்!

திருப்பரங்குன்றம் மலை & சிக்கந்தர் தர்கா வரலாறு தான் என்ன?


திருப்பரங்குன்றம் மலையின் அடிவாரத்தில் முருகன் கோவிலும், மலை உச்சியில் நெல்லித்தோப்பில் ஹஷரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா ஔலியா தர்ஹா மற்றும் மசூதி மற்றும் சமண, பௌத்த, காசி விஸ்வநாதர் கோவில் வழிபாட்டுத் தளங்களும் தனித்தனியே அவரவர் எல்கைக்கு உட்பட்டு நூற்றாண்டுகளாக அனுபவித்து வருகிறார்கள்.

இதில் இந்து- முஸ்லிம் என்ற வேறுபாடுகள் திருப்பரங்குன்றத்திலோ, மதுரையிலோ, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலோ என்றுமே இருந்ததில்லை. மக்கள் நல்லிணக்கத்தோடுதான் வாழ்ந்து வருகின்றனர். தர்ஹாவில் இஸ்லாமியர்களால் வெட்டப்படும் கிடாய் பிரியாணி விருந்தில் வழிபாடு செய்து இந்துக்கள் மிக விருப்பத்தோடு பங்கேற்று வந்துள்ளார்கள்.

முருகன் கோவில் நிகழ்ச்சிகளில் இஸ்லாமியர்கள் மோர், குளிர்பானங்கள் வழங்குதல், தயிர் சாதம், லெமன் சாதம், தக்காளி சாதம் போன்ற பார்சல் உணவுகளை வழங்கி ஒருவருக் கொருவர் இணக்கமான உறவுகளையே கடைப்பிடித்து வருகின்றனர்.

இதுவன்றி 1813 காலம் தொட்டு 1971 வரை இந்த தர்ஹா மீது குறி வைத்து அக்கால சங்கி முதல் இக்கால சங்கி வரை அதனை அகற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

1800-களின் துவக்கத்தில் மதுரை நீதிமன்றத்தில் எதிரிகள் தொடுத்த வழக்கில் சிக்கந்தர் தர்காவும் மற்றும் அதனை ஒட்டிய நிலப்பரப்பும் இஸ்லாமிய நிர்வாகத்தினருக்குச் சொந்தம் என்று நீதிபதி ராமய்யர் தீர்ப்பு வழங்கினார்.

அப்பொழுதே கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டு தர்ஹா பகுதியில் நில அளவை செய்து ஒட்டுமொத்த மலை, தர்ஹா, கோவில்களையும் தணிக்கை செய்து கற்கள் ஊன்றி ஒவ்வொருவருக்கும் எல்கைகள் நிர்ணயிக்கப்பட்டு நீதிபதியிடம் கமிஷன் அறிக்கை ஒப்படைத்த பின்பே மேற்கண்டவாறு நீதிபதி ராமய்யர்தீர்ப்பு வழங்கினார்.

இதனை எதிர்த்து எதிரிகள் பிரிட்டிஷ் இந்தியா காலத்திய லண்டன் பிரிவி கவுன்சிலில்(அதுதான் அன்றைய உச்சநீதிமன்றம்) மேல்முறையீடு செய்கின்ற பொழுது, லண்டன் பிரிவி கவுன்சிலும் 1813-லேயே தீர்க்கமான முறையில் பிரச்சனையை ஆய்வு மற்றும் விசாரணை செய்து கீழ் கோர்ட்டில் நீதிபதி ராமய்யர் வழங்கிய தீர்ப்பையே உறுதிப்படுத்தியது. பின்பு 1971 காலக்கட்டம் வரையிலும் மீண்டும் மீண்டும் எதிரிகள் பல்வேறு தருணங்களில் வழக்கு மன்றங்களுக்கு அலைந்தும் இதுவரை எதிரிகள் தமக்கு சாதகமான ஒரு துண்டுச் சீட்டு நீதிமன்ற தீர்ப்பையும் பெற இயலவில்லை என்பது மிக மிகச் சுருக்கமான திருப்பரங்குன்றம் மலை வரலாறாக நிலைத்து நிற்கிறது.

