லவரங்களின் மூலம் கட்சியை கட்ட திட்டமிட்டு செயல்பட்டு வரும் ஆர் எஸ் எஸ் பாஜக தமிழகத்தில் காலூன்றுவதற்கு பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது. ஒன்றிய, வட்ட, மாவட்ட பொறுப்புகளில் கிரிமினல்கள், ரவுடிகள், பொறுக்கிகளை பதவியில் அமர்த்துவது, யாராக இருந்தாலும் சேர்த்துக் கொள்வோம் வந்த பிறகு சரி செய்வோம் என்று பித்தலாட்டம் புரிவது, சாதி, மத, இனவெறியர்களை கட்சிக்குள் இணைத்துக் கொள்வது அல்லது கூட்டணிக்குள் இணைத்துக் கொள்வது போன்ற பஞ்சமா பாதகங்கள் அனைத்தையும் செய்து ஆட்சியை கைப்பற்றுவது ஒன்றையே குறியாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது ஆர் எஸ் எஸ் பாஜக

கர்நாடக மாநிலத்தில் ஏற்கனவே ஆட்சி செய்து கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சி 2023 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு திருவாளர் அண்ணாமலையை தேர்தல் பொறுப்பாளராக நியமித்தது. இதன் மூலம் தமிழகத்தில் செயல்படுவதற்கு உரிய பயிற்சி களமாக கர்நாடகத்தை பயன்படுத்த எண்ணியது ஆர் எஸ் எஸ்

அண்ணாமலை பாஜகவிற்கு கிடைத்த வயாகராவா! அரோகராவா?

“ கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக இணை பொறுப்பாளராக அண்ணாமலைக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய கடலோர கர்நாடகா, வட கர்நாடகா, சிக்மகளூர், பெங்களூரு மற்றும் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் கோலார் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் உள்ள 86 தொகுதிகள் இவரது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டன.

தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் வேட்பாளர்களை தேர்வு செய்தல், பிரச்சார வியூகம் என எல்லாவற்றிலும் முக்கிய பங்காற்றினார் அண்ணாமலை. ஆனால், இத்தனை முழுமூச்சுடன் பணியாற்றியும் அண்ணாமலையால் கர்நாடகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு சாதிக்கமுடியவில்லை.” என்று தமிழ் இந்து குழுமத்திலிருந்து வெளியாகின்ற காமதேனு இதழில் அண்ணாமலையின் கர்நாடக தேர்தல் பணிகளைப் பற்றி எழுதி இருந்தது.

அண்ணாமலையின் வழிகாட்டுதலின் கீழ் கர்நாடகத்தில் படுதோல்வியடைந்த ஆர் எஸ் எஸ்- பாஜக வின் திட்டங்களை பற்றி, “கர்நாடகாவில் பிரச்சாரத்தின் மூலம் தனது திறமையை நிரூபிப்பதற்காக அண்ணாமலைக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. கர்நாடகாவில் உள்ள 10 மாவட்டங்களில் 86 தொகுதிகள் அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது.

இவை அனைத்தும் தமிழர்கள் அதிகம் உள்ள தொகுதிகள் ஆகும். குறிப்பாக, உடுப்பி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் 5 வெற்றியும், தாவணகெரேவில் உள்ள 7 தொகுதிகளில் 1, ஷிவமொகாவில் உள்ள 7 தொகுதிகளில் 3, ஹாசனில் உள்ள 7 தொகுதிகளில் 2, தட்சிண கன்னடாவில் உள்ள 8 தொகுதிகளில் 6, உத்தர கன்னடாவில் உள்ள 6 தொகுதிகளில் 1 மற்றும் பெங்களூரில் உள்ள 28 தொகுதிகளில் 15இல் வெற்றி அடைந்துள்ளது.

