ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்த பின்பு ஆலைக்கு உள்ளே உள்ள கழிவுகளையும், வேதிப் பொருட்களையும் அகற்றுவதற்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையானது உயர் மட்ட கமிட்டியை G.0. No: 83, தேதி:21-06-2018 மூலம் அமைத்து அதன் அடிப்படையில் உயர்மட்ட கமிட்டி ஆய்வு செய்து 11வகையான கழிவுகள் , வேதிப்பொருட்களை குறிப்பிட்ட நாட்களில் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள உள்ளூர் மட்ட கண்காணிப்பு கமிட்டி (LLMC) உருவாக்கப்பட்டு அதிகபட்சமாக 90 நாட்களுக்குள் முடிக்கவும், 250 நபர்கள் ஆலைக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக மேற்கண்ட பணியாளர்கள், நிறுவன ஊழியர்கள், ஆலை அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலைக்கு செல்கின்றனர்.
அப்போதைய ஆட்சித்தலைவர் திரு.சந்திப் நந்தூரி அவர்கள் ஸ்டெர்லைட்டின் கழிவுகள், வேதிப்பொருட்கள் பெரும்பாலும் 100 சதவீதமும், சில கழிவுகள் மட்டும் மீதம் இருப்பதாகவும், அவையும் சிறிது நாட்களில் முற்றிலும் அகற்றப்பட்டு விடும் என்றும் 2018ல் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் பத்திரிக்கை செய்தி வாயிலாக அறிவித்தார்.
பணியாளர்கள் தற்போது வரை சென்று வருவதற்கு எவ்வித உரிய அனுமதியும் இல்லை என்ற மேற்கண்ட தகவல் எமது கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் அரி ராகவன் அவர்களுக்கு வழங்கப்பட்ட RTI பதிலில் தெளிவாக தெரிகிறது. ஆலைக்குள் பணியாளர்கள் சென்று வருவது மாவட்ட நிர்வாகத்தின் மீது மிகப்பெரிய சந்தேகத்தையும், பராமரிப்பு பணிகள் உட்பட ஆலையை மீண்டும் இயக்குவதற்கான அனைத்து பணிகளும் மேற்கொள்வதற்காக தான் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் செல்கிறார்கள் என்ற எண்ணத்தையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
மேற்படி 2018ல் கொடுத்த 90 நாட்கள் அனுமதியை வைத்துக் கொண்டு தற்போது வரை ஸ்டெர்லைட் நிறுவனம் பணியை மேற்கொள்வது சட்டவிரோதம். இதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அனைவரும் உடந்தையாக உள்ளனர். அரசு அதிகாரிகள் ஸ்டெர்லைட் நிறுவனத்தோடு நயவஞ்சக கூட்டு சேர்ந்து சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக இருக்கின்றனர்.
எனவே தாங்கள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.