கலவர ரௌடி எச்ச ராஜா!

கடந்த பிப்ரவரி 1-முதல் 4-வரை ஹைபர் கணவாய் வழி வந்த பார்ப்பனக் கூட்டப் பிரதிநிதியும், கலவரக் காரனுமான எச். ராஜா இப்படிக் கூறினான்:
‘ஆர் எஸ் எஸ்- பாஜக -இந்து முன்னணி அமைப்பினர் அனைவரும் என்ன தடை இருந்தாலும் அனைத்தையும் முறியடித்து பிப்ரவரி 4-ல் பல்லாயிரக்கணக்கில் மதுரை திருப்பரங்குன்றம் வந்தடைய வேண்டும். போலீஸ் மறைக்கும்; தடுக்கும்; எதிரிகள் முட்டுக்கட்டை போடுவார்கள்; நீதிமன்றம் கூட தடுக்கும்; அனைத்துத் தடைகளையும் மீறி உணர்ச்சி பூர்வமாக திருப்பரங்குன்றம் மலைக்கு வந்து சேர வேண்டும்’.

அதற்கு ஏற்றார் போல நீதிமன்றமோ பாஜகவிற்கு ஆதரவு தரும் வகையில் போலீஸ் 144 தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும் பொழுதே, திரண்டிருந்த சங்கிகள் கைதாகி மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களை விடுவிக்க உத்தரவிட்டது. மதுரை பழங்காநதத்தில் கூட்டம் நடத்திட அனுமதித்தது.

ஆனால் நடந்தது என்ன?

ஏற்கனவே வெவ்வேறு வழிகளில் திருப்பரங்குன்றத்தில் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தது‌ காவி(லி)க் கூட்டம். எதற்கும் கட்டுப்படாத சங்பரிவார் காவிக் கூட்டம் காவிக் கொடிகளுடனும், பாஜக கொடிகளுடனும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குள்ளேயே நுழைந்து, காட்டுக்கூச்சலிட்டதையும், இருவிதக் கொடிகளையும் உயர்த்திக் காண்பித்து, மலையின் மீதுள்ள சிக்கந்தர் தர்காவை அகற்றுவோம் எனக் கூச்சலிட்டதையும் நாடறியும். இவை யாவும் 144 தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும் பொழுதே நடந்தேறியது.

இதில் வேடிக்கை என்னவென்றால், திருப்பரங்குன்றம் வாழ் மக்களோ, மதுரை மக்களோ, சுற்றியுள்ள கிராம நகர மக்களோ சங்கிகளின் இந் நடவடிக்கைகளுக்கு எதிரான மன உணர்விலேயே இருந்தனர். காரணம் இந்து- முஸ்லீம்-கிறிஸ்தவ ஒற்றுமை என்பது ஆண்டாண்டு காலமாக தமிழ் மண்ணில் ஊறி திளைத்து கிடக்கிறது.

அதனால் தான் சங்கிகள் கூட்டம் உள்ளூரில் ஆள் கிடைக்காமல் தமிழ்நாடு முழுவதும் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆட்களை கொண்டு வந்து சேர்த்திருந்தனர்.

சங்கிகளுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த அதிகார வர்க்கம்.

