2024 தேர்தலை ஒட்டி ஏழு கட்டங்களில் நாடு முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற்றது. கடைசி கட்ட வாக்குப்பதிவு கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முடிவடைந்தது. அன்று மாலை 6 மணி முதல் இந்தியாவில் உள்ள மைய நீரோட்ட ஊடகங்கள், குறிப்பாக பாசிச மோடியின் எடுபுடிகளாகவும், ஏவல் நாய்களாகவும் குரைத்துக் கொண்டுள்ள கோடி மீடியாக்கள் கருத்துக் கணிப்பு என்ற பெயரில் தேர்தல் கட்சிகளின் வெற்றி பற்றி சில புள்ளி விவரங்களை வெளியிட்டது.
குறிப்பாக பாசிச பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 370 முதல் 400 இடங்களை பெறும் என்றும், இந்தியா கூட்டணி கட்சிகள் 125 முதல் 150 இடங்களை மட்டுமே பெறும் என்றும் தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு (exit Poll) என்ற முறையில் ஆர்எஸ்எஸ் மோடி- அமித்ஷா கும்பல் தயாரித்து கொடுத்த புள்ளி விவரங்களை கருத்துக் கணிப்பு என்ற பெயரில் அப்படியே ஊடகங்களுக்கு அனுப்பியது.
தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவங்குகின்ற ஜூன் நான்காம் தேதிக்கு, ஒரு நாள் முன்னதாக ஜூன் மூன்றாம் தேதியன்று அமித்ஷா 310 இடங்களில் வெற்றி உறுதியாகிவிட்டது. எனவே வாக்குகளை எண்ணினாலும் சரி; எண்ணாவிட்டாலும் சரி பாஜகவின் தலைமையிலான கூட்டணி தான் ஆட்சி அமைக்கப் போகிறது என்று உச்சகட்ட அகம்பாவத்தில் கொக்கரித்தார்.
வட இந்தியாவில் இருந்து வெளி வருகின்ற DB என்ற ஊடகத்தை தவிர அனைத்து கார்ப்பரேட் ஊடகங்களிலும் பாசிச மோடி கும்பல் வரலாறு காணாத வெற்றி பெறும் என்றும், மூன்றாவது முறை ஆட்சி அமைக்கும் என்றும் ஊளையிட்டு வந்தனர்.
மோடியை ஆதரித்து வந்த ஊடகங்கள் அனைத்தும் பார்ப்பன மேல்சாதி மனோபாவத்திலும், கார்ப்பரேட்டுகளின் எச்சில் காசில் பொறுக்கி திண்கின்ற அடியாள் கூட்டமாகவும், அதற்கும் மேலே இந்தியாவின் செல்வ வளங்களை சூறையாடி கொழுத்து திரிகின்ற அதானி, அம்பானி உள்ளிட்ட தேசங்கடந்த தரகு முதலாளிகளின் குடும்பத்திலிருந்து வெளிவரக்கூடிய மோடி சொம்பு மீடியாக்களாகவும் மாறி சீரழிந்துள்ளது.
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கப்படுகின்ற பத்திரிகைகள் பெரும்பாலும் கோடீஸ்வரர்கள் கையிலும், கார்ப்பரேட் முதலாளிகளின் கையிலும் இருப்பதால் எப்போதுமே ஒரு பக்க சார்பாகவே செயல்படுவார்கள் என்பது பல சந்தர்ப்பங்களில் நிரூபணமாகியுள்ளது.
பேப்பரில் மையை தடவி கருத்துக்களை எழுதி வெளியில் விட்டால், மக்கள் அதை நம்பி ஏமாந்து விடுவார்கள் என்று அந்த காலத்தில் கூறுவார்கள். இன்றோ நவீன விஞ்ஞானம் வளர்ந்துள்ள சூழலில் டிஜிட்டல் மீடியா என்ற முறையில் கருத்துக்களை உருவாக்குவதிலும், பரப்புவதிலும் மோடி ஆதரவு கோடி மீடியாக்கள் முன்னிலை வகித்தன.
கோடி மீடியாக்கள் யார்? யார்?
ஜீ நியூஸ், டைம்ஸ் நவ், என்டிடிவி, ரிபப்ளிக், பாரத் டிவி, ஆஜ் தக், ஏபிபி நியூஸ், சுதர்சன் நியூஸ், சிஎன்என்-நியூஸ்18, இந்தியா டிவி, ஓபிண்டியா, டிவி டுடே நெட்வொர்க், இந்தியா டுடே, டைனிக் ஜாக்ரன், பஸ்ர்ட் போஸ்ட் மற்றும் பல ஊடக நிறுவனங்களைதான் கோடி மீடியா என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஊடக நிறுவனங்களை சார்ந்து பல பத்திரிகைகளும் கோடி மீடியாவாக செயல்பட்டு வருகிறது. இந்த ஊடகங்களுக்கு உள்ளூர் முதல் தேசிய அளவில் வரை பிராந்திய மொழிகள் மற்றும் ஆங்கில செய்தி தொலைக்காட்சிகள், அச்சு ஊடகங்கள் உள்ளன.
படிக்க:
♦ பீதியில் மோடி! முட்டுக்கொடுக்கும் மீடியாக்கள்!
♦ இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை பரப்பும் மீடியாக்கள்!
இன்று காலையிலிருந்து வெளியாகி வரும் வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் அவர்களின் கணிப்புகள் அனைத்திலும் முகத்தில் கரியை பூசி செருப்படி கொடுத்துள்ளது.
இந்த கணிப்புகளுக்கு மாறாக மாலை 6 மணி நேர தரவுகளின்படி இந்தியா கூட்டணி சுமார் 232 இடங்களிலும், பாசிச பாஜக கூட்டணி சுமார் 294 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. இதிலும் DB சேனல் மாறுபடுகிறது. இந்தியா கூட்டணி சுமார் 252 இடங்களிலும், பாசிச பாஜக கூட்டணி சுமார் 269 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கிறது.
எனினும் இந்த தோல்வியை ’கோடி மீடியா ஊடக மாமாக்கள்’ ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் ’கோடி மீடியாக்கள்’ அனைவரையும் புறக்கணிப்பதும், பத்திரிகை, ஊடகம் என்ற பெயரில் ஜனநாயக விழுமியங்களுக்கு கட்டுப்பட்டு ஒரு பக்க சார்பின்றி செய்திகளை வெளியிட வேண்டும், இல்லையேல் அதற்கு தக்க பதிலடி கொடுப்போம்!’ என்ற எச்சரிக்கையை இந்திய மக்கள் இத்தகைய ஊடக மாமாக்களுக்கு தர வேண்டும்.
திமுகவை தொடர்ந்து விமர்சித்து வந்த சவுக்கு சங்கர் போன்ற அரசியல் புரோக்கர்கள் முதல் ஹை டெக் தரவுகளை கையில் வைத்துக் கொண்டு ஆட்டம் போட்ட பிரசாந்த் கிஷோர் போன்ற தரகர்களின் கருத்துக்களையும் புறக்கணிக்க இந்திய பாட்டாளி வர்க்கம் தயாராக வேண்டும் என்று அறைகூவல் விடுக்கின்றோம்.
- மாசாணம்.