மைசூர் பாக்-ல் ‘பாக்’ என்ற பெயரை நீக்கி விட்டு ‘ஸ்ரீ’ என பெயரிட்டு ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள இனிப்பகம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்ததால் இந்தியா முழுவதும் பேசுபொருளானது. பாகிஸ்தானை சுருக்கமாக ‘பாக்’ என குறிப்பிடுவதால் இந்த செயலை செய்துள்ளது அந்த இனிப்பகம்.
தமிழ்நாட்டில் இதனை நய்யாண்டி செய்யும் விதமாக பாக் எனும் வார்த்தைகளுக்கு பதிலாக ஸ்ரீ என பெயரிட்டு சமூக வலைதளங்களில் அரட்டையடித்தார்கள். ஆனால் இதில் பாஜக ஆர்.எஸ்.எஸ் கும்பலின் தேசிய வெறி அடங்கியுள்ளதை கவனிக்க தவறிவிட்டார்கள் இது சங்கிகளின் முட்டாள்தனமான நடவடிக்கை என கடந்து விட முடியாது.
பாசிச ஆட்சிக்கு வந்த பின் கடந்த 11 ஆண்டுகளில் இதுவரை சில மாநிலங்களின் பெயரையும் தலைநகரின் பெயரையும், பல ஊரின் பெயரையும் ஏன் தெருக்களின் பெயரையும் கூட மாற்றியுள்ளது. இதற்கெல்லாம் ஒரே காரணம். அதில் முகலாயர்களின் அடையாளங்கள் நிறைந்துள்ளது தான்.
இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகமான போது ஹைதராபாத் நகரில் உள்ள பிரபல பேக்கரியான ‘கராச்சி பேக்கரி’ என்ற பெயர் காரணமாக அடித்து நொறுக்கப்பட்டது நினைவிலிருக்கலாம். இதுவும் தேசிய வெறியின் ஒரு அங்கம் தான். ஆனால் அந்த 1953 தொடங்கப்பட்ட இந்திய நிறுவனம் கடையை நடத்தியர் ஒரு இந்து. ஆனால் அவர்களுக்கு அதெல்லாம் முக்கியமில்லை. மக்களிடம் தேசிய வெறியை உருவாக்க வேண்டும். அதன் மூலம் மற்ற மாநிலங்களிலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான மோதலை உருவாக்க வேண்டும்.
மைசூர் பாக் பெயரை குறிப்பிட்ட இனிப்பகம் மட்டும் தானே மாற்றியது அதனால் என்ன பிரச்சினை என நீங்கள் நினைக்கலாம். அந்த சாதரண விசயம் இந்தியா முழுவதும் எப்படி பரவியது அனைத்து செய்தி சேனல்களிலும் எப்படி ஒளிப்பரப்ப்ப் பட்டது. இதனை டி.ஆர்.பி ரேட்டிங்க்குக்காக செய்திருந்தாலும் கூட மக்கள் மத்தியில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படித்திருக்கும்.
படிக்க:
🔰 பஹல்காம் தாக்குதலும், ஆர்எஸ்எஸ் பாஜகவால் தூண்டப்படும் தேசிய வெறி இஸ்லாமிய எதிர்ப்பு வெறியும்!
🔰 “ஜெய் ஸ்ரீராம்” தேசிய அவமானம்! “ஜெய் ஆசாதி” தேசிய முழக்கமாகட்டும்!
2020 ஆம் ஆண்டில் கல்வானில் இந்திய வீர்ர்களுக்கும் சீன வீர்ர்களுக்கும் ஏற்பட்ட மோதலின் போது சீனப் பொருட்களை பயன்படுத்தாதீர் என்று சங்கிகள் தேசிய வெறியூட்டும் விதமாக விளம்பரப்படுத்தினார்கள். இந்திய பிரதமர் மோடி சீன ஆப்களை தடை செய்து தனது ‘வீரத்தை’ நிரூபித்தார் அதன் பிறகு சீன பொருட்கள் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டோமா? இன்று வரை இந்தியா முழுவதும் சீனப் பொருட்கள் விரவிக் கிடக்கின்றன. சீனப் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்றால் ஒன்றிய அரசே சீன பொருட்கள் இறக்குமதியை தடுத்திருக்கலாமே! அவ்வாறு ஏன் செய்யவில்லை? அவர்களை பொறுத்தவரை இந்திய மக்களிடம் தேசிய வெறியை உருவாக்கி மக்களிடம் உள்ள அரசின் மீதான கோபத்தை மடைமாற்ற வேண்டும் அவ்வளவு தான்.
