ஏகாதிபத்திய முதலாளித்துவம் மனித குலத்திற்கு வழங்கியுள்ள பல்வேறு கேடுகளில் நவீன காலத்தில் முதன்மையாக நிற்கின்றது தொற்று நோய்கள் மற்றும் மன நோய்கள்.
மனநோய் என்பது உலகெங்கிலும் மிகப் பெரும் கொடூரமான, கொடுமையான நோயாக பரவிக் கொண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக பிரிட்டனில் நான்கு பேரில் ஒருவர் மன நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் சுமார் 80 கோடி பேர் மன நோய்க்கு ஆளாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிக்கை வெளியிட்டுள்ளது.
“காலையிலிருந்து வேலையே சரியா செய்ய முடியல! ஒரே டென்ஷனா இருக்கு” என்ற அங்கலாய்ப்பு துவங்கி, “என்னுடன் இருப்பவர்கள் எனக்கு எதிராக சதி செய்கிறார்கள், துரோகம் இழைக்கிறார்கள்” என்று உச்சகட்டத்தில் கதறுவது வரை அனைத்தும் மன நோயின் வகைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மனநோய் என்பது ஒரு நபரின் மனம், உணர்ச்சிகள் அல்லது நடத்தையை (அல்லது மூன்றையும்) மாற்றுவது ஒரு வகை சுகாதார நிலையாகும், மேலும் இது ஒரு நபரின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.1,2. மனச்சோர்வு, ஸ்கிசோஃப்ரினியா, கவனம்-பற்றாக்குறை ஹைபராக்டிவிட்டி கோளாறு (ADHD), மற்றும் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு (ASD) போன்ற மனநலப் பிரச்சினைகள் இன்று மிகவும் பரவலாக உள்ளன
மருத்துவ உளவியலாளரான ஜே வாட்ஸ், கார்டியன் இதழில், ‘ உளவியல் மற்றும் சமூக காரணிகள் குறைந்தபட்சம் குறிப்பிடத்தக்கவை மற்றும் பலருக்கு, துன்பத்திற்கான முக்கிய காரணம். வறுமை, உறவினர் சமத்துவமின்மை, இனவெறி, பாலின வேறுபாடு, இடப்பெயர்ச்சி மற்றும் ஒரு போட்டி கலாச்சாரம் ஆகியவை மன துன்பத்தின் வாய்ப்பை அதிகரிக்கின்றன.
சமத்துவமின்மை மனநோய்க்கான முக்கிய நிர்ணயமான காரணியாகும்: சமத்துவமின்மையின் அளவு அதிகமாக இருந்தால், மோசமான ஆரோக்கிய விளைவுகள். பணக்கார குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளைக் காட்டிலும், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மனநலம் பாதிக்கப்படும் ஆபத்து மூன்று மடங்கு அதிகம். மனநோய் என்பது பற்றாக்குறை, குறைந்த வருமானம், வேலையின்மை, மோசமான கல்வி, மோசமான உடல் ஆரோக்கியம் மற்றும் அதிகரித்த சுகாதார-ஆபத்து நடத்தை ஆகியவற்றுடன் தொடர்ந்து தொடர்புடையது.
எடுத்துக்காட்டாக, பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வியன்னாவில் மனோதத்துவ நிபுணர் சிக்மண்ட் ஃப்ராய்ட் சந்தித்த உளவியல் நிலப்பரப்பின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று நரம்பியல்-இவை கோவெல் குறிப்பிடுவது போல், நவீனத்தில் ‘சாதாரண’ வளர்ச்சியுடன் முற்றிலும் தொடர்வதை ஃப்ராய்ட் கண்டார். சமூகங்கள்-இவற்றில் பலவற்றுடன், அந்நியமாதல் பற்றிய நமது நவீன அனுபவத்தில் வேரூன்றி இருப்பதாக அவர் மேலும் கூறுகிறார்.
மனநோய் என்றால் சட்டையைப் பிய்த்துக் கொண்டு தெருவில் ஓடுவார்கள் என்று பொதுவாக கருதப்படுகிறது ஆனால். நவீன காலகட்டத்தில் அப்படி நடப்பது இல்லை. ஏனென்றால் மனநோக்கான காரணம் அவர்களின் உற்பத்தி சார்ந்த சிக்கல்கள், அவர்களின் உற்பத்தி முறைகளுடன் தொடர்புடையதாகவே அமைந்துள்ளது.
கூட்டுத்துவ உழைப்பில் ஈடுபடுகின்ற மனிதன் தான் உருவாக்குகின்ற பண்டங்களின் மீது தனக்கு உள்ள உறவு பற்றி சிந்திக்கும் போது, அது தனது வாழ்க்கைக்கு தொடர்பற்றதாக உள்ளதை உணர்ந்து கொள்கிறான். தனது வாழ்க்கை தேவைகளுக்காக உழைப்பில் ஈடுபடுகின்ற மனிதன் அதற்கு செலவழிக்கின்ற நேரமும், அவ்வாறு செலவழித்த பின்பு கிடைக்கின்ற கூலியின் மூலமாகவே அவனது உண்மையான வாழ்க்கை துவங்குகிறது.
அதாவது குடும்பம் மற்றும் தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான வாழ்க்கை தான் அவனது உண்மையான வாழ்க்கை என்பதால் அவனது மகிழ்ச்சி அப்போதுதான் உண்மையிலேயே துவங்குகிறது.
படிக்க:
♦ திராவிட இயக்கங்களை வலிந்து குறைகூறி வரும் கம்யூனிச சங்கிகளுக்கு அர்ப்பணம்!
