யாத்திரை என்ற பெயரில் மக்களிடம் வெறுப்பை விதைப்பதை வேலையாக வைத்துள்ள சங்பரிவார் கும்பல் ராமர் கோவில் பிரச்சினை தொடங்கி பல இடங்களில் ரதயாத்திரை நடத்தி கலவரத்தை உருவாக்கியுள்ளது என்பது வரலாறு.
அதேபோல் தான் தமிழகத்திலும் ரதயாத்திரையை நடத்தியது. ஆனால் தமிழக மக்களிடம் இருக்கும் சமூக நல்லிணக்கம் காரணமாக கலவரம் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் சங்கி கும்பலிடம் இருந்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தான் எப்படியாவது தமிழகத்தில் மதகலவரத்தை உருவாக்கிவிட வேண்டும் என்று அண்ணாமலை தலைமையில் பாதயாத்திரையை தொடங்கியுள்ளது தமிழக பாஜக.
கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இதுபோல் ரதயாத்திரை நடத்தும் பொழுது மக்கள் கலை இலக்கிய கழகம் உருவாக்கிய எங்க வந்து நடத்துற ரதயாத்திரை பாடலை தற்போது மீள்பதிவு செய்கிறோம்.