பெண்களுக்கான உரிமைகள் இதுவரை முழுமையாக கிடைக்கவில்லை! – மருத்துவர் அனுரத்னா

உலக மகளிர் தினத்தன்று பொன்னேரி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் தோழர் அனுரத்னாவை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில ஊடகப் பிரிவு செயலாளர் தோழர் சுதேஷ்குமார் அவர்கள் பேட்டி எடுத்துள்ளார்.

மருத்துவர் தோழர் அனுரத்னா அவர்கள் பற்றி சிறிய அறிமுகம். தோழர் அவர்கள் பொன்னேரி பகுதியில் உள்ள மக்களால் நேசிக்கப்படும் மக்கள் மருத்துவராக உள்ளார். தன்னலம் பாராமால் கொரோனா போன்ற நெருக்கடி காலத்திலும் மக்களுக்காக சேவையாற்றிய மக்கள் மருத்துவர்.

அரசு அவரை ஒருமுறை பொன்னேரி மருத்துவமனையில் இருந்து மாற்ற முயற்சித்த போது மக்களின் போராட்டத்தால் மீண்டும் அங்கேயே பணியமர்த்தப்பட்டார். மருத்துவமனைக்கு வரும் மக்களுக்கு மட்டுமல்லாமல் மருத்துவமனையில் பணிபுரியக் கூடிய ஊழியர்களின் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுக்கும் பண்புடையவர். இவரின் இந்த பண்புக்கு முக்கிய காரணம் அவர் ஒரு முற்போக்கு சிந்தனையாளர்.

இந்த உழைக்கும் மகளிர் தினத்தில் தோழர் மருத்துவர் அனுரத்னா அவர்கள் சமூகத்தில் பெண்களின் இன்றைய நிலை குறித்து பேசினால் சிறப்பாக இருக்கும் என பேட்டியெடுத்து அளித்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஊடகக் குழுவுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here