மீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் நடந்த ஒரு பேரணியில் கலந்து கொண்டு பேசிய மோடி,” இலவச கலாச்சாரத்தை (மஃப்ட் கி ரெவ்டி- இலவசமாக இனிப்பு வழங்குவது) ஊக்குவிப்பவர்கள், மக்களுக்கு இலவசங்களை வழங்குவதன் மூலம், அவர்களை வாங்கி விடலாம் என நினைக்கிறார்கள். இத்தகைய சிந்தனைப் போக்கை நாம் முறியடிக்க வேண்டும். நாட்டின் அரசியலில் இருந்து இலவச கலாச்சாரம் அகற்றப்பட வேண்டும். அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு இலவசங்களை அறிவிப்பது நாட்டின் வளர்ச்சிக்கும் நல்வாழ்வுக்கும் ஆபத்தான போக்கு” என முழங்கி இருக்கிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட பத்து லட்சம் கோடி அளவுக்கு ஊழல் தொழிலதிபர்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” – வருண் காந்தி 

இப்படியாக அவர் வாய்க் கொழுப்பாக பேசியதற்கு பதில் அளிக்கும் வகையில் அவரது சொந்த கட்சியை சேர்ந்த எம்பி- யான வருண் காந்தி,” கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட பத்து லட்சம் கோடி அளவுக்கு ஊழல் தொழிலதிபர்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என கூறி மோடியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வருண் காந்தி பிஜேபி

இன்னொருபுறம் அரசியல் ரீதியாகவும், நீதிமன்றத்திலும் விவாதமாக மாறி உள்ளது. உச்சநீதிமன்றமும் “பகுத்தறிவற்ற இலவசங்கள் கொடுப்பதாக வாக்குறுதி முக்கியமான பிரச்சினை? அது குறித்து மத்திய அரசு ஏன் இன்னும் முடிவெடுக்கவில்லை?” என கேள்வி எழுப்பியுள்ளது. இதனை விமர்சித்து ட்விட் செய்துள்ள தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் “அரசு அளிக்கும் இலவசங்களில் எது தேவையற்ற இலவசம்? எது அத்தியாவசியம் என யார் முடிவெடுப்பது? எது பகுத்தறிவு ரீதியானது இல்லை என யார் முடிவெடுப்பது? நீதிமன்றத்துக்கு இந்த அதிகாரம் எப்படி வந்தது” என்கிற பொருளில் கேள்வி எழுப்பியுள்ளார்.

2017 – 18 நிதியாண்டில் இருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட ‘மோசமான’ கடன்களின் (Bad debts) பட்டியலையும் வருண் காந்தி வெளியிட்டுள்ளார். ஆகஸ்ட் 2-ம் தேதி மாநிலங்களவையில் நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத் அளித்த பதிலின் அடிப்படையில் இப்பட்டியல் உள்ளது. இந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய வங்கிகள் மூலம் கிட்டத்தட்ட பத்து லட்சம் கோடி ரூபாய் வாராக் கடன் என தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்பி மல்லிகார்ஜுன கார்கேவின் கேள்விக்கு அளித்த பதிலில் அமைச்சர் இத்தகவலை தெரிவித்துள்ளார். அந்த நிதி அமைச்சகத்தின் தரவை மேற்கோள்காட்டி வருண் காந்தி தனது டிவிட்டில் தொழிலதிபர் முகுல் சோக்ஷி மற்றும் ரிஷி அகர்வால் போன்றோர் இலவச இனிப்பை (மஃப்ட் கி ரெவ்டி) எடுத்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர் என நக்கல் அடித்துள்ளார்.

அதேபோல், கடந்த இரண்டு (2019-20, 2020-21) ஆண்டுகளில் கார்ப்பரேட் வரி ரத்து மூலம் அரசுக்கு ரூ.1.6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இது அடுத்த ஆண்டில் மட்டும் ரூ. 1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்த இலவசம் – உச்சநீதிமன்றத்துக்கும் கார்ப்பரேட் காவலன் மோடிக்கும் பகுத்தறிவு பூர்வமானதாக. இருக்கக் கூடும்.

இலவச கலாச்சாரத்தை ஊக்கப்படுத்த கூடாது என மோடி பேசியதற்கு, “குடிமக்களுக்கு இலவச குடிநீர், மின்சாரம் மற்றும் சுகாதாரம் அளிப்பதை அவ்வாறாக கருதக்கூடாது” என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளித்துள்ளார். அரசாங்கத்தின் மானியங்கள் மூலமான நலத்திட்டங்கள் வழியாக தங்களது ஆதரவு தளத்தை கட்டி எழுப்பிய திமுக, ஆம் ஆத்மி போன்ற மாநில கட்சிகளை குறி வைத்துதான் பிரதமர் இப்படி பேசி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை வழங்குவதாலோ, பல லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்வதாலோ நாட்டின் வளர்ச்சி பாதிப்படையாது, ஆனால் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது நாட்டிற்கு ஆபத்தானது என்று மோடி கூச்சலிடுவதில் இருந்தே அவர் ஏழை, எளிய மக்களின் எதிரி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறார்.

செய்தி ஆதாரம்:

https://scroll.in/latest/1029898/bad-loans-of-rs-10-lakh-crore-been-written-off-as-muft-ki-revdi-varun-gandhis-dig-at-modi

https://m.tribuneindia.com/news/business/corporate-tax-cut-lowers-tax-intake-by-rs-1-84-lakh-crore-in-2-years-421076.

ஆக்கம்: குரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here