வக்ஃப் வாரிய சொத்தைத் தொடர்ந்து சர்ச்சுகளின் சொத்துக்கள் மீது பாயத் தயாராகும் ஆர்எஸ்எஸ்!

சர்ச்சு நிலங்களுக்கு எதிரான இவர்களின் கருத்துக்களை மக்களிடையே முறியடிக்க வேண்டுமானால் ஃவக்ப் வாரிய சட்டத் திருத்தத்தின் நோக்கத்தையும்...

1

ஸ்லாமிய மதத்திற்கு மக்களால் கொடுக்கப்பட்ட நன்கொடைகளை, தானங்களை முறைப்படி நிர்வகிப்பதற்கு என்று இந்திய அரசால் வக்ஃப் வாரியம் உருவாக்கப்பட்டது. இந்த வாரியத்தை நிர்வகிப்பதற்கு என்று வக்ஃப் வாரிய சட்டம் நிறைவேற்றப்பட்டு அதன்படி இந்த வாரியம் காலம் காலமாக செயல்பட்டு வருகிறது.

மக்களால் தானமாக வழங்கப்பட்ட வக்ஃப் வாரிய சொத்துக்களை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே பாஜக அரசு ஃவக்ப் வாரிய சட்டத்தில் திருத்தத்தை இப்பொழுது நிறைவேற்றியுள்ளது.

வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய மகிழ்ச்சியில் உடனே ஆர் எஸ் எஸ் தனது அடுத்த தாக்குதலை, கிறிஸ்தவ சர்ச்சுகளின் சொத்துக்களுக்கு எதிராக துவக்கி விட்டது.

ஆர்எஸ்எஸ் இன் அதிகாரப்பூர்வ இணையதளமான “தி ஆர்கனைசர்- ல் “அதிக நிலங்களை வைத்திருப்பது யார்? கத்தோலிக்க சர்ச்சா அல்லது ஃவக்ப் வாரியமா – விவாதம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதப்பட்டிருந்தது.

அதில் கத்தோலிக்க சர்ச்சுகள் நாடு முழுவதும் சுமார் 7 கோடி ஹெக்டேர் (17.29 கோடி ஏக்கர்) நிலத்தை வைத்திருக்கிறது என்றும் இந்த சொத்துக்களின் மொத்த மதிப்பு சுமார் ₹ 20,000 கோடி என்றும் இந்தியாவின் ரியல் எஸ்டேட் நிலப்பரப்பில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை கத்தோலிக்க சர்ச்சுகள் கொண்டுள்ளதாகவும் அந்த கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது.

இது ” அயோத்தியில் வென்று விட்டோம் இனி நமது இலக்கு மதுரா, காசி” என்று ஆர் எஸ் எஸ் காரர்கள் முழங்கி வருவதையும் அங்குள்ள மசூதிகளை அகற்றி அந்த இடங்களை அபகரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதையும் நமக்கு நினைவு படுத்துகிறது.

இஸ்லாமிய வக்ஃப் வாரிய சொத்துக்களை அபகரிப்பதற்கான சட்டத் திருத்தத்தை கொண்டு வந்து விட்டோம். இனி கிறிஸ்தவ சர்ச்சுகளின் நிலங்களை அபகரிப்பதற்கான வேலைகளை தொடங்குவோம்

என்று ஆர் எஸ் எஸ் முழங்குவதாகவே இதை நாம் பார்க்க வேண்டும்.

இந்தக் கட்டுரையை படிக்கும் ஆர் எஸ் எஸ் -ன் ஊழியர்கள், சர்ச்சுகளின் நிலங்களை ஆர்எஸ்எஸ் இன் புரவலர்கள் அபகரிப்பதற்கு ஏற்ப நாட்டு மக்களின் மனநிலையை பக்குவப்படுத்துவதற்கான வேலைகளை இந்தியா முழுமைக்கும் பரவலாக கொண்டு செல்வார்கள்.

இதன் மூலம் சர்ச்சுகளிடம் இருந்து நிலங்களை பறிக்க வேண்டும் என்ற கருத்து அப்பாவி இந்து மக்களின் மனங்களில் விசமரமாக வளர்த்தெடுக்கப்பட்டபின் அந்த வேலைத் திட்டத்தை வெளிப்படையாக அறிவித்து செயல்படுவார்கள்.

இதுதான் ஆர் எஸ் எஸ் இன் வழிமுறை. அதற்கு ஏற்ப தான் இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. அதே சமயம் ஆர் எஸ் எஸ் ன் அதிகாரப்பூர்வ இணையதளமான ஆர்கனைசரில் பதிவேற்றிய இந்த கட்டுரை நாடு முழுதும் உள்ள ஆர் எஸ் எஸ் ன் ஊழியர்களிடம் சென்று சேர்ந்த பிறகு இப்பொழுது அந்தக் கட்டுரையை யாரும் படிக்க முடியாதபடி முடக்கி வைத்து விட்டனர்.

இப்பொழுது இந்த கட்டுரை குறித்து யாராவது கேள்வி எழுப்பினால் “அதுதான் அந்த கட்டுரையை நீக்கி விட்டோமே?” என்று கூறுவார்கள். ஆனால் நாம் மேலே கூறியபடி ஆர் எஸ் எஸ் ன் ஊழியர்கள் தங்களது பிரச்சாரத்தை நாட்டு மக்கள் இடையே தொடர்ந்து நடத்துவார்கள்.

படிக்க: 

 வஃக்பு சட்ட நிறைவேற்றம்: இந்தியாவின் கருப்பு தினங்களின் எண்ணிக்கை கூடுகிறது!