இதற்கு முன்பாகவே ஆபத்தினை குறிப்புணர்ந்த மதுரை பகுதி மத நல்லிணக்க கூட்டமைப்பு மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாநகராட்சி ஆணையாளர், லோக்கல் போலீஸ் உட்பட அனைத்து அதிகாரவர்க்க அமைப்புகளிடமும் நிகழவிருக்கும் அசம்பாவிதங்கள் குறித்து முன்னெச்சரிக்கையாக விண்ணப்பம் அளித்து தடுத்து நிறுத்தக் கோரியிருந்தனர். ஆனாலும் பிப்ரவரி 4-ல் சங்கிக் கூட்டத்தினரால் திருப்பரங்குன்றத்தில் அனைத்து அசம்பாவிதங்களும் நடந்தேறி முடிந்தன. இதற்கு அனைத்து அதிகாரவர்க்க கூட்டமும் உடந்தையாக இருந்திருக்கின்றன என்று சொன்னால் அது மிகையல்ல. திராவிட மாடல் என்று கூறிக் கொள்ளும் அரசும் கூட ஏனோ தானோ வென்று ஒதுங்கியே இருந்தது.

இவ்வளவு கலவரங்களையும் நடத்திவிட்டு எச்ச ராஜா இப்படி கூக்குரல் இட்டான்:‘வடக்கே அயோத்தி ராமர் கோயில் என்றால் தெற்கே திருப்பரங்குன்றம் முருகன் கோவில்’ – எனக் குரைத்தான்.

அதாவது வடக்கே பாபர் மசூதியை இடித்து தள்ளியது போல், தெற்கே திருப்பரங்குன்றம் (மலைமீது பல நூற்றாண்டுக் காலமாக இந்து மதத்தினர் உட்பட சகலருக்கும் வழிபாட்டுத் தலமாக இருந்து வரும்) சிக்கந்தர் தர்காவை இடித்துத் தள்ளுவோம்…
என்பதுதான் எச்ச . ராஜா அறிவிப்பின் சாரம்.

இவ்வளவுக்குப் பிறகும் கண் துடைப்பிற்காக ஓரிரு எப்ஐஆர்-களை காவல்துறை பதிந்ததோடு சரி. ஒருவரைக் கூட கைது செய்து சிறையில் தள்ளவில்லை. ‘ஹை கோர்ட் டாவது மயிராவது’ என்று முன்னொரு முறை புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை நடவடிக்கைக்கு எதிராக பேசியவன்தான் இந்த எச்ச.ராஜா. பின்பு உயர்நீதிமன்றத்தில் அதற்காக மன்னிப்புக் கேட்டவனும், நீதிமன்றத்திற்குள் வழக்கறிஞர்கள் இருக்கையில் குற்றவாளியான எச்ச ராஜா நாற்காலியில் அமர்ந்ததற்கு எதிராக வழக்கறிஞர்கள் குரல் எழுப்பியதும், விழுந்த அடித்து வெளியேறியவனும் இதே எச்ச. ராஜாதான். சூடு சொரணை வெட்கம் மானம் அனைத்தையும் உதிர்த்தவர்கள் தான் இந்தப் பார்ப்பனக் கூட்டம்.

2019 நம்ம சூத்திர பஞ்சம எல்.முருகனின் வேல் யாத்திரையும் – பார்ப்பன பின்புலத்துடன் 2025 இந்து முன்னணியின் முருக பக்தர்கள் மாநாடும்:

2019 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஒன்றிய அமைச்சர் எல். முருகன் வேல் யாத்திரை நாடகம் நடத்தி மண்ணைக் கவ்வினார்.

படிக்க:

🔰 அயோத்திக்கு ராமன்! மதுரைக்கு முருகன்! மீண்டும் எரியூட்டப்படும் அபாயத்தில் மதுரை!

🔰 எங்க வந்து நடத்துற ரத யாத்திரை | மகஇக பாடல் | மீள்பதிவு

இடையில் ஆட்டுக்குட்டி அண்ணாமலை பாதயாத்திரை என்ற பெயரில் படுக்கை வசதியுடன் கூடிய வாகனத்தில் உல்லாச யாத்திரை நடத்தினார். இன்றைக்கு அவரது மாநிலத் தலைமை பொறுப்பே பறிக்கப்பட்டு நடுத்தெருவில் இருக்கிறார். ஐபிஎஸ் பதவியான போலீஸ் கமிஷனர் பதவியையும் இழந்து நிற்கிறார்.