அதேநேரத்தில், சிக்மகளூருவில் உள்ள 5 தொகுதிகள், கோலாரில் உள்ள 6 தொகுதிகள், மாண்டியாவில் 7 தொகுதிகள் ஆகியவற்றில் ஒரு தொகுதியைக் கூட பாஜக கைப்பற்றவில்லை. இவ்வாறு அண்ணாமலைக்கு வழங்கப்பட்ட 86 தொகுதிகளில் 33 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளதால், அண்ணாமலையின் தலைமைத்துவம் கேள்விக்குள்ளாக்கி உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.” என்றும் அண்ணாமலையின் அரசியல் தலைமை தகுதி குறித்தும் ஈ டிவி ஊடகம் எழுதியிருந்தது.

இதையும் படியுங்கள்: கர்நாடகா: தேர்தல் அரசியலில் வீழ்த்தியது மட்டுமின்றி நிரந்தரமாக ஆர்எஸ்எஸ்-பாஜகவுக்கு முடிவு கட்டுவோம்!

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பரப்புரைகளில் தான் மட்டுமின்றி மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானுடன் இணைந்து தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பல்வேறு பிரச்சார வழிமுறைகளை மேற்கொண்டார் திருவாளர் அண்ணாமலை. இந்திய ஒன்றிய அரசை ஆளும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரையும் வரவழைத்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டார். இது எவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டது என்பதை பற்றியும் காமதேனு இதழில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.

பெங்களூரு ரோடு ஷோ!

“ அண்ணாமலையின் பொறுப்பில் இருந்த தொகுதிகளில் பாஜக முக்கிய தலைவர்களுடன், பிரதமர் மோடியும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். பெங்களூரு மாநகர பகுதியில் மட்டும் 2 நாட்கள், 36 மணி நேர ரோடு ஷோ நடத்தினார் பிரதமர் மோடி. இத்தனை நடந்தும் அண்ணாமலை பொறுப்பேற்ற 86 தொகுதிகளில் 39 தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்றது. பெங்களூரு மாநகர் பகுதிகளில் உள்ள 28 தொகுதிகளில் 16 தொகுதிகளை மட்டுமே பாஜக கைபற்றியது.” இவ்வளவு ஏற்பாடுகளுக்குப் பிறகும் இதுதான் திருவாளர் அண்ணாமலை கர்நாடகா பொறுப்பாளராக இருந்து சாதித்த சாதனை. இதுதான்.

தேர்தல் அரசியல் கட்சிகள் தனக்கு கூட்டம் கூடுவதை கண்டு தானே வியப்படைவதும், அதனை தனது கைக்கூலி ஊடகங்களில் ஒளிபரப்பி பிரம்மாண்டமான கூட்டம் கூடியதாக பம்மாத்து காட்டுவதும் பலமுறை கண்டு நிராகரிக்கப்பட்ட அம்சங்கள் தான். திருவாளர் அண்ணாமலை தன் மீது பதியப்பட்ட வழக்கு ஒன்றின் மீது ஆஜராவதற்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு வருகை தந்த போது கூலிக்கு கூட்டிவரப்பட்ட பலரும் குவிந்ததை பரபரப்பாக எழுதி தனது எஜமான விசுவாசத்தை காட்டியது தினமலர் உள்ளிட்ட பார்ப்பன நாளேடுகள்.

சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் கேரக்டர் ரோல் செய்வதற்காக தனது காமெடியன் பாணி முகத்தை சீரியஸ் ஆக வைத்துக் கொண்டு படம் முழுக்க நடித்த வடிவேலு போல, எப்போதும் தனது முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு காமெடியாக நடித்துக் கொண்டுள்ளார் அரசியல் நடிகரான அண்ணாமலை.

ஊழல் பெருச்சாளிகளின்
ஊழல் ஒழிப்பு நாடகம்!

கார்ப்பரேட்டுகளிடம் பல ஆயிரம் கோடிகளை லஞ்சமாக பெற்று நாட்டையே விற்றுக் கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் தனது எதிர்க்கட்சியினரை ஒழித்துக் கட்டுவதற்கு ஊழல் ஒழிப்பு என்ற ஆயுதத்தை கையில் ஏந்தி வலம் வருவது குரூரமான நகைச்சுவையாகும். தற்போது ராமேஸ்வரத்தில் நடை பயணத்தை துவங்கியுள்ள அண்ணாமலை இந்த நடை பயணத்திற்கு மக்களிடம் வசூலித்து செலவு செய்யவில்லை.