  வக்ஃப் சொத்துக்களை ஆட்டையப்போடத் துடிக்கும் காவி பாசிஸ்டுகள்!

இந்தக் கட்டுரையில் உள்ள அயோக்கியத்தனமான கருத்திற்கு எதிரான வாதங்கள் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்படாத நிலையில் மக்கள் இவர்களின் கருத்திற்கு பலியாவதை தவிர்க்க முடியாது.

சர்ச்சு நிலங்களுக்கு எதிரான இவர்களின் கருத்துக்களை மக்களிடையே முறியடிக்க வேண்டுமானால் வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தின் நோக்கத்தையும் அதில் உள்ள அபாயத்தையும் மக்களிடையே விளக்கிப் புரிய வைக்க வேண்டும். அதன் தொடர்ச்சி தான் சர்ச்சுகளின் மீதான இவர்களின் பாய்ச்சல் என்பதை புரிய வைக்க வேண்டும்.

நம்மைப் பொறுத்தவரை மத நிறுவனங்களின் சொத்துக்கள் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு மக்களின் சொத்தாக மாற்றப்பட வேண்டும் என்று கூறுகிறோம்.

வக்ஃப் வாரியத்தின் விவசாய நிலங்கள், சர்ச்சுகளுக்கு சொந்தமான விவசாய நிலங்கள், கோவில்கள் – ஆதீனங்கள் – மட ஆலயங்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் அனைத்தும் உழுபவனுக்கே சொந்தமாக்கப்பட வேண்டும் என்று கூறுகிறோம்.

ஆனால், இஸ்லாமிய மத நிறுவனங்களின் சொத்துக்களைப் பற்றியும் கிறிஸ்தவ மத நிறுவனங்களின் சொத்துக்களைப் பற்றியும் வாய்கிழிய பேசும் ஆர்எஸ்எஸ் பாஜகவினர் ஏன் இந்து கோயில்கள், மடாலயங்கள், ஆதீனங்களின் சொத்துக்களை அரசு நிர்வகிக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்? என்பதை கேட்டு அவர்களின் நோக்கத்தை அம்பலப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்து அறநிலையத் துறையை கலைக்க வேண்டும்; அதனிடம் உள்ள சொத்துக்களை இந்துக்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று ஆர் எஸ் எஸ் பாஜகவினர் ஏன் முழங்கி வருகின்றனர்? என்று கேள்வி எழுப்ப வேண்டும்.

  • குமரன்
    செய்தி ஆதாரம்: The telegraph

1 COMMENT

  1. கட்டுரையைப் படிக்கும் பொழுது இந்திய நாட்டில் இருக்கக்கூடிய பெரும்புகுதி மக்களின் மௌனம் தான் மனதை ஆழமாக பாதிக்கச் செய்கிறது. ஆர் எஸ் எஸ் – பாஜக –
    இந்துத்துவ – சங்பரிவார் – பாசிச காவி கூட்டம்
    நாட்டில் அரங்கேற்றிக் கொண்டிருக்கக் கூடிய அனைத்து மக்கள் விரோத பாசிச நடவடிக்கைகளையும் மக்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது வினோதமாக இருக்கிறது. பலர் ‘வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்’ – என்ற தன்மையில் தமது வாழ்க்கைப் பயணத்தை தொடர்கிறார்கள்.
    அல்லது தனிப்பட்ட முறையில் நமக்கு ஒன்றும் ஆபத்து நேர்ந்து விடவில்லையே என்று சுய திருப்தி கொள்கிறார்கள். நாசிச ஹிட்லர் ஜெர்மனியில் அனைத்து தரப்பு மக்களையும் கொன்று குவிக்கின்ற பொழுது மார்ட்டின் நிமோலர் என்ற கவிஞன் பாடிய கவிதை வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன. “நாசிசம் கம்யூனிஸ்ட்டுகளை – தொழிற்சங்க தலைவர்களை – யூதர்களை – கத்தோலிக்கர்களை – புரட்ட ஸ்டாண்டுகளை இவ்வாறு ஒவ்வொருவராக பிரிவினரையும் அழித்து ஒழித்துக் கொண்டிருந்த பொழுது நான் பார்வையாளனாக இருந்தேன்; காரணம் அவர்கள் என்னிடம் வரவில்லையே என்ற நம்பிக்கையில் இருந்தேன். இறுதியில் அந்த நாசிச கொலைகாரப்படை என்னிடம் வருகின்ற பொழுது என்னைக் காப்பாற்ற எவருமே எஞ்சி இருக்கவில்லை” – என்ற சாரத்தில் கவிதை நடை யில் கவிதை பாடி இருப்பார். அதே நிலை தான் இன்று பாசிச ஆர் எஸ் எஸ் – பாஜக-வின் மக்கள் விரோத கொடுஞ்செயல்களை ஒவ்வொரு பிரிவினரும் தனித்தனியானதாக கருதிக் கொண்டு ஒதுங்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்! இதே நிலை நாளை தமக்கு வரும் என்று கருதுவதில்லை! எனவே வரும்முன் காப்போம் என்ற அடிப்படையில் மக்கள் உண்மை நிலையைப் புரிந்து கொண்டு மோகன் பகவத் மோடி தலைமையிலான பாசிச கொலைகார கூட்டத்திற்கு சமாதி கட்டவில்லை எனில் இந்திய நாட்டு மக்கள் பெருந்துயரில் தள்ளப்படுவார்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும். அதனைத் தூண்டும் ஒரு பகுதி தான் தோழர் குமரன் அவர்களின் இக்கட்டுரை. இன்னும் சில விவரங்களுடன் கட்டுரையை சற்றே விரிவுபடுத்தி இருக்கலாம். தோழருக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here