குதூப்மினாரை ‘விஷ்ணு ஸ்தம்பம்’ என பெயர்
மாற்றக்கோரி சங்கபரிவாரங்கள் போராட்டம்


 யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலத்தின் வளாகத்தில் ஹனுமன் சாலிசாவை ஓதுமாறு சங்பரிவார் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

டில்லிக்கு அருகேயுள்ள  குதூப்மினாரை அதன் பெயரை விஷ்ணு ஸ்தம்பம் என மாற்றக்கோரி சங்பரிவார் அமைப்பில் ஒன்றான ‘மஹாகல் மானவ் சேனா’ மே10 ஆம் தேதி போராட்டம் நடத்தியுள்ளது.

குதுப்மினார்க்கு வெளியே அனுமன் சாலிசா கோஷமிட்டுக் கொண்டிருந்த வலதுசாரி அமைப்புகளான ஐக்கிய இந்து முன்னணி (UHF) மற்றும் ராஷ்டிரவாதி சிவசேனாவைச் சேர்ந்த 44 உறுப்பினர்களை தில்லி காவல் துறையினர் மே 10 செவ்வாய்க் கிழமை தடுத்து நிறுத்தினர். பல நூற்றாண்டுகள் பழமையான மினாராவுக்கு ‘விஷ்ணு ஸ்தம்பம்’ எனப் பெயர் மாற்றக் கோரினர். ‘

போராட்டம் நடந்த இடத்தில் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷங்களும் கேட்டதாக கூறப்படுகிறது.

இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த ஐக்கிய இந்து முன்னணி(UHF) தலைவர் ஜெய் பகவான் கோயல், டெல்லி ஷாஹதாரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மஹாகல் மானவ் சேனா அமைப்பினர் போராட்டம்

 

ஜெய்பகவான் கோயல் கூறுகையில் “10 லிருந்து 15 காவலர்கள் வீட்டுக்கு வெளியே இருக்கிறார்கள். என்னை வெளியே செல்ல விடாமல் தடுக்கிறார்கள்.” என்றார். முதலில் குதூப்மினார் என்று சொல்வதை நிறுத்துங்கள். குதூப்-ஐ-உத்-தின்-ஐபெக் இந்தியா வந்த போது, அவர் இந்து மற்றும் ஜெயின் கோவில்களை இடித்து குதூப்மினார் என அழைக்கத் தொடங்கினார்.

இந்த மினாரட் “பெரிய ராஜா விக்ரமாதித்யாவால்” கட்டப்பட்டது என்று வரலாற்று ரீதியாக சரிபார்க்கப்படாத அறிக்கையை வெளியிட்டார் இது குதூப்மினார் அல்ல, விஷ்ணு ஸ்தம்பம், அதன் பெயரை உடனடியாக மாற்ற வேண்டும் என்றார்.

சங்பரிவார் கும்பலின் கோரிக்கை, நினைவு சின்னம் பற்றிய டெல்லி சுற்றுலா துறையின் விளக்கத்திற்கு மாறாக உள்ளது. 1193ஆம் ஆண்டு குதூப்-உத்-தின் –ஐபெக்கால் கடைசி இந்து சாம்ராஜ்யத்தை எதிர்த்து வெற்றி பெற்ற பின்னர் அதன் நினைவாக கட்டப்பட்டதே குதூப்மினார்.

#QUTUBMINAR

இந்திய மக்களே சங்பரிவார கும்பலிடம் கவனமாக இருங்கள். மோடி கும்பலின் மக்கள் விரோத நடவடிக்கைகளில் நம்மை திசை திருப்பவே புதிய புதிய பிரச்சனையை உருவாக்குகிறார்கள். குதூப்மினாரோ, தாஜ்மகாலோ நமக்கு பிரச்சனைகளல்ல. அன்றாடம் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், கேஸ் விலையும் நாட்டை கார்ப்பரேட்டுகளிடம் அடகு வைக்கும் பாசிச மோடி கும்பலே நமது பிரச்சினை.

செய்தி மூலம்: Thequint.in

மாரிமுத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here