கிளாரா ஜெட்கின் 1910இல் சர்வதேச மகளிர் தினத்தை முதல்முறையாக அறிவித்தார். மார்ச் 8 ஏன் தேர்வானது? சர்வதேச மகளிர் தினத்துக்கான கிளாராவின் யோசனைக்கு நிலையான தேதி எதுவும் ஆரம்பத்தில் இருந்திருக்கவில்லை.

1917 இல் ரஷ்ய பெண்கள் “உணவும் அமைதியும்” என்ற பெயரில் புரட்சிப் போராட்டத்தை தொடங்கும் வரை இந்த தேதி இந்நாளில் தான் கொண்டாடப்பட வேண்டும் என்பது முறைப்படுத்தப்படவில்லை-அவர்களின் நான்கு நாட்கள் போராட்டம் ஜார் பதவி விலகும் கட்டாயத்தை தோன்றியது. மேலும், தற்காலிக அரசாங்கம் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியது.

ரஷ்யாவில் அப்போது பயன்பாட்டில் இருந்த ஜூலியன் நாட்காட்டியில் பெண்கள் வேலைநிறுத்தம் தொடங்கிய தேதி பிப்ரவரி 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இருந்தது. கிரிகோரியன் நாட்காட்டியில் இந்த நாள் மார்ச் எட்டாம் தேதியாக இருந்தது. அதுவே மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.

சர்வதேச மகளிர் தினம் தொழிலாளர் இயக்கத்தில் இருந்து வளர்ந்து ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட வருடாந்த தின நிகழ்வாக மாறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here