அதே விதத்தில் தான் மைசூர் பாக் பெயர் மாற்ற விசயத்தையும் அணுக வேண்டும். இந்த பிரச்சினை தேசிய வெறியை உயிர்ப்புடன் வைத்திருக்க சங் பரிவார் கும்பலுக்கு உதவும்.
இந்த செய்தியை தமிழ்நாடு பத்திரிகைகளும் இணைய தளங்களும் எவ்வாறு வெளியிட்டுள்ளன என்று பாருங்கள். தேசபக்தி உணர்வை வெளிப்படுத்தும் விதமாக மைசூர் பாக் -லிருந்து பாக் பெயர் நீக்கம் என்று தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது. தினகரனே இப்படியென்றால் பல பத்திரிகைகள் தேசப்பற்று எனப் புகழ்ந்துள்ளது. அப்படி பார்த்தால் அலகாபாத் என்ற பெயரை ப்ரயாக்ராஜ் என உத்திரபிரதேச முதல்வர் சாமியார் யோகி ஆதித்தியநாத் மாற்றியதும் தேசப்பற்றுக்குள் தான் அடங்குமா என்பதை தினகரன் உள்ளிட்ட பத்திரிகைகள் விளக்க வேண்டும்.
ஆப்ரேசன் சிந்தூரை வைத்து அரசியல் செய்து வரும் பாஜகவின் செயலுக்கு இந்தியா கூட்டணியினரும் பலியானது குறித்து நமது தளத்தில் ஏற்கனவே எழுதியிருந்தோம் ஆர்.எஸ்.எஸ் – பாஜகவால் பரப்பப்படும் ஒவ்வொரு செய்திகளிலும் அவர்களின் தேசியவெறியும் இந்துத்துவா நலனும் அடங்கியுள்ளது. முற்போக்கு பேசும் தமிழ்நாடும் அவர்களின் தேசிய வெறிக்கு பலியாகிவிடக்கூடாது.
- சுவாதி







சுருக்கமான கட்டுரையாக இருப்பினும் அவசியமான கட்டுரை. ஆர் எஸ் எஸ் பாஜக இந்துத்துவ சங்பரிவார் பாசிசக் கூட்டம்
பல்வேறு வழிகளிலும் தேசபக்த வெறியையும், வெறுப்பு அரசியலையும் அங்கிங்னாதபடி தொடர்ந்து பரப்பிக் கொண்டே இருக்கின்றன. அதில் இந்தியா கூட்டணியும், அதில் அங்கம் வகிக்கும்
திமுக அரசுமே கரைந்து கொண்டிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. பொத்தாம் பொதுவாக பாஜகவை எதிர்க்கிறோம் என்று கூட்டணி அமைத்தால் போதாது. ஆபரேஷன் சிந்தூர் குறித்து மோடியும் அவரது காவி கூட்டமும் புளகாங்கிதம் அடைவதும், அதனை மாபெரும் சாதனையாக வெற்று டம்பம் அடிப்பதும் அவர்களது வழக்கமான தொழில் என்று ஒதுக்கி விடலாம். ஆனால் இந்த ‘மாபெரும் சாதனை’யை உலகெங்கிலும் பரப்ப நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஏழு குழுக்களில் இந்தியாக் கூட்டணி உட்பட திமுகவின் கனிமொழியும் பெருமையுடன் உலகு சுற்றுவது ஆபாசமாகப் படுகிறது. இவ்வித பிரச்சனைகளை பல்வேறு சரியான கண்ணோட்டங்களில் அணுக வேண்டும் என்பது பிரதானம். அது குறித்தும் சில வரிகள் இணைத்து எழுதி இருக்கலாம். சிற்சில தவறுகள் தென்பட்டன.
சரிப் படுத்துக. வாழ்த்துக்கள்!