மாறாக தமிழகத்தில் உள்ள கல்வி முதலாளிகள் முதல் நகைக்கடை, துணிக்கடை முதலாளிகள் மற்றும் ஸ்ரீதர் வேம்பு போன்ற தொழிலதிபர்கள் மத்தியில் இருந்து பெற்ற தொகையைக் கொண்டும், ஆருத்ரா நிதி நிறுவன மோசடி போன்ற வழிமுறைகளில் கிடைத்த பணத்தைக் கொண்டும் தண்ணீராக செலவு செய்து தலைக்கு இவ்வளவு என்று ஆளுக்கு கூலி கொடுத்து அழைத்து வரைபட்ட கூட்டத்தினர் மத்தியில் இருந்து ஊழல் ஒழிப்பு பேசுவது சகிக்க முடியாத  அம்சமாகும்.

அரசியல் கட்சிகள் தனது கொள்கைகளை பரப்புவதற்காக பாதயாத்திரை செல்வது, நடைப்பயணம் மேற்கொள்வது போன்ற வழிமுறைகளை கையாள்வது ஒன்றும் வியப்பில்லை ஆனால் தமிழகத்தில் காலூன்றுவதற்கு எந்த கேடுகெட்ட நடவடிக்கைகளையும் செய்வதற்கு தயாராக உள்ள ஆர் எஸ் எஸ் பாஜக கும்பல் பாதயாத்திரை செல்வது தான் கவனிக்கத்தக்கதாகும்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஆட்சி செய்து வரும் பாரதிதா கட்சி அமைதியாக ஒற்றுமையுடன் வாழ்ந்த இரண்டு இனக் குழுக்கள் மத்தியில் மத வெறியை தூண்டி விட்டு பல ஆயிரம் மக்களை அகதிகளாக மாற்றி உள்ளனர். குறிப்பாக குக்கி சமூகத்தினர் மணிப்பூரிலிருந்தும் மெய்த்தி சமூகத்தினர் நாகாலாந்து, மீசோரத்தில் இருந்தும் அகதிகளாக வெளியேறி உயிர் பயத்துடன் வாழ்வதற்கு ஆர் எஸ் எஸ் பாஜக தான் முக்கிய காரணம்.

தந்தை பெரியார் உள்ளிட்டு திராவிட இயக்கங்கள் உருவாக்கிய சமூக நீதி மற்றும் இடதுசாரி இயக்கங்கள் உருவாக்கியுள்ள மக்கள் ஒற்றுமை ஆகியவற்றை முறியடிப்பதற்கு தமிழகத்தை குறிவைத்து கிளம்பியுள்ளது ஆர்எஸ்எஸ் பாஜக இதன் ஒரு அறிவிப்பு தான் ராமேஸ்வரம் பாதயாத்திரை.

தமிழா நீ இந்துவா தமிழை நீச பாஷை என்றும், தமிழர்களை நீசர்கள் என்றும் இழிவு படுத்தும் பார்ப்பன இந்து மதத்தில் உனக்கென்ன வேலை என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் எழுப்புவோம். ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் தமிழகத்தில் தனது பாதயாத்திரை மூலம் கலவரத்தை உருவாக்க நினைக்கின்ற ஆர் எஸ் எஸ் பாஜக கும்பலின் சதித்திட்டங்களை முறியடிப்போம்.

‘ஊழல் ஒழிப்பு’ என்ற நாடகத்தை முன்னிறுத்தி சண்டமாருதம் செய்து வரும் ஆர்எஸ்எஸ் பாஜகவின் கார்ப்பரேட் ஊழல்கள், கிரிமினல் குற்றச் செயல்கள், படுகொலைகள், கலவரங்கள் அனைத்தையும் அம்பலப்படுத்தி மக்களிடமிருந்து விரட்டியடிப்போம்.

  • மருது பாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here