♦ Modern Timesம் கம்யூனிஸ கோட்பாடும்
இதனால் உழைப்பின் மீது வெறுப்பு ஏற்பட்டு உழைப்பிலிருந்து அன்னியமாகிக் கொண்டே செல்கின்றான். உற்பத்தி சக்தியான மனிதன் தான் உருவாக்குகின்ற பண்டங்களின் மீதும், அதற்கு செலுத்துகின்ற உழைப்பு சக்தியின் மீதும் வெறுப்படைகின்ற சூழலை பற்றி முதன் முதலாக காரல் மார்க்ஸ் தான் ஆய்வு செய்தார். இதனை தான் அன்னியமாதல் என்கின்றார்.
இந்த அந்நியமாதல் நிகழ்ச்சி போக்கு முதலாளித்துவம் தனது உற்பத்தியை துவங்கிய காலகட்டத்தில் இருந்து படிப்படியாக அதிகரித்து அதிகரித்து ஏகாதிபத்திய முதலாளித்துவ காலகட்டத்தில் அவனுக்கு கொடும் துன்பமாக மாறியுள்ளது.
உற்பத்தியில் ஈடுபடுகின்ற போது மகிழ்ச்சியற்ற நிலைமையில் தொடர்ச்சியாக வேலை செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்ற மனிதன் படிப்படியாக மன உளைச்சல்களுக்கும், அழுத்தத்திற்கும் ஆளாகி மனநோயாளியாகவே மாறுகின்றான்.
கம்யூனிஸ்டுகளுக்கு மனநோய் எப்படி வரும் என்று அறிவியலுக்கு புறம்பாக தனது தத்துவ கண்டுபிடிப்பை வழங்கினார் ஒரு அரசியல் மேதை. நல்லவேளையாக கம்யூனிஸ்டுகளுக்கு மனம் என்று ஒன்று இருக்கக் கூடாது அது இருந்தால்தான் நல்லது-கெட்டது, விமர்சனம்-சுயவிமர்சனம், அதிகாரத்துவம்-அடிமைத்தனம் என்று பல அம்சங்களை பிரித்துப் பார்க்கின்ற சிக்கலை உருவாக்குகிறது. இதனால் மனம், மன நோய் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கக் கூடாது என்று’ஆய்வுசெய்து’, மனம் பற்றி தனது பரிணாம வளர்ச்சியை காட்டுவதற்கு முன்பாகவே மாண்டு போனார். இது ஒரு வகை மனநோயாகும்.
’நான் இதையெல்லாம் உருவாக்கினேன் என்பதால் அதை அழிப்பதற்கும், எனக்கு உரிமை இருக்கிறது” என்ற அளவிற்கு மனநோயின் உச்சகட்டத்தில் புரட்சிகர அமைப்புகளை பிளந்தார்கள் சிலர். ”என்னால் ஒன்றை பத்தாக்க முடியும் என்று கொக்கரித்தார்கள்” சிலர்.
அமைப்பே தனது வாழ்வு என்று வாழ்கின்ற பலரை போலீசுக்கும், சமூகத்தில் உள்ள கொடியவர்களுக்கும் ஆள்காட்டி வேலை செய்தார்கள் சிலர். அமைப்பில் செயல்பட்ட காலத்தில் தாங்கள் உருவாக்கிய படைப்புகளை புத்தகம் போட்டு விற்று தன்னை பாதுகாத்துக் கொண்டனர் சிலர்.
ஒரு குழுவிற்குள் நம்பிக்கையுடன் தோழர்களின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை அதற்கு மேலிருந்தும் கண்காணிக்கும் வாய்ப்பை பெற்ற காரணத்தினால் அவர்களின் குறைபாடுகள் மீது தனிப்பட்ட தாக்குதலை தொடுத்தார்கள் சிலர். இதன் மூலம் குறுக்கு வழியில் அதிகாரத்தை கைப்பற்றி ’பதவிப்பித்து’ என்ற தனது மனநோய்க்கு மருந்தை வழங்கிக் கொண்டனர். இது மற்றொரு வகை மனநோயாகும்.
இந்த மன நோயை தீர்ப்பதற்கு புற நிலைமையில் உள்ள சமூக காரணிகளை தீர்ப்பதற்கு பதிலாக மனநோய் மருத்துவம் செயற்கை நுண்ணறிவுத் திறன், மெஷின் லேர்னிங் மற்றும் டீப் லேர்னிங் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மனநோயின் தன்மைகளை ஆய்வு செய்கின்றது.
பிறகு அதற்கு மருத்துவம் என்ற பெயரில் பல்வேறு விதமான ரசாயன கலவைகளில் உருவாகின்ற மாத்திரைகளை விழுங்க செய்கிறது. ஏகாதிபத்திய முதலாளித்துவம் பெற்றெடுத்துள்ள மனநோயானது புதுப்புது வடிவங்களில் உருவெடுக்கின்ற காரணத்தினால் அதனை தீர்ப்பதற்கு புது புது வகையான மருத்துவர்களும் கவுன்சிலிங் முறைகளும் பல்லாயிரம் கோடி கல்லா கட்டுவதற்கு உதவுகிறது.
ஏகாதிபத்திய முதலாளித்துவம் நடத்துகின்ற உற்பத்தி முறை வேலையின்மை, வறுமை, பட்டினி, பசிக் கொடுமை, பலவிதமான நோய்கள் மட்டுமின்றி சமத்துவமற்ற, ஏற்றத்தாழ்வான நிலையை உருவாக்குவது மன நோய்க்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்பதால் இந்த ஏற்றத்தாழ்வை போக்காமல் தற்காலிகமாக மருந்து மாத்திரைகள் மூலமாக மன நோயின் தீவிரத்தை தடுக்கலாமே தவிர முற்றாக ஒழிக்க முடியாது.
- ஆல்பர்ட்