உலகச்செய்தி : போர்க் குறிப்புக்கள்: தேசவெறி பலிக்காது !
உக்ரைன், மே 9, 2022.

இரண்டாம் உலகப்போரில் ( WW 2 )நாஜிகள் சரணடைந்த நாள் மே 9. 2 கோடி வீரம் செறிந்த சோவியத் ரசியமக்கள் தியாகம் செய்து வென்ற போர்க் காலகட்டம். ஒவ்வோராண்டும் வெற்றிநாளாகக் கொண்டாடப்படும் இந்நாள் இவ்வாண்டு அதே அளவு இருக்குமா ?

உலகமுழுதும் கூர்ந்து கவனிக்கிறது. உக்ரைனின் ஒரு பிராந்தியமான மரியுபோல் லட்சம் மக்கள் ( பெண்கள், குழந்தைகள் ) வெளியேறிய பிறகு தற்காலிகமாகத் தாக்குப்பிடிக்கிறது. பணியவைத்து தன்னோடு சேர்த்துக்கொண்டு விட ரசியப்படைகள் தாக்கிக்கொண்டே இருக்கின்றன.

மரியுபோலிலிருந்து வெளியேற்றப்பட்ட சிறு பெண் — முகத்தில் உலர்ந்த கண்ணீர்த்தடம், இறுக்கம்.

அமெரிக்காவின் ஆட்டத்தை இங்கே பதிலியாக ஆடும் ஐரோப்பிய நாடுகள் ராணுவ உதவிகளைச் செய்கின்றன. அமெரிக்க உதவி ஆள் பிரிட்டன் தன் போர்ப்பங்காக இனி இருமடங்கு ராணுவ உதவி என்று அறிவித்துவிட்டது. எரிசக்தி தருவித்தலை ரசியாவிடமிருந்து நிறுத்திக் கொள்ளப் போவதாக ஜப்பான் அறிவித்துள்ளது. ஆனாலும் இன்னமும் கூட ‘தலையாட்டி’ –ஐ.நா போர் பற்றிக் கூறும்போது ‘ போர் ‘,
‘ தாக்குதல் ‘ ,  ‘ ஆக்கிரமிப்பு ‘ போன்ற சொற்களைத் தவிர்த்துவிட்டு, ‘ பிரச்சினைக்குரிய பகுதி ‘ என்றுதான் பேசுகிறது.

ரசியாவின் திட்டம் வேறு. ஏற்கெனவே தனக்கு ஆதரவான உக்ரைன்–கலகப்பகுதிகளை கிரீமியாவுடன் இணைக்கும் தரைப்பாலமாக மாற்றிவிடுவதற்கான மும்முரத்தில் இருக்கிறது. இது வருங்கால ராணுவதிட்டத்தின் சேமிப்புக்கான சிறு வெற்றியே.

எவ்வளவு காலம் போர் நீடிக்கும்? உக்ரைனில் கிடைத்தது லாபம் என்று ராணுவ வலுமிக்க ரசியா கணக்கு வைக்கவும், போரில் ரகசியமாக நுழைந்துள்ள ஐரோப்பிய நாடுகள் ( அமெரிக்க சார்பு ) தொடர்ச்சியாகத் தளம் அமைத்துவிட்டதை ( போர்ச் செயல்தந்திரத்தை ) இறுதியாக்கவுமாக ரசிய-உக்ரைன் போர் இன்று தேய்ந்து இத்துப் போகிற நிலையை நெருங்குகிறது.

” ராணுவ வெற்றிமட்டுமல்ல, அரசியல் வெற்றியும் முக்கியம். ரசியா அரசியல் வெற்றி அடையவில்லை ” என்கிறார்கள் உலக அரசியல் ஆய்வாளர்கள். ரசியா அரசியல் வெற்றி அடையாது ; தேசவெறி தூண்டும் நாளாக மே 9-ஐப் பெரிய அளவில் பயன்படுத்திவிடவும் முடியாது. போர்வெறி ( ஏகாதிபத்தியம் ) வெல்லமுடியாது.

  • இராசவேல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here