இந்நிலையில் எதிர்வரும் ஜூன் 22-ல் மதுரை வண்டியூர் லிங்க் ரோட்டில் பாசிச- ஆர்எஸ்எஸ்- பாஜக -சங் பரிவார் -காவிக் கூட்டத்தின் பின் பலத்தோடு ‘இந்து முன்னணி’ சார்பாக என்ற பெயரில் “குன்றம் காக்க… கோயிலைக் காக்க…” என்ற திரை மறைவில் ‘முருக பக்தர்கள் மாநாட்டினை’ (அரசியல் மாநாட்டினை) கூட்டி இருக்கிறார்கள்.

“இது ஆன்மீக மாநாடு அல்ல; அரசியல் மாநாடு; கலவரத்திற்கு திட்டமிடும் மாநாடு” போன்ற விவரங்களை உள்ளடக்கி இந்த மாநாட்டிற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று மத நல்லிணக்க கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டது.

மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் அனைவரிடமும் முறையீடு செய்து இந்த மாநாட்டினை தடுக்குமாறு விண்ணப்பித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் அதிகார வர்க்கம் முழுமையும் காவிமயமாகி வருவதால் நீதிமன்றம் உட்பட அனைத்து அதிகாரவர்க்க அமைப்புகளும் மாநாடு நடத்துவதற்கு குறுக்கே இருக்கப் போவதில்லை. ஏன் திராவிட மாடல் அரசு என்று கூறிக் கொள்ளும் மு.க. ஸ்டாலினின் திமுக அரசும் இந்த மாநாட்டிற்கு பலமான எதிர்ப்பு ஒன்றையும் காட்டிக் கொள்ளவில்லை.
இந்த மாநாட்டிற்கு லட்சக்கணக்கில் தமிழ்நாட்டிலும் அண்டை மாநிலங்களிலும் ஆட்களைத் திரட்ட காவிக் கூட்டம் திட்டமிட்டு உள்ளது.

ஜூன் 9 அமித் ஷாவின் பற்ற வைத்த பேச்சு: 

நாடெங்கும் நிகழ்ந்த மதக் கலவரங்களுக்கு – கொலை பாதகச் செயல் களுக்கு மூலவரான அமித்ஷா கடந்த ஜூன் 9 மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசி, அந்த தர்காவிற்கு திமுகவும் ஸ்டாலினும் பக்கபலமாக இருப்பதாக தீயைப் பற்ற வைத்து, தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக இந்து மக்கள் இதை முறியடித்தாக வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் கொழுப்பெடுத்தக் கருத்துக்களை பேசி விட்டு அந்த முருக பக்தர்கள் மாநாட்டினை வெற்றிகரமாக ஆக்குங்கள் என்று அரைகூவல் விடுத்துச் சென்றுள்ளார்.

ஆக இதன் மூலம் இது ஆன்மீக முருக பக்தர்கள் மாநாடு அல்ல; இது கலவர புத்தி உடைய அரசியல் மாநாடு என்பதை அனைவரும் எளிதில் புரிய முடியும்.

வட மாநிலங்களில் இவ்வாறு மதக் கலவரத்தை ஏற்படுத்தி அரசியல் அறுவடை செய்து ருசி கண்ட காவிக் கூட்டம், தமிழ் மண்ணில் அத்தகைய அறுவடையை செய்ய ஆளாய்ப் பறக்கிறது. 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி வெற்றி பெற பகற் கனவு காண்கிறது.
இப்படிப்பட்ட மத ரீதியான இயக்க நடவடிக்கைகள் தவிர்த்து, EVM வாக்கு இயந்திர தில்லு முல்லு மோசடிகளை தேர்தல் ஆணையத்தின் பக்க பலத்தோடு அரங்கேற்றத் துடித்துக் கொண்டிருக்கிறது.

பீகார் லல்லு –பாணி தடி ஊர்வலப் பதிலடியே இவர்களுக்குப் பாடம் புகட்ட வழிவகுக்கும்.

