ஜிஎஸ்டி வரியை ரத்து செய்! கார்ப்பரேட்டுகளுக்கு அதிக வரி விதித்து பொருளாதாரத்தை ஈட்டு!

நாட்டை ஆளும் பாஜக உணவுப் பொருள்கள் தயிர், பால், சமையல் எண்ணெய் அரிசி ஊறுகாய் உள்ளிட்ட அனைத்தின் மீதும் ஜிஎஸ்டி வரியை திணித்து அதன் விலையை உயர்த்தி வயிற்றில் அடிக்கிறது.

ஜிஎஸ்டி வரியை ரத்து செய்! கார்ப்பரேட்டுகளுக்கு அதிக வரி விதித்து பொருளாதாரத்தை ஈட்டு!


ந்தியா ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி சிறு குறு தொழில்களை ஒழித்துக் கட்டி கார்ப்பரேட்டுகள் கையில் தொழில் நடத்துவது, உற்பத்தி நடத்துவது, துணைத் தொழில்கள் நடத்துவது என அனைத்தையும் ஒப்படைக்கிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு தொழிலாக கருதப்படும் தொழில்கள் அனைத்தும் ஜிஎஸ்டி வரியால் முடங்கி கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஜிஎஸ்டி வரி விதிப்பால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.

கர்நாடகாவில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மென்பொருள் தயாரிப்பு, குஜராத்தில் ஜவுளி ஆலைகள், ஆந்திராவில் அரிசி உற்பத்தியாளர்கள் போன்ற அனைவரும் இந்த ஜிஎஸ்டி வரியினால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.

இந்தியாவில் உள்ள உழைக்கும் மக்களுக்கு பெருமளவில் வேலை வாய்ப்பு அளிக்கின்ற நிறுவனங்கள் இல்லாத சூழலில் சிறு குறு தொழில்கள் மூலமாக பல கோடிக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பை பெறுகின்றனர். அப்படிப்பட்டவர்களின் வேலை வாய்ப்பையும் பறிக்கிறது ஜிஎஸ்டி. மற்றொருபுறம் வேலை வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால், வறுமைக்கும், பசி பட்டினிக்கும் தள்ளுகிறது பாரதிய ஜனதா கட்சி.

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் கொடூரமாக தலை விரித்து ஆடுகிறது. சராசரியாக ரூபாய் 8500 வருமானத்தில் குடும்பத்தை ஓட்ட வேண்டிய கட்டாயத்திற்கு நகர்புறத்தில் உள்ள தொழிலாளி வர்க்கம் தள்ளப்பட்டுள்ளது. பல தொழிற்சாலைகளில் சம்பள உயர்வு என்று கோரிக்கைக்கு பதிலாக வேலை நேரம் அதிகரிப்பு, சம்பளக் குறைப்பு, உற்பத்தி திறன் என்ற பெயரில் கடுமையாக தொழிலாளர்களை கசக்கி பிழிவது என்ற நிலைமையே நீடிக்கிறது.

இத்தகைய சூழலில் தான் அதானி உலகத்தில் நான்காவது பணக்காரராக முன்னேறி உள்ளார். நாட்டின் செல்வ வளத்தை கார்ப்பரேட்டுகள் கொள்ளை அடிக்க தாராளமாக அனுமதி வழங்கி உள்ள பாரதிய ஜனதா கட்சி ‘தேசபக்தி’ என்று பேசுவது பித்தலாட்டமாகும். அந்தக் கட்சியை நம்பி வாதம் புரிபவர்கள் தனது வாயில் தானே வாய்க்கரிசி போட்டுக் கொள்கிறார்கள் என்பது தான் நிதர்சனம்.

படிக்க:

எச்சரிக்கை – விலை உயர்வது பெட்ரோல், டீசல் மட்டுமல்ல!

ஒரு ஜி.எஸ்.டி அதிகாரியின் அனுபவம்!

பெரும்பான்மை மக்கள் வறுமை, வேலையின்மை, பட்டினி என்று கொடுமைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் சூழலில் கூட நாட்டை கொள்ளை அடிக்கும் கார்ப்பரேட்டுகளின் மீது வரியை விதிப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி தயங்குகிறது. அவர்கள் மனம் கோணக் கூடாது என்பதிலேயே குறியாக இருக்கிறது. ஆனால் கார்ப்பரேட்டுகளின் கூலியில் அண்ணாமலைகள் குதிக்கின்றனர்.

நாட்டை ஆளும் பாஜக உணவுப் பொருள்கள் தயிர், பால், சமையல் எண்ணெய் அரிசி ஊறுகாய் உள்ளிட்ட அனைத்தின் மீதும் ஜிஎஸ்டி வரியை திணித்து அதன் விலையை உயர்த்தி வயிற்றில் அடிக்கிறது.

இந்த கேடுகெட்ட செயலை நியாயப்படுத்தும் நிர்மலா மாமி பாராளுமன்றத்தில் பிற கட்சியினரை கடுமையாக விமர்சிப்பதும், ரவுடித்தனமாக ‘நான் சொல்வதைக் கேள்’ என்று மிரட்டுவதும் அன்றாட நிகழ்வுகள் ஆகி வருகிறது. பாசிச கும்பலுக்கு நாடாளுமன்றம், சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகம் போன்றவை எப்போதும் கசப்பானவை தான்.

எனினும் பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி சட்டபூர்வமான வழிகளில் பாசிசத்தை நிலை நிறுத்துவதற்கு பாஜக எத்தனித்து கொண்டுள்ளது.

பாசிச பாஜகவை பிற கட்சிகளில் ஒன்றாக நினைத்து ஜனநாயக வழியில் வீழ்த்துவதற்கு போராடுவது அப்பாவித்தனமாகும். பாசிஸ்டுகளுக்கு உரிய மொழியில் அவர்களுக்கு எதிராக போராடுவதே நிரந்தரமான தீர்வாக அமையும்.

உடனடி தீர்வாக “கார்ப்பரேட்டுகள் மீது வரியை போடு! ஜிஎஸ்டி வரியை ரத்து செய்”! என்ற முழக்கம் நாடு முழுவதும் எதிரொலிக்கட்டும்.

தமிழகம் கார்ப்பரேட் – காவி பாசிச  எதிர்ப்பில் முன்னணியில் நின்று வழிகாட்டுவோம்.

  • திருச்செங்கோடன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here