முன்பு அத்வானி தலைமையில் வானரக் கூட்டம் ரத யாத்திரை என்ற பெயரில் நாடு முழுமைக்கும் கலவரத் தீயை மூட்டிக் கொண்டிருந்த வேளையில், பீகாருக்குள்ளும் நுழையத் திட்டமிட்டது. அன்றைய பீகார் முதல்வராக இருந்த லல்லு பிரசாத் ரத யாத்திரைக்கு எதிராக “தடி ஊர்வலம்(யாத்திரை)” என்பதாக துணிச்சலாக அறிவித்தார். அதன் பலன் அத்வானி தலைமையிலான வானரக் கூட்டத்தால் பீகாருக்குள் நுழைய முடியவில்லை.

அதே பாணியில், தமிழ்நாட்டிலும் தடி ஊர்வலம் நடத்த வேண்டும். திராவிட மாடல் அரசு என்று மார் தட்டும் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இந்த முருக பக்தர்கள் மாநாட்டிற்கு எதிராக பாஜக சங்கிக் கூட்ட எதிர்நிலை சக்திகள் அனைத்தையும் ஒன்று திரட்டி தடி ஊர்வலம் நடத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி கட்சிகள், பெரியாரியத் திராவிட இயக்கங்கள், இடதுசாரிகள், புரட்சிகர இயக்கங்கள், அனைத்து ஜனநாயக இயக்கங்கள், மாணவர்- தொழிலாளர்கள்-விவசாயிகள்- வணிகர்கள் – அனைத்து சிறுபான்மையினர்- ஒடுக்கப்பட்ட மக்கள் என சாதி மத வேறுபாடுகளை களைந்து வெகு மக்களை அணி திரட்ட வேண்டும்.

அதுமட்டுமல்ல; அண்டை மாநிலமான கேரளாவின் முதல்வர் பினராய் விஜயன், தெலுங்கானா முதல்வர், மேற்குவங்க முதல்வர், பஞ்சாப் முதல்வர், ஜார்க்கண்ட் முதல்வர், ராகுல் காந்தி, கார்கே, அகிலேஷ் (யாதவ்), தேஜஸ் வி(யாதவ்) மற்றும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பாஜக எதிர்ப்பு நிலை அரசியல் இயக்கங்கள் அவர்கள் சார்ந்த மக்கள் அனைவரையும் கூட திரட்டி அணிச்சேர்க்கை செய்து தமிழ் மண்ணில் காவித்தடம் பதிய விடாதபடி உஷாராக – முன்னெச்சரிக்கையாக இருந்து தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அனைவரிடதும் ஆகும். தமிழகமே,
உஷார்! எச்சரிக்கை!

  • எழில்மாறன்

3 COMMENTS

  1. சிறந்த அரசியல் உதாரணம் வழிகாட்டல்.
    தேர்தலுக்காக வைக்கும் கூட்டணியை விட காவிகளுக்கு எதிராக கூட்டணி வைக்க வேண்டும்.
    அப்போதுதான் காவிகளுக்கு முடிவுரை எழுத முடியும்

    • நீங்கள் மேற்கண்ட கட்டுரையைப் படித்த பிறகு நான் அனுப்பி இருந்த கட்டுரையில் தவறுதலாக விடுபட்டுப் போன ‘ஜூன்-9 அமித் ஷாவின் பற்ற வைத்த பேச்சு’ என்ற தலைப்பில் காணும் மூன்று பத்திகள் தற்போது சம்பந்தப்பட்டவர்களால் இணைக்கப்பட்டுள்ளது. அதனையும் படிக்கத் தவறாதீர்கள். நன்றி

  2. போலீஸ், நீதிமன்ற, மாவட்ட நிர்வாகம் அனைத்தும் தோற்ற நிலையில்….தடி ஊர்வலமே சரியான போராட்ட வடிவம்….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here